என் மலர்
நீங்கள் தேடியது "girl"
- லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- தன் கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் லாரி மோதி, ஸ்கூட்டியில் தாயுடன் சென்ற சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தினார்.
- சிறுமியின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வியாழக்கிழமை அதிகாலையில், பரபரப்பான ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தீபக் வர்மா என்பவர் கடத்திச் சென்றார்.
அதிகாலையில் எழுந்த குடும்பத்தினர் சிறுமியைக் காணாததால் கவலையடைந்தனர். பின்னர், ஒரு வழிப்போக்கர் சிறுமி கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பலத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். சிறுமி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீஸ் ஐந்து சிறப்பு குழுக்களை அமைத்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி தீபக் வர்மா அடையாளம் காணப்பட்டார்.
தீபக் இருக்குமிடைமறிந்து அங்கு சென்ற போலீஸ் சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது தீபக் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டில் வர்மா பலத்த காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
- 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார்.
- பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார். அப்போது கடைக்காரர் அருகில் இருந்த பெண் உடனடியாக தலையிட்டு சிறுமியைதடுக்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக பேசிய கடைக்காரரின் சகோதரர் தேவ் சைனி, "அந்தப் சிறுமி அடிக்கடி எங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் திருப்பி தருவாள். இந்த முறை நாங்கள் ஏற்கனவே அவளிடம் விற்ற பொருட்களை திருப்பித் தரவோ மாற்றவோ மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அவள் மீண்டும் பொருட்களை திருப்பி வாங்கி கொள்ளுமாறு எங்கள் கடைக்கு வந்தாள். எங்களை பிளேடால் தாங்குவேன் என்று மிரட்டினாள்.
கடைசியாக நாங்கள் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவளுடைய பணத்தைத் திருப்பி கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு, திடீரென்று அங்கே நின்று கொண்டிருந்த என் சகோதரனைத் தாக்கினாள். உடனடியாக அந்த சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்" என்று தெரிவித்தார்.
பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு 'விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து போலீசாரிடம் புகார் அளித்த பின்பு இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள். காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார்.
சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தார்.
- சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்றான்.
- சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.
தெலுங்கானாவில் ஓடும் ரெயில் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் ரயில்வே காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரெயிலிலில் சென்றுகொண்டிருந்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தெலுங்கானாவில் ரெயில் வந்துகொண்டுருந்தபோது சிறுமி கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்று உள்ளே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.
சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.
இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞனிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.
அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- பைக் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.
இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தி (வயது 43).
- முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி (வயது 43).
இவர் அதே பகுதியை சேர்ந்த டிசோசா மோசஸ், மற்றும் அவரது மனைவி ஏஞ்சல் தெரசா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் சீட்டு போட்டனர். முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வசந்தி எடமலைப்பட்டி புதூர் போலீசில்புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இரண்டு பேரையும் கைது செய்தனர்.
- முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் - பவதாரினி என்ற தம்பதியின் மகள் தியாஷிகா
- 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் பெற்றார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், இவரது மனைவி பவதாரினி இவர்களது மகள் தியாஷிகா (வயது 2 ½). 21 நிமிடங்களில் 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.
பதக்கம் மற்றும் சான்றிதழுடன் அவரது பெற்றோர் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தை தியாஷிகாவை பாராட்டி மென்மேலும் சாதனைகள் புரிய எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்தினார்.
- திருச்சி அருகே உள்ள கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பட்டு (வயது 64).
- பட்டுவிற்கும் அவரது உறவினர் வனிதாவுக்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
திருச்சி
திருச்சி அருகே உள்ள கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பட்டு (வயது 64). இவரின் குடும்பத்தினருக்கும் உறவினரான, ஊர் காவல் படையைச் சேர்ந்த வனிதா (38) என்பவரின் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
மேலும் வனிதா, பட்டுவிடம். ரூ. 50,000 கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை திருப்பி கேட்க பட்டு சென்ற போது குடும்ப தகராறு எழுந்துள்ளது.
இதில் ஊர் காவல் படையைச் சேர்ந்த வனிதா அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜா என்பவரின்மனைவி குணம் ஆகியோர் பட்டுவை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த மூதாட்டி பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜீயபுரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஊர் காவல் படையை சேர்ந்த வனிதா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.
- மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர்.
- டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள குடும்பம் சமத்துவம் பகுதியை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி சரண்யா (வயது 26).கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சரண்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா.
- அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது.விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஊதியூரை அடுத்துள்ள தாயம்பாளையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா கலந்துகொண்டு, மாநில அளவில் 3 ம் இடம் பிடித்துள்ளாா்.வெற்றிபெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா்தண்டபாணி, ஓவிய ஆசிரியா் ரவி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.