என் மலர்tooltip icon

    இந்தியா

    அலுவலக கழிவறையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பல மாதங்களாக நேர்ந்த கொடுமை - உ.பி பள்ளி மேலாளர் கைது
    X

    அலுவலக கழிவறையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பல மாதங்களாக நேர்ந்த கொடுமை - உ.பி பள்ளி மேலாளர் கைது

    • என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
    • வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்

    உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி மேலாளர் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்தார்.

    அண்மை காலமாக சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் விநோதமாக நடந்துகொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.

    பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களாக இந்த துன்புறுத்தல் தொடர்ந்தது என்று சிறுமி நடுக்கத்துடன் கூறியுள்ளார்.

    சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×