அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்து- அ.ம.மு.க. நிர்வாகி கைது

வாட்ஸ்-அப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு கருத்து பரப்பிய அ.ம.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்து- அ.ம.மு.க. நிர்வாகி கைது
Published on

விருதுநகர்:

கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து அவதூறு செய்து பரவியது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன் சிவகாசி கிழக்குபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அமைச்சர் குறித்து அவதூறு கருத்து பரப்பியது திருத்தங்கல் நகர அ.ம.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முனியசாமி (வயது35) என தெரியவந்தது.

இவர் தனது வாட்ஸ்-அப் மூலம் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். இதையடுத்து போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com