என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transgender"

    • முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்
    • கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார்.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

    முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். பொம்மை பொம்மை போட்டியில் பிக்பாஸ் வீட்டை சேர்ந்த கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார். இதனால் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இருந்த கம்ருதீன் விடுவிக்கப்பட்டார். எனவே மீதம் இருந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், வி.ஜே பாரு, சபரிநாதன், கெமி, ரம்யா ஜோ , எப்.ஜே , அரோரா சின்க்ளேர், அப்சரா சிஜே, ஆகிய போட்டியாளர்கள் எவிக்ஷனில் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி 13 நாட்களை கடந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் அப்சரா சிஜே என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே , மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். 'கடந்து வந்த பாதை' டாஸ்கில் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள், சவால்களை அவர் பகிர்ந்துக்கொண்டது போட்டியாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே பங்கேற்றார்.

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவரும் அப்சரா சிஜே மாடலிங் துறையிலும் தற்போது அசத்தி வருகிறார்.

    மாடலிங் தவிர, சினிமாவிலும் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அப்சரா சிஜே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே களமிறங்கி இருக்கிறார்.

    • திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணை.

    தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.

    இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில்," நானும், நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

    திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக, புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

    நடவடிக்கை தேவையில்லை, சமாதானமாக செல்வதாக கூறி எழுத்துப்பூர்வமாக வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். இதன் நகலை, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
    • இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார்.
    • என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்.

    தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.

    இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.

    இந்நிலையில், நஞ்சின் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில்," கடந்த 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். அதில் கடந்த 5 வருடங்களாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம், தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

    திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கூட நாங்கள் இருவரும் ரிசார்ட் சென்று இருந்தோம். அதன் பிறகு, நாம் பழக வேண்டாம், அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறது என்றார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றார்.

    • வரதட்சணை தடைச் சட்டம், 1961 இன் பிரிவு 498A ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • ரூ.10 லட்சம், 25 பைசா தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை வழங்கியதாகக் கூறினார்

    திருமணம் செய்து கொண்ட திருநங்கைப் பெண்ணுக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா நிராகரித்தார்.

    2019 ஆம் ஆண்டில், போகலா சபானா என்ற திருநங்கை பெண், தனது கணவர் விஸ்வநாதன் கிருஷ்ண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடர்ந்தார். வரதட்சணை தடைச் சட்டம், 1961 இன் பிரிவு 498A ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

    புகாரின் படி, போகலாவின் திருமணம் ஜனவரி 2019 இல் ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் நடைபெற்றது. தனது கணவர் விஸ்வநாதன் கிருஷ்ண மூர்த்தி தனது திருநங்கை அடையாளம் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் என்று போகலா சுட்டிக்காட்டினார்.

    தனது குடும்பத்தினர் தனக்கு வரதட்சணையாக ரூ.10 லட்சம், 25 பைசா தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை வழங்கியதாகக் கூறினார். திருமணம் முடிந்த உடனேயே தனது கணவர் தன்னை விட்டுச் சென்றதாகவும், பின்னர் தன்னை மிரட்டி ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் ஒரு திருநங்கைப் பெண் குழந்தை பிறக்க முடியாது என்பதால் அவளை 'பெண்' என்று கருத முடியாது என்றும், எனவே பிரிவு 498A இன் கீழ் பாதுகாப்பை அந்தப் பெண்ணுக்கு வழங்க முடியாது என்றும் கணவர் விஸ்வநாதன் வாதிட்டார்.

    இருப்பினும், இனப்பெருக்கத் திறனை அடிப்படையாகக் கொண்டு பெண்களை மதிப்பிடும் முறை குறுகிய பார்வை கொண்டது என்றும், பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர்களுக்கும் கண்ணியம், அடையாளம் மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் அரசியலமைப்பின் உணர்வையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    எனவே திருநங்கைப் பெண்ணின் உரிமையை நிலைநாட்டிய அதே வேளையில், குறிப்பிட்ட ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம் ரத்து செய்தது.

    ஒரு நபரின் பாலின அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்றும், ஐபிசி 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் உள்ள பாதுகாப்புகள் திருநங்கைப் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    • உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்.
    • தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்.

    லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை Dr.N.ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்," வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!" என்றார்.

    முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி," 'டாக்டர் ஜென்சி' என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்" என்றார்.

    • மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
    • இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.

    லண்டன்:

    சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.

    இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.

    • பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
    • பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்

    இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.

    அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து,
    • நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்!

    புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!

    கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு.

    திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!

    • திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
    • திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.

    கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×