என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beauty pageant"

    • இந்த கிரீடம் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது.
    • விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ள, இல்லாத திருமணமான பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.

    பாஜக எம்எல்ஏ விஷால் பிரசாந்தின் மனைவியும், முன்னாள் பீகார் எம்எல்ஏ சுனில் பாண்டேயின் மருமகளுமான ஐஸ்வர்யா ராஜ், 'மிஸஸ் பீகார் 2025' பட்டத்தை வென்றுள்ளார். 

    "கனவுகள் நனவாகிவிட்டன - உங்கள் பெண் இப்போது மிஸஸ் பீகார் 2025!" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஐஸ்வர்யா ராஜ், தன்னை நம்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

    "இந்த கிரீடம் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    ஐஸ்வர்யா ராஜ், மாடலிங் மற்றும் திரைப்படங்களில் ஆர்வம் இருந்தபோதிலும், திருமணத்திற்குப் பிறகு தனது கனவுகளை ஒத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கணவரின் ஆதரவுடன் மீண்டும் களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    மிஸஸ் பீகார் 2025 போட்டியில் 21 முதல் 55 வயது வரையிலான பெண்கள் பங்கேற்கலாம். விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ள, இல்லாத திருமணமான பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.

    பீகார் பெண்களின் அழகு, புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர்வதே இப்போட்டியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது.

    விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மேடையில் திடீரென அவர் மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக கடந்த ஜனவரியில் மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது. இதனால் அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.

    இந்நிலையில் தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார்
    • அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

    கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.

    'இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார். அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

     

     

    பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். 52 போட்டியாளர்களுடன் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட மிலி, இளைஞர்களின் தற்கொலை எண்ணங்களை மட்டுப்படுத்த யோகாவின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். 

    ×