search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sylamba"

    • சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது.
    • 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

    பல்லடம்,நவ.29-

    தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட கழகம், திருப்பூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற காரணம்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

    இதுகுறித்து மதுமிதாவின் தந்தையான பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா் மதிவாணன் கூறியதாவது:-எனது மகளுக்கு சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது. இதன் காரணமாகவே தொடா் பயிற்சி மேற்கொண்டதால் மாவட்ட அளவிலான போட்டியில் தொடா்ந்து 5வது ஆண்டாக தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். மேலும், கடந்த 2021ம் ஆண்டு பொங்கலூரில் நடைபெற்ற மாநில அளவிலான தனித்திறமை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளாா் என்றாா். தங்கம் வென்ற மாணவியை பயிற்சியாளா், பெற்றோா் மற்றும் உறவினா்கள் வெகுவாக பாராட்டினா்.

    ×