என் மலர்
நீங்கள் தேடியது "பாஜக எம்.எல்.ஏ"
- இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
- ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி, பாஜகவின் பட்ஜெட்டை ஆண்குழந்தை என்றும், காங்கிரஸின் பட்ஜெட்டை பெண்குழந்தை என்றும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவையில் பேசிய அவர்,
"எங்களது முதல் பட்ஜெட் வந்தது, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் அதனைப் பாராட்டியது. இரண்டாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது. மூன்றாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது.
எங்கள் அரசு முதல் பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, இரண்டாவது பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, மூன்றாவது பட்ஜெட்டிலும் ஒரு மகனைப் பெற்றெடுத்தது. இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அவர் தனது கடைசி பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார், அதனால்தான் அது ஒரு மகனைப் பெறவில்லை; ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்," என்று கோலி கூறினார்.
பெண் குழந்தையை ஒரு தோல்வியாகவும் அல்லது பலவீனமாகவும் சித்தரிக்கும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சு பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி,
"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்டமன்றத்திலேயே இப்படிப் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், சிந்தனைப் போக்கையும் காட்டுகிறது. காங்கிரஸை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். இது பாலினத்திற்கு எதிரான அவர்களின் பாரபட்சமான மனநிலையைக் காட்டுகிறது, இது ஒரு பாலியல் ரீதியான (sexist) கருத்தைத் தவிர வேறில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
- ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
- இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்
ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது.






