என் மலர்
நீங்கள் தேடியது "Mental health"
- மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது.
- மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்'
மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, கை தசைகளின் செயல்பாட்டை அதிகரிப்பது, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவது, கை விரல்களின் அசைவுகளை சீராக்குவது என பல்வேறு விதங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்' எனப்படும் மென்மையான பந்து உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
உள்ளங்கையில் வைத்து. முடிந்த வரை ஸ்டிரெஸ் பாலை கடினமாக அழுத்தவும். இவ்வாறு அழுத்தியபடி 5 வினாடிகள் வைத்திருந்த பின்பு மெதுவாக கைகளை தளர்த்தவும், இதுபோல தொடர்ந்து 10 முறை செய்யலாம். ஒரு நிமிட இடைவெளிக்கு பின்பு மற்றொரு கையிலும் இதேபோல் செய்ய வேண்டும்.
நன்மைகள்:
ஸ்டிரெஸ் பாலை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை தூண்டப்படுவதால், மூளையில் உள்ள உணர்ச்சிகளுக்கான பகுதியில் அமைதிக்கான தூண்டுதல் ஏற்படும். இந்த சமிக்கை உடல் முழுவதும் அனுப்பப்படும். பதற்றமாக இருக்கும் சமயங்களில், கைகளில் ஸ்டிரெஸ் பாலை வைத்து அழுத்தும்போது, தன்னிச்சையாகவே நம்முடைய கவனம் திசை திருப்பப்படும். மேலும், மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ந்து தூண்டப்படுவதால் 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும் இந்த ஹார்மோன், வலி நிவாரணியாகவும் செயல்படும்.
ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கை பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்களையும் வெளியேற்றும். யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
மனஅழுத்தம் உடையவர்கள். அடிக்கடி கோபம் வரும் குணாதிசயம் கொண்டவர்கள், எளிதில் பதற்றம் அடை பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் உள்பட அனைத்து வயதினரும் ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம். கையில் எலும்பு முறிவு, தசைநார் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம்.
- மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.
முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- ஒருவர் அங்கிருந்து இரும்பு சேர் ஒன்றை எடுத்து பஸ் முன் பக்க கண்ணாடியில் அடித்துவிட்டார்.
- கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம்:
முசிறியில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு விரைவு பேருந்து பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் சதீஷ்குமார் பஸ்சை ஓட்டிக் கொண்டிருந்தார். சுரேஷ் குமார் கண்டக்டராக இருந்தார். பஸ் நேற்று இரவு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்தஒருவர் அங்கிருந்து இரும்பு சேர் ஒன்றை எடுத்து பஸ் முன் பக்க கண்ணாடியில் அடித்துவிட்டார்.
உடனடியாக பஸ் டிரைவர் சுதாகரித்துக் கொண்டு பஸ்சை நிறுத்தினார். பின்னர் டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்லிசிருந்து இறங்கி வந்து கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். அவர் மன நலம் பாதித்தவர் என தெரிய வந்தது. உடனடியாக அவரை விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
- பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பேன்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த திருமக்கோட்டை பள்ளிவாசல் அருகில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட தேவிஸ்ரீ (வயது 45) என்ற வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரைபடி, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பக மீட்பு குழுவினர் இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் ஜெய்சரண் ஆகியோர் அப்பகுதிக்கு நேரடியாக சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்.
அப்போது மாவட்ட கவுன்சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன், தன்னார்வலர் அகமது ஆகியோர் சென்றனர்.
பின்னர், திருமக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உரிய பதிவு பெற்று, மாவட்ட மனநல மருத்துவர் புவனேஸ்வரியை சந்தித்து பரிசோதனை செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவு அளித்து மனநல சிகிச்சை கொடுத்து பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பதே லட்சியம் என்றார்.
- நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
- முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி கடைத்தெருவில் 10 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சரிவர உடை அணியாமல் சுற்றி திரிந்து கொண்டும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்.
இதனை அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் நம்பிக்கை மீட்பு குழுவினர் சமூகப் பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைமீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர் .
இது பற்றி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறும்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குளிக்க வைத்து முடி சுத்தம் செய்து நல்ல உடைகள் அணிந்து உணவுகள் சரியாக கொடுத்து அவருடன் நன்கு அன்புடன் பேசிக்கொண்டு சிகிச்சை தொடர்ந்து செய்து வந்தால் முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம் என்றார்.
- கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
- காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி மனநலம் பாதிக்கப்பட்ட பட்டம் படித்த பெண் மீட்பு நம்பிக்கை மனநல காப்பகத்தில் இரவோடு இரவாக ஒப்படைப்பு
திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த கனகவல்லி (வயது 32) என்பதும், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவுப் படி இன்ஸ்பெக்டர் மணிமேகலை, காவலர்கள் மீனாட்சி, சத்யா ஆகியோ ர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் ஆலோசனை பெற்று மீட்டெடுத்து நம்பிக்கை மனநல காப்பகம் கொண்டு வந்த சேர்த்தனர் .
நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் இவரை மனநல காப்பகத்தில் சேர்த்துக் கொண்டு கூறுகையில் ,காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.
இந்நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், செவிலியர் சுதா, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாளுக்குநாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி சமூகப் பணித்துறை மாணவி ஆர்த்தி வரவேற்று பேசினார்.
திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையேற்று மனநலத்தை பற்றியும் மறுவாழ்வு சிகிச்சை பற்றியும் நம்பிக்கை மனநல காப்பக சேவைகள் அனைத்தையும் படும் சிரமங்களையும் விவரமாக எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார் .
வழக்கறிஞர் கதா க. அரசு தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்பிக்கை மனநலக் காப்பகத்தின் சிறப்பான சேவைகளையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுதல், கண்காணித்தல், வழிபடுத்துதல், ஆற்றப்படுத்துதல், மறுவாழ்வு செய்தல், மன சிகிச்சை அளித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.
நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நாளுக்கு நாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.
அவர்களை மீட்டெடுத்தல், பாதுகாப்பு கொடுத்தல், உணவளித்தல்,
மனநல சிகிச்சை அளித்தல் ஆற்றப்படுதல் குடும்பத்துடன் சேர்த்து வைத்தல் போன்றவற்றை விவரித்தார்.
நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் தன்னார்வலர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சமூகப் பணி ஆர்த்தி பயனுள்ள நூல்களையும் பூக்கன்றுகளையும் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் கோகிலா, சுபா, சக்தி பிரியா, சரவணன், சங்கர், செவிலியர் சுதா, வள்ளி கலந்து கொண்டனர்.
முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயா நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் பணியாளர்களையும் சமூக பணியில் முதுகலை பட்டம் பெரும் ஆர்த்தியை பற்றியும் எடுத்துக் கூறினார்.
திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன் குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சாந்தியின் மகனுக்கு சமீபத்தில் மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாந்தி சம்பவத்தன்று மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூர் சொக்கம்பட்டி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரது மனைவி அழகு. கணவன் -மனைவி இருவரும் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் செல்வத்துக்கு குடிபழக்கம் காரணமாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
புதுச்சேரி:
புதுவை சாரம் திலகர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுபா (வயது30). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிலமாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் சுபா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோரிமேடு போலீசில் சுபாவின் அண்ணன் அண்ணாமலை புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தானே சிரித்துக் கொண்டும் தானே பேசிக் கொண்டும் தன்னைப் பற்றிய மனத்தெளிவு இல்லாமல் இருப்பவர்களை மட்டுமே மனநலக் குறைபாடுடையவர்கள் என்று எண்ணுகிறோம். வீட்டில் வன்முறையான செயல்களில் ஈடுபட்டாலோ, மற்றவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தினாலோ பயந்து அரண்டு உறவினர்கள், மனநல மருத்துவரிடம் அழைத்து வருகின்றனர், மேலும் மனநலக் குறைபாடுகளெல்லாம் பேய், பிசாசுத் தொல்லைகள். மாந்திரிகம், செய்வினை போன்ற காரணங்களாலும் வருகிறது என்ற தவறான கருத்துகள் மக்களிடையே பரவியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மனநல மருத்துவரை அணுகுவதே கேவலமானது என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது.
மனநலக் குறைபாடுகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் உடலில் உள்ள சுரப்பிகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களாலும் வருகிறது. பரம்பரையாக வருவதும் ஒரு காரணமாகும். இதைத்தவிர குழந்தைகளின் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை, போதைப் பொருட்களின் பயன்பாடு, போன்ற காரணங்களாலும் வருகிறது.
மனநலம் என்றால் என்ன?
சிந்தனை, உணர்ச்சிகள், நினைவு ஆற்றல், புரிந்துகொள்ளும் தன்மை, முடிவெடுக்கும் ஆற்றல், நடத்தை, குணநலன் ஆகிய அனைத்தும் சரியாக இருப்பது மனநலம் ஆகும்.
இவற்றுள் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ பாதிக்கப்பட்டு அதனால் அவர் தனக்கும், தன்னைச் சார்ந்தவருக்கும் இடையூறாக இருக்கும் பட்சத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார்.
ஏழை, பணக்காரர்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள், சாதி, மத, இன வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினரிடமும் மனநலக் குறைபாடுகள் காணப்படுகின்றன.
உடல் நோயைப் போன்றே மனநலக் குறைபாடுகளும் பலவகைப்படும். காய்ச்சல் என்றால் வைரஸ் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்று பலவகை இருப்பதைப் போலவே மனநலக் குறைபாடுகளிலும் பலவகையான மனநலக் குறைபாடுகள் உண்டு.
மனிதர்களுக்குப் பலவிதமான சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுதல் இயல்பே. இல்லறவாழ்க்கையிலும் அலுவலகத்திலும் பலவகைச் சிக்கல்களும் அவற்றால் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இவற்றுக்குரிய தீர்வுகளைப் பற்றிய சிந்தனைக்கு நேரமும் வாய்ப்பும் கிட்டுகின்றனவா?

தேவையில்லாமலும் கோழைத்தனத்தாலும் வீண் கோபத்தாலும் தற்கொலைக்குப் பலர் முயல்வதும் வீணே மடிந்து போவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. தற்கொலை முயற்சிகளும், போதைப் பொருட்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாவதும், மனநலக்குறைபாட்டின் வெளிப்பாடுகளே.
மனநோயை மனநலக்குறைப்பாட்டை தீவிரமான நோய், மிதமான மனநோய் என இருவகையாகப் பிரிக்கலாம். உலக மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் தீவிர மன நோய்களாலும் 20 சதவீத மக்கள் மிதமான மனநோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டில் மனநோயானது குறிப்பாக மனச்சோர்வு நோயானது உடல் சார்ந்த நோய்களைக் காட்டிலும் அதிக அளவு மக்களைப் பாதிக்கும் எனவும் உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்ற மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூட்டு வலிகள், தீராத தலைவலி, வயிற்றுப்புண், தீராத வயிற்றுப் போக்கு, வாந்தி, முதலியன மனநலக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. சிறு வயதில் மனதில் உண்டாகும் அதிர்ச்சிகளும், அன்றாடம் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அணுகும் முறைகளாலும் இவை ஏற்படுகின்றன.
மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு இரையான ஆண்களும் பெரும்பாலான பெண்களும் மிதமான மன நோய்க்கு ஆளாகின்றனர். எனவே வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் முறையான வழிகளைக் கையாள வேண்டும். குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம்.
குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள உரிய வழிகாட்டி உதவ வேண்டும் தமது குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அவர்களுக்கான முடிவை எடுக்கும் முன் அவர்களுடன் ஆலோசித்து அவர்களுக்குச் சரியான புரிதலை உண்டாக்கவேண்டும். அவர்களது மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.
விடலைப்பருவம் மனநலக் குறைபாடுகளுக்கு வித்திடும் பருவமாகும், இப்பருவத்தை எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டால் அவர்களின் வாழ்வில் மனநலக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க இயலும். உடல்ரீதியாக வெளிப்படும் மன நோய்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து உமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி, உடலின் சில பாகங்களில் வலி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பல அறிகுறிகளுக்கு உடல் ரீதியாகக் காரணங்கள் இல்லாத போது அவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதே மன அமைதிக்கும், மனநலத்திற்கும் வழி வகுக்கும், தனிப்பட்ட மனிதனின் குணநல மேம்பாடு, சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ மாற்றம், சமுதாய மேம்பாடு போன்ற பல காரணங்களும் இதற்குத் துணையாக இருக்கும். மன மகிழ்வோடு, மனநலத்தோடு வாழ உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாகும்.
மனநலமே மனித நலம். மனநலமே சமூகநலம். மனநலமே உலகநலம். இதனைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவே உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.
மருத்துவர் செல்வமணி தினகரன்