search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milestone"

    • இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    இந்திய மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

    நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'யு' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில்

    நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • இதுவரை உலகில் எந்த நாடும் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை தொட்டதில்லை
    • இந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மிக அதிகமான உயர்வை கண்டிருக்கின்றன

    கடந்த ஜூலை 14 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான்-3 விண்கலம்.

    இஸ்ரோ திட்டமிட்டபடி, இதன் லேண்டர் இன்று நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கியது.

    இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியிருந்தாலும் இதுவரை உலகில் எந்த நாடும் செய்து காட்டாத முயற்சியாக நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

    விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 விண்கல உருவாக்கத்தில் பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

    அவற்றில் சில முக்கிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள்:

    1) எல் அண்ட் டி - விண்கலத்தின் முக்கியமான பூஸ்டர் பகுதிகளில் தலைப்பகுதி, இடைப்பகுதி மற்றும் முனையிலுள்ள பக்கெட் ஃப்லாஞ்ச் ஆகியவற்றை இந்நிறுவனம் உருவாக்க உதவியது.

    2) மிஸ்ர தாது நிகம் - அரசுடைமையான இந்நிறுவனம் முக்கியமான உலோகங்களையும், பிரத்யேக எக்கு பாகங்களையும் வழங்கியது.

    3) பாரத் கனரக மின்பொருள் நிறுவனம் (BHEL) - விண்கலத்திற்கான பேட்டரியை இந்நிறுவனம் தயாரித்து வழங்கியது. இதன் துணை நிறுவனமான வெல்டிங் ரிஸர்ச் மையம் அடாப்டர் கருவிகளை வழங்கியது.

    4) எம்டார் டெக்னாலஜிஸ் - விண்கலத்தின் இஞ்சின் மற்றும் பூஸ்டர் பம்ப்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

    5) கோட்ரெஜ் ஏரோ ஸ்பேஸ் - கோட்ரெஜ் குழுமத்தின் துணை நிறுவனமான இந்நிறுவனம், த்ரஸ்டர்கள் எனப்படும் முக்கிய பாகங்களை உருவாக்கி வழங்கியது.

    6) அன்கிட் ஏரோ ஸ்பேஸ் - கலவை எக்குகள், எக்கு உதிரி பாகங்கள் மற்றும் டைட்டேனியம் போல்ட்களை இந்நிறவனம் உருவாக்கி தந்தது.

    7) வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ் - ஏவுகணையில் உபயோகப்படுத்தப்பட்ட S200 எனும் முக்கிய பூஸ்டர் மற்றும் ஃப்ளெக்ஸ் நாஸில் கட்டுப்பாட்டு சாதனங்கள் உட்பட முக்கிய பாகங்களை இந்நிறுவனம் வழங்கியது.

    கடந்த 3 வருடங்களில் சந்திரயான்-3 திட்டத்தில் இணைந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

    அவற்றில் சில நிறுவனங்களின் பங்கு உயர்வு குறித்த விவரங்கள்:

    1) எல் அண்ட் டி - 170 சதவீதம்

    2) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் - 200 சதவீதம்

    3) பாரத் கனரக மின்பொருள் நிறுவனம் - 172 சதவீதம்

    4) மிஸ்ர தாது நிகம் - 83 சதவீதம்

    5) வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ் - 66 சதவீதம்

    6) ஸெண்டம் எலக்ட்ரானிக்ஸ் - 300 சதவீதம்

    7) லிண்டே இந்தியா - 1000 சதவீதம்

    8) எம்டார் டெக்னாலஜிஸ் - 41 சதவீதம்

    9) கோட்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் - 15 சதவீதம்

    மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக, மிக பெரும் பொருட்செலவில் வல்லரசு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா, மிக குறைந்த செலவிலேயே இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ளது.

    சந்திரயான்-3 திட்டத்திற்கான மொத்த செலவு:

    1) ஏவுகணை - ரூ.365 கோடி

    2) லேண்டர் மற்றும் ரோவர் - ரூ.250 கோடி

    மொத்த செலவு - ரூ.615 கோடி

    2008ல் நடத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கல முயற்சிக்கு ரூ.365 கோடி என்பதும், 2019ல் நடத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கல முயற்சிக்கு ரூ.978 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வல்லரசு நாடுகளால் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியும் என நம்பப்பட்டு வந்த நிலையில், உலகமே வியக்கும்படி இந்தியா இந்த சாதனையை புரிந்துள்ளது.

    • மைல் கல்லுக்கு நள்ளிரவில் பூஜை நடந்துள்ளது.
    • மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார்.

    திருமங்கலம்

    ஆயுதபூஜையன்று வழக்கமாக டிவி, பிரிட்ஜ், வாக னங்கள் மற்றும் தொழி லுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், தொழிற் சாலை களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். ஆனால் திரு மங்கலம் பகுதியில் வினோத மாக மைல்கல்லுக்கு பூஜை நடத்தியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:-

    திருமங்கலம் புதுப்பட்டி யில் இருந்து நாகையாபுரம் செல்லும் சாலையில் அப்ப கரை பகுதியில் உள்ள தொலைவு கல்லுக்கு (மைல் கல்லுக்கு) மாலை அணி வித்து வாழைமரம் கட்டி வாழை இலை படையிட்டு பொங்கல் வைத்து நேற்று நள்ளிரவில் பூஜை செய்து உள்ளனர்.

    மேலும் 7 சிறிய கல்லுக்கும் பூஜை போட்டுள்ளனர் இது பொதுமக்களை ஆச்சரி யத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இதனை வினோதத்தை அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில் திருமங்கலம் பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    • நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையத்தில், மினி டைடல் பார்க் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திலுள்ள இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, முதல்கட்டமாக திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.இந்த பூங்காக்கள் செயல்பட துவங்கும்போது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, அவர்களது சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். முதல்வரின் தொலைநோக்குப்பார்வையில்இது மைல் கல்லாக அமையும் என்றார். 

    ×