என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whats app"

    • இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளம்பரங்கள் வருவதை போல் வாட்ஸ் அப் செயலியிலும் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது விளம்பரங்களை வெளியிட மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

    வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் விரைவில் Subscription-னை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு பிடித்த சேனலில் வரும் பிரத்யேக தகவல்களை பணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றிப் பகிரும் அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது.

    மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,

    வாட்ஸ்அப் சேனலில் POLL ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிடும் அப்டேட்டையும் மெட்டா வழங்கியுள்ளது.

    • WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
    • வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

    உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2009ம் ஆண்டில் ஜான் கூம் (Jan Koum) மற்றும் பிரையன் ஆக்டன் (Brian Acton) ஆகியோரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பரிணாம வளர்ச்சியை அடைந்தது.

    வாட்ஸ் அப்-ல் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.

    இதனால், 2013ம் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனாளர்களை கடந்தது. பின்னர், 2014-ல், Meta (அப்போது Facebook) நிறுவனம், வாட்ஸ் அப்-ஐ 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

    அதன்பிறகு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், குழு வீடியோ கால், வாட்ஸ் அப் பிசினஸ், க்யூ ஆர் குறியீடு உள்ளிட்ட வசதிகளை அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டது.

    2023-2024ம் ஆண்டுகளில், சேனல்ஸ், மல்டி-டிவைஸ் ஆதரவு (Linked Devices), AI-ஆல் இயங்கும் அரட்டை அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆனால், இவ்வளவு அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.

    அதாவது, வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. iPad-க்கு தனியாக உகந்த (optimized) பதிப்பு இல்லாததால், வாட்ஸ் அப் செயலி அதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.

    App Store-ல் கிடைக்கும் WhatsApp ஆனது iPhone பதிப்பாகவே இயங்கும். இதனால் iPad-ன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாட்ஸ் அப் வெப் மூலமாகவே iPad-ல் பயனாளர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வந்தனர்.

    மேலும், WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.

    இந்த நிலையில், iPad-லும் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை iPad-ல் website சென்றே வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி மொபைலில் இருப்பதை போல ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்.

    நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர்.
    • பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் இதே போன்ற சிக்கல்களைப் புகாரளித்தனர்.

    உலகின் பிரபல நிறுவனமான மெட்டா பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கம் மற்றும் ஆப்களை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சேவை இன்று இந்தியாவில் முடங்கியது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலி மூலம் தகவல்களை அனுப்பவோ அல்லது நிலைகளைப் பதிவேற்றவோ முடியாமல் போனது.

    இதைதொடர்ந்து, பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர்.

    இதுகுறித்து நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர் கூறுகையில், "கிட்டத்தட்ட 81% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் 16% பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்தனர்" என்று தெரிவித்தது.

    இதுதொடர்பாக, வாட்ஸ் அப் செயலிழப்பிற்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

    இருப்பினும், மெட்டாவுக்குச் சொந்தமான தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் இதே போன்ற சிக்கல்களைப் புகாரளித்தனர். இது மெட்டாவின் சேவைகள் முழுவதும் ஏற்பட்ட தொழில்நுட்ப காட்டுகிறது.

    முன்னதாக, இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கின. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியாமல் போனதாக புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில் UPI செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதில், "NPCI தற்சமயம் அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்கு இது குறித்து தொடர்ந்து அறிவிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸில் பாடல்களை வைக்கும் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

    • ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.
    • Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.

    இதன்மூலம், Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப்பில் ஏற்கனவே ஸ்விட்ச் அக்கவுண்ட் என்கிற ஆப்ஷன் உள்ளது. அதில் நுழைவதன் மூலம் மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்டுக்குள் நுழைய முடியும்.

    ஆனால் இது இன்ஸ்டாவில் வருவது போன்று ஒரே வாட்ஸ் அப் கணக்கின் மூலம் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சமாக விரைவில் வர இருக்கிறது.

    தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Congress #PChidambaram
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    இதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    தேர்தல் அறிக்கையில் எத்தகைய அம்சங்களை இடம் பெற செய்வது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக ப.சிதம்பரம் மாநில தலைவர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

    இது தவிர தேர்தல் அறிக்கை பொதுமக்களை மிக அதிக அளவில் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடமும் இது தொடர்பாக யோசனை பெறுவதற்கு ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எளிதாக அனுப்புவதற்கு வசதியாக காங்கிரஸ் சார்பில் வாட்ஸ்அப் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 72920 88245 என்ற எண் மூலம் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். #Congress #PChidambaram 
    ×