என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "medicine"
- தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
- வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.
சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.
மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- பரிசோதிக்கபட்டு உரிய ஆலோசானைகள் வழங்கப் பட்டு மருந்துகள், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி சார்பில் 27-வது வார்டு பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ உதவி பெற்றனர். இந்த முகாமை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீலக்கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜய், ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதில் ரத்த அழுத்தம், உடல் எடை, சர்க்கரை அளவு ஆகியன பரிசோதிக்கபட்டு உரிய ஆலோசானைகள் வழங்கப் பட்டு மருந்துகள், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
- கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும்.
- வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும்.
மர வகையை சேர்ந்தது இலந்தை மரம். கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை 9 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழம் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதன் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.
இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.
இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும்.
இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.
பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தை பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
- பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வேதாரண்யம்:
கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், நாகப்பட்டினம் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை ஆகியவை இணைந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கருப்பம்புலம் ஊராட்சியில் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார். மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோ தனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் தலைமை டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர்கள் ராஜசேகர், அனாமிகா, யுவன்சிங், சகிதர்பானு, கண் மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வை ஆய்வாளர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜன், அன்பழகன், சுமதி ரகுராமன் உள்ளிட்ட மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.
- வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி.
- சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன் சுகதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சியர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- எம்.எம்.பி.எஸ். படிப்பிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாணவனின் படிப்பிற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.
திருப்பூர், ஜூலை. 31-
நடப்பு ஆண்டு எம்.எம்.பி.எஸ். படிப்பிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வான முத்தூர் அரசு பள்ளியில் பயின்ற மோளக்கவுண்டன்புதூரை சார்ந்த ஆறுமுகம் (நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணியாற்றுகிறார்). அவரின் மகன் அபிஷேக் கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வானார். அவரது படிப்பிற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.
மாணவர் அபிஷேக்கிற்கு, கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஸ்டெதாஸ்கோப், மற்றும் மருத்துவர் அங்கி, ஆகியவற்றை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
உடன் வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன் மற்றும் முத்தூர்பேரூர் கழக செயலாளர் செண்பகம் பாலு ஆகியோர் உள்ளனர்
- தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.
- டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.
விழுப்புரம்:
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இன்று பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் 100 இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன. தற்போதய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு அரசின் இரு கண்களாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த கோப்பு கவர்னரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, கோலியனூர் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம், ஆலந்தூர் ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
- ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.
ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.
அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.
பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.
பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.
தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.
- சூர்யா வயலுக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
- சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் சூர்யா (வயது 25) இவர் தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காததால் மனமுடைந்த சூர்யா வயலுக்கு வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் இறந்து விட்டார்.
இதுகுறித்து சூர்யாவின் தந்தை ராஜாங்கம் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விரைவில் 2 பேர் ரஷ்யா செல்ல உள்ளனர்.
- 16 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்ட த்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி தொடக்க விழா பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மதுக்கூர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.
நீட் தேர்வை எவ்வாறு எளிதில் எதிர்கொள்வது என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ராக்கெட் அறிவியலில் தேர்வாகி ராக்கெட் ஏவு தளத்திற்கு செல்ல இருக்கும் மாணவன் சந்தோஷை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் 9 மாணவர்கள் ராக்கெட் அறிவியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விரைவில் இரண்டுபேர் ரஷ்யா செல்ல உள்ளனர்.
அதில் ஒருவர் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியை சேர்ந்தவர்.
இன்னொருவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணா மூர்த்தி, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் நீட் தேர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
இதேப்போல் தஞ்சாவூரில் அரண்மனை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனிவேல், கும்பகோணத்தில் நாச்சியார் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் அல்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கடந்த ஆண்டு இப்பயிற்சியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 16 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் நீட் தேர்வு பயிற்சி கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.