என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல பிரதேச பாஜக எம்எல்ஏ மீது போக்ஸோ வழக்குப்பதிவு
    X

    இமாச்சல பிரதேச பாஜக எம்எல்ஏ மீது போக்ஸோ வழக்குப்பதிவு

    • காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
    • மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள ஹன்ஸ்ராஜ் இமாச்சலப் பிரதேச சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.

    ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு தன்னை சிறு வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட அப்பெண், எம்எல்ஏ தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மீண்டும் புகார் அளிக்காமல் இருக்கும்படியும் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் நெருங்கிய கூட்டாளி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீதே போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பெண் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.

    Next Story
    ×