திண்டிவனத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
திண்டிவனத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியைஒரு மனநல பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் யாரும் இல்லாததை கண்ட மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் வெளியே வந்து அருகே உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநல அவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நலம் பாதித்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களுடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com