என் மலர்
நீங்கள் தேடியது "Achievement"
- சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
- இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் H வினோத் கலந்துகொண்டார்.
கண்களை கட்டிக்கொண்டு 64 அம்புகளை எய்து 7 வயது சிறுவன் சித்தார்த் இரட்டை சாதனை படைத்துள்ளார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகங்களில் அங்கீகாரம் பெறுள்ளார்.
சென்னை நந்தனம் YMCA உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் உள்ள வில்வித்தை மைதானத்தில், 7 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு, காம்பவுண்ட் வில் மூலமாக 7 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி, அம்புகளை எரியும் சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் அங்கீகாரம் பெறும் வகையிலான இந்த சாதனை நிகழ்ச்சியில் 7 வயதே நிரம்பிய சித்தார்த் பன்னீர் எனும் சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
குறிப்பாக இந்தியாவில் முதன்முதலாக தயாரிக்கபட்டுள்ள காம்பவுண்ட் வில் மூலமாக சிறுவன் சித்தார்த் அம்புகளை எறிந்ததும், இதற்கு முன்னதாக கண்களை கட்டிக்கொண்டு இந்த சாதனையை யாரும் முயற்சி செய்ததில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சித்தார்த்தின் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள், சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் H வினோத், இரா சரவணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.
இதுகுறித்து பேசிய சித்தார்த்தின் தந்தை கரிகாலன், "எனது மகனை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைப்பதே இலக்கு என்றும், இந்த இரட்டை சாதனைகள் புரிந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
- 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.
- எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட கானபரோ லூகாஸ் காலமானார்.
கானபரோ ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுலில் பிறந்தார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக கேசெரோஸில் உள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் (ஏப்ரல் 30) உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கானபரோ லூகாஸின் மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
- போட்டியில் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.
- வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் பாராட்டினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 2 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.
- தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் நடந்தது.
- இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பெ றப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
புதுச்சேரி:
தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் நடந்தது. இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பெ றப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதில்
தேர்வு செய்யப்பட்ட 50 குழுக்களுக்கு 24 மணி நேரத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு 6 குழுக்கள்
தேர்வு செய்யப்பட்டன 15 நிபுணர்கள் குழுவினர் சிறந்த திட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும் சமர்ப்பித்த மாணவர்களை தேர்வு செய்தனர்.
இதில் மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை யில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர் சுபாஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார். இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவருக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெ ங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமி டீன்கள் அன்புமலர், அறிவழகர், சி.எஸ்.பி.எஸ். துறை தலைவர் தனபாக்கியம், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுதுறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் சுபாஷ்ராஜை பாராட்டினர்.
- மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
- அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.
இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.
இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.
அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.
அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.
தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.
- தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றமகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
உடுமலை :
தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் படித்து வரும் ஜி.வைஷாலி (முதலாம் ஆண்டு மாணவி) 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், மேலும் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.
இந்நிலையில் கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகா் மஞ்சுளா, முதல்வா் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநா் பா.சுஜாதா மற்றும் பேராசிரியா்கள் மாணவியை பாராட்டினா்.
- தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா.
- அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது.விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஊதியூரை அடுத்துள்ள தாயம்பாளையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா கலந்துகொண்டு, மாநில அளவில் 3 ம் இடம் பிடித்துள்ளாா்.வெற்றிபெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா்தண்டபாணி, ஓவிய ஆசிரியா் ரவி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்சார்பாக மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா திருப்பூரில்நடைபெற்றது.
- மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார் .
பெருமாநல்லூர் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்சார்பாக மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா திருப்பூரில்நடைபெற்றது . இதில் வாய்ப்பாட்டுஇசை, கருவி இசை, நடனம், காட்சி, கலை, உள்ளுர் தொன்மை பொம்மைகள் மற்றும் நாடகம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் ஒவ்வொன்றிலும் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார் .
அவரை பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன்,தாளாளர் பாலசுப்பிரமணியம்,பொருளாளர் சந்திரசேகர், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி,ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகஊழியர்கள் ஆகியோர் பாராட்டினர் . இத்தகவலை பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
- 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார்.
- மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு.
பல்லடம் :
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(வயது 38)என்ற வீராங்கனை 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார். இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறியதாவது:- மதுரை அவனியாபுரம் எனது சொந்த ஊர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் கணவர் விஜய் உடன் வசித்து வருகிறேன். சிறு வயதில் பளு தூக்கும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பின்னர் திருமணம் நடைபெற்றது. 12 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் எனது பளுதூக்கும் ஆர்வத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஊக்குவித்தார். சென்ற வருடம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இதையடுத்து தற்போது மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல ஆண்கள் பளு தூக்கும் போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் தாராபுரத்தை சேர்ந்த கார் வேந்தன்(28) என்பவர் முதல் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்லாமியா பள்ளி மாணவ- மாணவிகள் கராத்தே, சிலம்பம் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
- இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
கீழக்கரை
சென்னை நீலாங்கரையில் உள்ள புத்தாக்க மையத்தில் 46-வது தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 7-வது வகுப்பு மாணவி ஹர்ஷிகா சாதனா, 8-வது வகுப்பு மாணவி ஹேமா வர்ஷினி, ஹேமா வர்ஷினி ஆகியோர் கட்டா பிரிவில் 2-வது இடமும், கும்தே பிரிவில் 3-வது இடமும் பெற்று சாதனை படைத்தனர். இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்
பரமக்குடியில் நடை பெற்ற தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, 10-ம் வகுப்பு மாணவன் கதிர்வேல் தென்னிந்திய அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 3-ம் இடமும் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் மோஹித் மாவட்ட அளவில் (அடிமுறை) 2-ம் இடமும் பெற்றனர்.
மேலும் தென்னிந்திய அளவில் 13 வயதுக்கு உட்பட்டோர் (ஒத்த கம்பு) பிரிவில் 6- வகுப்பு மாண வன் சக்தி வீர கணபதி தென்னிந்திய அளவில் முதல் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றார்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது.
- 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.
பல்லடம்,நவ.29-
தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட கழகம், திருப்பூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற காரணம்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.
இதுகுறித்து மதுமிதாவின் தந்தையான பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா் மதிவாணன் கூறியதாவது:-எனது மகளுக்கு சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது. இதன் காரணமாகவே தொடா் பயிற்சி மேற்கொண்டதால் மாவட்ட அளவிலான போட்டியில் தொடா்ந்து 5வது ஆண்டாக தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். மேலும், கடந்த 2021ம் ஆண்டு பொங்கலூரில் நடைபெற்ற மாநில அளவிலான தனித்திறமை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளாா் என்றாா். தங்கம் வென்ற மாணவியை பயிற்சியாளா், பெற்றோா் மற்றும் உறவினா்கள் வெகுவாக பாராட்டினா்.
- பிரதமரின் கல்வி திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற்றது.
- ஸ்ரீஜெயந்திரா பள்ளி மாணவி மனோன்மணி மாநில அளவில் 24-வது இடத்தையும், தனுசியா 50-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
சுரண்டை:
தேசிய அளவில் நடைபெற்ற பிரதமரின் கல்வி திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற்றது.இத்தேர்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 232 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சுரண்டை ஸ்ரீஜெயந்திரா பள்ளியில் பயிலும் மனோன்மணி என்ற மாணவி மாநில அளவில் 24-வது இடத்தையும், தனுசியா என்ற மாணவி மாநில அளவில் 50-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளை டிரஸ்டி, தாளாளர்,முதல்வர் ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.






