அப்டேட்களை வாரி வழங்கும் வாட்ஸ்அப் - வீடியோக்களை அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றி பகிரலாம்

இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அப்டேட்களை வாரி வழங்கும் வாட்ஸ்அப் - வீடியோக்களை அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றி பகிரலாம்
Published on: 

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றிப் பகிரும் அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது.

மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,

வாட்ஸ்அப் சேனலில் POLL ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிடும் அப்டேட்டையும் மெட்டா வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com