search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic"

    • கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள் அரசு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு வழங்கப்படுகிறதா, விற்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் அறிவுறுத்தலையின்படி நகராட்சி பணியாளர்கள் உதவியோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.

    பல்வேறு கடைகளில் 50 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1600 அபராதம் விதிக்க ப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகள நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    இளநிலை உதவியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் கலிய பெருமாள், பரப்புரையாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.

    தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
    • பிளாஸ்டிக்கின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைகின்றன.

    திருப்பூர்:

    வன உயிரின வாரத்தை முன்னிட்டு திருப்பூர் வனச்சரகம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டாண்மை என்ற மையகருத்தை வலியுறுத்தி இன்று நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் இல்லா பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும் கலை நிகழ்ச்சி நடத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

    வனச்சரக அலுவலர் பேசுகையில், நெகிழி பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றை பறவைகளும், விலங்குகளும் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் இறந்து விடுகின்றன. பிளாஸ்டிக்கின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைவதால் பிளாஸ்டிக் மனித ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உணவு சங்கிலிகள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். பிளாஸ்டிக் உணவு சங்கிலியின் சிறிய உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் .அதுமட்டுமல்லாமல் நமது சந்ததிகளை பாதிக்கும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வனவர்கள் முருகானந்தம், வெங்கடாசலம், உமாமகேஸ்வரி, சரகப்பணியாளர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், செர்லின், தினேஷ்கண்ணன், ஜோஷ்வா கிஷோர் ஆகியோர் தலைமையில் 55க்கும் மேற்பட்ட அலகு - 2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் சரணாலயத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் பஸ் நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மாநகர நல அலுவலர் சரோஜா ஆலோசனையின் பேரில் உதவி ஆணையர் காளி முத்து தலைமையில் சுகா தார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உதவி பொறியாளர் முருகன் மேற்பார்வையில் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அது மட்டுமின்றிமேலும் 100-க்கும் மேற்பட்ட கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    • தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
    • தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் ஆளவந்தார் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யபப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு ரூ. 1500 அபராதம் விதித்தனர். ஆய்வின்போது இளநிலை உதவியாளர் பாத்திமா, வரித்தண்டலர், பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு செயல்அலுவலர் ஆளவந்தார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல்சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் ரோகிணி தலைமையில் பணியாளர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • பேரூராட்சி பகுதியில் அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தனர்.
    • பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்திரவின்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படுகிறதா ? என கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கடைகளில் 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3000 வசூல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

    • மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் ரமேஷ் அறிவுரை
    • வசந்தகாலத்தில் பூக்கள் மலரும், வண்டுகள், பட்டாம்பூச்சி, தும்பிகள் சிறகை விரித்து பறக்கும்.

    புதுச்சேரி:

    இந்திராநகரில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் ராமன் அறிவியல் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், டெலஸ்கோப் வடிவமைத்தல் கருத்தரங்கம், சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் மாற்றம் குறித்த நிகழ்ச்சிகள் நடந்தது.

    பள்ளி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் சிறப்பாக டெலஸ்கோப் வடிவமைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் கையில் உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களால் ஏற்படுத்த முடியும். தற்போது வசந்தகாலத்தில் பூக்கள் மலரும், வண்டுகள், பட்டாம்பூச்சி, தும்பிகள் சிறகை விரித்து பறக்கும். கடந்த காலத்தை போல சுற்றுச்சூழல் தற்போது இல்லை.

    பச்சைக்கிளிகள் மறைந்து வருகிறது. மின்மினி பூச்சிகளை காண முடியவில்லை. பருவநிலை மாற்றத்தால் பல ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களால் உருவான உயிரினங்கள், மனிதனின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் நிலம், நீர், காற்று பாதிக்கப்படுகிறது. இவற்றை தவிர்ப்பது மாணவர்களின் கடமை என பேசினார்.

    விரிவுரையாளர் செல்வசீனா மரியா மோனிகா வரவேற்றார். விரிவுரையாளர்கள் லட்சுமிநாராயணன், கந்தசாமி நன்றி கூறினர்.

    • சத்யா வித்யாலயா பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தி மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர். பள்ளிக்குழு தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். முதல்வர் செந்தில்குமார், ஆலோசகர் பாரதி, நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை டைகர் சம்சுதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் சத்திரப்பட்டி பேண்டேஜ் சிட்டி தலைவர் பழனிசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், ராஜா, கீழகுலராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தடைகள் இருந்த போதிலும், சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது
    • பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன

    பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. சிறிய பொருட்கள் வாங்கினாலும், அதற்கு பிளாஸ்டிக் பேக் கேட்பவர்கள், அதை பொது வெளியில் வீசி எறிந்துவிடுகின்றனர்.

    மக்காத இந்த பிளாஸ்டிக் மண்ணில் புதைந்து நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், கால்நடைகளை அதில் ஒட்டியிருக்கும் உணவு பொருட்களை உண்பதுடன், அந்த பிளாஸ்டிக் பேக்குகளையும் சேர்த்து உண்கிறது. இதனால் ஜீரணம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது.

    அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. சாலையில் அலைந்து திரிந்த ஒரு மாட்டின் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியதால், உடல் நலமின்றி காணப்பட்டுள்ளது.

    அந்த மாட்டை கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் வயிறுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளதை கண்டுபிடித்து, அறுசை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவு வந்து கொண்டே இருந்துள்ளது.

    சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இதுபோன்று கடந்த வருடம் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்ததாக தெரிவித்தனர்.

    • வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்த 110 கிலோ பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடைகளில் வைத்திருந்த கேரி பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என நகராட்சி எச்சரித்துள்ளது. இதனையும் மீறி ஆங்காங்கே பிளாஸ்டிக் பயன்பாடுகள் இருப்பதாக தொடர்ந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இந்தநிலையில் திருமங்கலம் முகமதுஷா புரம் பகுதியில் ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பதுக்கி இருப்ப தாக பொதுமக்களிடம் இருந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி நகராட்சி சுகாதார அலுவலர் சண்முகவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் ராஜலட்சுமி, யமுனா அடங்கிய குழுவினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பது போல் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளா்கள் கணக்கெடுத்தபடியே சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் அதிகளவில் பிளாஸ்டிக் கப்புகள் இருந்ததுதெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த வீட்டில் சென்று பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வீட்டில் விசாரணை நடத்திய போது திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் கடைகளுக்கு டீ கப்பாக இந்த பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சி அதி காரிகள் பிளாஸ்டிக் கப்பு களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த கேரி பைகளை பறிமுதல் செய்தனர்.

    • பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
    • சுகாதார அலுவலர்கள் தலைமையில் மாநகர பகுதி கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்க கூடாது என்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டுள்ளார்.

    அதிகாரிகள் சோதனை

    ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் இறைச்சிகடை, மீன் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு சகஜமாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    வியாபாரிகளுக்கு அபராதம்

    அந்த வகையில் நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது நயினார் குளம் மார்க்கெட் முக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு சில கடைகளிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தமாக 15.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 4,600 விதிக்கப்பட்டது.

    • பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பாக உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    பேரணியை ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்க ராஜன் என்ற கோபி தொடங்கி வைத்து பேசும் போது, பிளாஸ்டிக்கை வீட்டிலேயே பிரித்து எடுப் பது எளிதானது. அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது. பிளாஸ்டிக் பொருட்களை முறையாக பிரித்து எடுத்து அப்புறப்படுத்துவதில் ஆவுடையானூர் ஊராட்சி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக மாணவி செல்வமாரி வரவேற்று பேசினார். மாணவி ஜெய்ஸ்ரீ, கமலஸ்ரீ ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பேசினர். பேரணியானது ஆவுடையானூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கி மாடியனூர் வழியாக சென்றது. பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்களை கூறியபடி மாணவர்கள் சென்றனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பேரணி ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×