என் மலர்
நீங்கள் தேடியது "BJP MLA"
உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சதர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அசோக் சிங் சந்தல். இவருக்கும், உள்ளூர் பா.ஜனதா தலைவர் சுக்லா என்பவருக்கும் கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் சுக்லா குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுக்லாவின் சகோதரர்கள், மருமகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் மீது உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து அவர்கள் அனைவரும் கடந்த 2002-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.இதை எதிர்த்து சுக்லா, அலாகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அசோக் சிங் சந்தல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் தண்டனைக்காக கோர்ட்டில் சரணடையாமல் இருந்ததால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவருடன் மேலும் 5 பேரும் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா. இவர், லக்கிம்பூரில் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதில், எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ சீதாராம். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார். குடிசையில் வசிக்கும் அவர் ஏற்கெனவே இரண்டுமுறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அந்த பகுதி மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர் என்பதால் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவருக்கு கட்சி தலைமை மீண்டும் சீட் வழங்கியது.
ஆனால் இந்த முறை மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர். எம்.எல்.ஏ ஆன பின்பும் தனது குடிசை வீட்டிலேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
எம்.எல்.ஏ ஆன பிறகாவது வேறு வீட்டில் குடியிருக்கலாமே என பலர் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கையை மறுத்து விட்டார்.
இந்த விஷயம் வெளியில் தெரிய அந்த பகுதி கிராம மக்கள், கட்சி நிர்வாகிகள், அவரின் ஆதரவாளர்கள் என பலரும் பணம் வசூலித்து சீதாராமுக்கு புதிதாக வீடு கட்ட உதவி புரிந்துள்ளனர். தலா 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கி உள்ளனர்.

சீதாராம் தனது வேட்பு மனு தாக்கலில் தெரிவித்த சொத்து விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. ‘25,000 ரூபாய் ரொக்கமாக கையிலும், 21,000 ரூபாய் வங்கியிலும் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அவருக்கு சொந்தமாக 600 சதுர அடியில் குடிசை வீடும், இரண்டு ஏக்கர் நிலமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் உதவி செய்துள்ளது குறித்து எம்.எல்.ஏ சீதாராம் கூறுகையில், ‘சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு என் கையில் பணம் இல்லை. முதல் மாதச் சம்பளமும் இன்னும் வரவில்லை. என் நிலைமையை அறிந்து மக்கள் அனைவரும் எனக்கு வீடு கட்ட உதவியுள்ளனர்.
இப்போது மட்டும் உதவவில்லை. நான் தேர்தலில் வெற்றிபெற்றபோதே, என் எடைக்கு நிகராக காசுகளை அன்பளிப்புச் செய்தனர். அந்த பணத்தை வைத்துதான் அப்போது என் குடிசையைப் பராமரித்தேன். இப்போதும் என் முதல் மாத சம்பளத்தை வேண்டாம் என மக்கள் கூறியுள்ளனர்” என நெகிழ்ந்து கூறியுள்ளார். #BJPMLA #SitaramAdivasi

புதுவையில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் புதுவையில் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் மைய மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது கையில் பதாகைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அந்த பதாகைகளில் தடை செய், தடை செய் புதுவை நகரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய் என்ற பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டார். #Plastic #BJPMLA
ஓசூர்:
கர்நாடக முன்னாள் மந்திரியும், ஹூக்கேரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான உமேஷ் கத்தி நேற்று பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்.கள் எங்களது தொடர்பில் உள்ளனர். இதையடுத்து, ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும். இன்னும் ஒரு வாரத்திற்குள்
பா.ஜ.க. ஆட்சி அமையும்’’. இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘உங்களுக்கு (உமேஷ் கத்திக்கு) திறமை இருந்தால், 24 மணி நேரத்தில் ஆட்சியை கவிழுங்கள், பார்க்கலாம், இல்லையென்றால், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று சவால் விடுத்தார்.
மேலும், உமேஷ் கத்தி, மூத்த அரசியல்வாதி. அவருக்கு திறமையிருந்தால், ஆட்சியை கவிழ்த்து காண்பிக்கட்டும், அதை விடுத்து, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது’’. என்றும் ஆவேசத்துடன் கூறினார்.
இதற்கு பதிலடியாக உமேஷ் கத்தி, ‘‘ எங்கள் பலத்தை தகுந்த நேரத்தில் நிரூபிப்போம். நான் எல்லா கட்சிக்கும் சென்று வந்துள்ளேன். எனக்கு நிறைய எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். கர்நாடகாவில் எங்கள் ஆட்சி அமைந்து விட்டால், தினேஷ் குண்டுராவ், தனது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் சவால் விடுத்துள்ளார்.
இதனிடையே, விஜாபுராவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, கூறியதாவது:-
‘‘முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர், மந்திரி பதவிக்காக போராடினர். அவர்களில் சிலருக்கு மந்திரி பதவி கிடைத்து, தற்போது இலாகாவிற்காக சண்டை போட்டு வருகின்றனர்.
சித்தராமையா, தனது ஆதரவாளர்களையே புதிய மந்திரிகளாக ஆக்கியுள்ளார். இதனால் முன்னாள் மந்திரி சாமனூரு சிவசங்கரப்பா போன்ற மூத்த தலைவர்களே அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் புகைச்சலை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
எனவே, கர்நாடகாவில், கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும், அதன் பின்னர். பா..ஜ.க. ஆட்சிக்கு வரும்’’.
இவ்வாறு அவர் கூறினார்.

தனது தொகுதியில் உள்ள அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சமீபத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதில் தன்னை புறக்கணித்ததாக அவர் கூறியிருந்தார். தற்போது முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
இதுபற்றி தேராஷ் கோவல்லா கூறுகையில், ‘நேற்று இரவு முதல்வர் என்னை அழைத்து பேசினார். அப்போது, பல்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் இந்த பணி நியமனத்தில் உள்ள சிக்கல்கள் இருந்ததாக முதல்வர் விளக்கினார். எனது கவலைகளை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் அது சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். இது தொடர்பாக அவருக்கு மெயில் அனுப்பி உள்ளேன்’ என்றார். #AssamMLA #BJPMLAResign

மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்காக தனது செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.
ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். #BJP #RamKadam
மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது.
கூட்டத்தில் ராம் கதம் பேசும்போது, தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.
ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இது தொடர்பாக ராம் கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றார். #BJP #RamKadam