என் மலர்
இந்தியா

கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை.. காரணம் இதுதான்
- பல பிரபலங்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது.
- இது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது என்று ED குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகள் குறித்து விசாரித்து வரும் ED இதுதொடர்பாக இந்நிறுவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் செயலிகளை விளம்பரப்படுத்திய பல பிரபலங்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது.
பணமோசடி மற்றும் ஹவாலா போன்ற கடுமையான நிதி குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ள சூழ்நிலையில் கூகிள் மற்றும் மெட்டா இரண்டும் சூதாட்ட செயலிகளை ஊக்குவிப்பதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் வலைத்தளங்களில் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களைக் ப்ரோமோட் செய்து வருகின்றன. இது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது என்று ED குற்றம் சாட்டியுள்ளது.
Next Story






