என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம்"

    • பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
    • தனது சர்வதேச சகாக்களை விட குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரிய டிஜிட்டல் மைல்கல்லைக் கடந்து, இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்கிற சாதனையை படைத்துள்ளார்.

    பிரதமர் மோடி கடந்த 2014-ல் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். கடந்த பத்தாண்டுகளில் அவரது கணக்கு சீராக வளர்ந்து, உலகில் அதிகம் பின்தொடரப்படும் கணக்காக உருவெடுத்துள்ளது.

    இந்த தளம் அதிகாரப்பூர்வ ஈடுபாடுகள், சர்வதேச வருகைகள், பொது தொடர்பு முயற்சிகள், கலாச்சார தருணங்கள் மற்றும் தனிப்பட்ட பிரதிபலிப்புகளின் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது, இது பரந்த மற்றும் மாறுபட்ட பார்வையாளர்களுடன் இணைக்க அவருக்கு உதவுகிறது.

    இந்த சாதனையின் மூலம், பிரதமர் மோடி இப்போது இன்ஸ்டாகிராமில் உலகத் தலைவர்களில் முதலிடத்தில் உள்ளார். தனது சர்வதேச சகாக்களை விட குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கிறார்.

    பிரதமரின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

    இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் 11.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

    • இன்ஸ்டாவில் தற்போது ஒரு புதிய க்யூட் வீடியோவை பிரபு தேவா வெளியிட்டுள்ளார்.
    • இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று ரீல்ஸ் வெளியிட்டு 2 சிறுவர்கள் வைரலானார்கள்

    நடிகர் பிரபு தேவா அவ்வப்போது சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் இன்ஸ்டாவில் தற்போது ஒரு புதிய க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று ரீல்ஸ் வெளியிட்டு வைரலாக 2 சிறுவர்களை அழைத்து அவர்களுடன் பிரபு தேவா நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "ரெண்டே பேருக்குதான் போட்டியே... ஒன்னு இன்ஸ்டா தேவா இன்னொன்னு பிரபு தேவா என்று ஜாலியாக சிறுவர்கள் பேசுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.

    • வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.

    கொடைக்கானல்:

    சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே
    • தியானம் செய்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று நினைத்தால், அது செய்தாலும் எதுவும் தோணவில்லை.

    ஆர்.ஜே.வாக பணியாற்றி, பின் யூடியூப் சேனல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் ஷா ரா. 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் மற்றும் மீசைய முறுக்கு ஆகிய திரைப்படங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கோமாளி, நான் சிரித்தால், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான தணல் படத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில்,

    "4 மணிக்கு தூக்கம் வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். இப்போது படம் பேசுபவர்கள் எல்லாம் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு ஃபாலோவர்ஸ் (பின்தொடர்பவர்கள்) இருக்கிறார்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதை பார்த்துதான் சம்பளம் பேசுகிறார்கள். இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே. எனக்கு கூந்தல் கிடையாது, மொழு மொழு கன்னங்கள் கிடையாது. முகம் முழுவதும் தாடி, அதுவும் நரைத்து போயுள்ளது.

    நெஞ்சில் முழுவதும் முடி. எனக்கு ரீல்ஸ் பண்ணவும் பிடிக்காது. என்ன செய்து இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பது என்று தெரியாமல், தூக்கம் வராமல், தியானம் செய்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று நினைத்தால், அது செய்தாலும் எதுவும் தோணவில்லை. இது என் மூளைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

    ஃபாலோவர்ஸை ஏற்றுவதற்கு என்னிடம் கவர்ச்சி இல்லையே. நான் என்ன செய்வேன், எதாவது ஐடியா இருந்தால் கீழே (comment-ல்) சொல்லுங்கள்". என பேசியுள்ளார்.

    இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் திறமையான நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   

    ×