என் மலர்
நீங்கள் தேடியது "Awareness"
- மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து, பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் வாழ வேண்டும்.
- ரத்ததானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண்தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, ராசா மிராசுதார் மருத்துவமனை சமூக மருத்துவத் துறை, தமிழ்நாடு உடல் உறுப்புதான அறுவைசிகிச்சை துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பவா பிரசாரம்நிகழ்ச்சியின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, ஆயுஷ்மான் பவா பிரசாரம் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வருகிற 2-ம் தேதி வரை நடைபெறும். இன்று இரண்டாவது நிகழ்வாக செவிலியர் பயிற்ச்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடல் உறுப்புதான விழிப்புணர்வின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மக்கள் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக இப்பேரணி அமைந்தது.
இதன் மூலம் மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ வகை செய்திட குருதி தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும். உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் என்றார்.
இதில் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுப்புராம், இணைப்பேராசிரியர்கள் சிவச்சந்திரன், லியோ, உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
- டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக புது வாழ்வு அறக்கட்டளை சார்பில் நாகை மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் புது வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கலைவாணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.
நத்தம்:
நத்தம் அருகே உலுப்பகுடியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழு சார்பாக அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் 10 பேர் கொண்ட தீயணைப்பு குழு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். முகாமில் மழை, வெள்ளம் காலங்களில் பேரிடர் மீட்பு பணிகள் மூலம் எப்படி மீட்பது, கேஸ் சிலிண்டர் தீ விபத்தை எப்படி கட்டுப்படுத்துவது,
கட்டிடங்களின் மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.
- நெடுஞ்சாலைத்துறை பல்லடம் உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
- விழாவில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் பல்லடம் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை பல்லடம் உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, ராஜா, பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு வரவேற்றார். விழாவில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. பின்னர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்,சாலை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பிரசாரம் வானம் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 2023-24ம் ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுப டியை அதிகரிக்கும் நோக்கில் பிரசாரம் செய்திட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது ;-
தோட்டக்கலை துறை மூலம் 2023-24ம் ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த 2023-24 நிதியாண்டில் 74.50 எக்டர் பரப்பில் எண்ணெய் பனை புதிய பரப்பு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.21.605 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கோத்ரேஜ் அக்ரோவெட் பிரைவேட் லிட் எனும் தனியா நிறுவனம் மூலம் தரமான கன்றுகள் உத்தரவாத கொள்முதல் முறையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் எண்ணெய் பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவினத்திற்காக ரூ.5,250 மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்ய டீசல்/ மின் பம்பு செட்டுகள், பாதுகாப்பான சரகங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், நடவு செய்த கன்றுகளை பாதுகாக்க கம்பிவலை, சிறிய உழுவை எந்திரம், பனை இலை வெட்டும் கருவி, அறுவடை செய்ய ஏதுவாக அலுமினிய ஏணி, பழக்குலை வெட்டும் கருவி ஆகியவை அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது
எண்ணெய் பனை சாகுபடி குறித்தும் அரசின் மானிய திட்டங்களை எடுத்துரைக்கும் வகையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வலகயில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வமுள்ளவ விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குர் (பொ) ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், வேளாண்மை இணை இயக்குநர் (மா.தி) சுஜாதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) கனிமொழி, தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொ) வெங்கட்ராமன், தஞ்சாவூர், ஒரத்தநாடு பட்டுக்கோ ட்டை, பேராவூரணி, கும்பகோணம் மற்றும் பாப நாசம் தோட்டக்கலை உதவி இயக்குநர், தலைமை சந்தை விரிவாக்கம், கோத்ரேஜ் அக்ரோவெட் பிரைவேட் லிட் முத்துச்செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் விழிப்புணர்வு வழங்கிட வேண்டும்.
- விழிப்புணர்வு பணி மத்திய பஸ் நிலையம் மற்றும் வள்ளியம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
உடுமலை:
உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக நாடக குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள்,குடியிருப்பு பகுதிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் விழிப்புணர்வு வழங்கிட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து உடுமலை நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் உத்தரவின் பேரில் மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வெங்கடாசல கனக நாடக சபை குழுவினர் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளான கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல்,மஞ்சப்பை உபயோகப்படுத்துதல், பொது இடங்களில் இயற்கை உபாதைகள் மற்றும் எச்சில் துப்புவதை தவிர்த்தல்,புகைப்பிடிப்பதை தவிர்த்தல் என பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பணி மத்திய பஸ் நிலையம் மற்றும் வள்ளியம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.அப்போது என் குப்பை என் பொறுப்பு, மக்கும் குப்பை மக்காத குப்பை, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, வீட்டுக்கு ஒரு சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசியும் பாடல்களை பாடி நடனம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல்:
இந்தியாவில் இந்த ஆண்டு சிறுதானிய உணவுப்பொருள் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சிறுதானிய உணவு பொரு ட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் மாணவ-மாணவிகள் உடல் வலிமை யுடனும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் மாறுவார்கள் என எடுத்து ரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்க ப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, ராகி உள்ளிட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். சிறுதானியங்கள் என்றாலே கூழ், கஞ்சி என்ற எண்ணத்தை மாற்றி இந்த தானியங்களிலும் பல்வேறு நவீன உணவுகளை தயாரி க்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி இதனை பயன்படுத்துமாறு தெரி வித்தனர். இதுமட்டுமின்றி செம்பருத்தியால் செய்த உணவு உள்பட பாரம்பரிய உணவுகள் குறித்தும் காட்சிப்படுத்த ப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியை ஜெயந்தி புளோரன்ஸ் மற்றும் ஆசிரி யர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.
- பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தலைமை ஆசிரியை சுமையா ஜரின் பர்ஹானா தலைமை தாங்கினார்.
பசும்பொன்
கமுதி இக்பால் தொடக்கப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சுமையா ஜரின் பர்ஹானா தலைமை தாங்கினார். கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்திரசேகரன், முன்னணி தீயணைப்பு வீரர் உத்தண்டசாமி, முத்துராஜ், காந்தி, தினேஷ்குமார், காளீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் மாணவ-மாணவிகள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும், பேரிடர்களில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வு செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
- மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை.
- மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் தனியார் பாரா மெடிக்கல் பயிலும் மாணவியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
இதில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி முன்னிலையில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 19-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- திருத்துறைப்பூண்டியில் நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.
திருத்துறைப்பூண்டி:
உலக ஆறுகள் தினத்தையொட்டி நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுத்தை வெளியிட்டு பேசுகையில்:-
ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.
இவைகளை நாம் மாசுபடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
நாட்டின் வளத்திற்கு ஆறுகளே பெரும் பங்கு வகிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கோமதி செந்தில்குமார், கணக்காளர் முத்து மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தேசிய ஊட்டச்சத்து மாத விழா பாகூர் மாரியம்மன் கோவிலில் நடந்தது.
- சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறி பயிறு வகைகளும் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைக