என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு தெருவோரம் குப்பைகளை வீசுவதால் பக்தர்கள் முகம்சுழிப்பு
    X
    பழனி அடிவாரம் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள்.

    பழனியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு தெருவோரம் குப்பைகளை வீசுவதால் பக்தர்கள் முகம்சுழிப்பு

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பழனி:

    பழனியில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு கழிவுகளை சாலையோரம் வீசி வருகின்றனர்.

    பக்தர்களை குறிவைத்து அடிவாரம் , கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் முளைத்து வருகின்றன. இவர்களும் பல்வேறு கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் பழனியில் அதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பல்வேறு குப்பைகளை சாைலயோரம் வீசிச்செல்கின்றனர். இதனை கடந்து செல்லும் நபர்கள் முகம்சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே நகராட்சி மற்றும் தேவஸ்தானம் சார்பில் போதிய ஊழியர்களை நியமித்து குப்பைகளை அகற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×