என் மலர்
நீங்கள் தேடியது "விஞ்ஞானி"
- இந்த நிகழ்விற்கு நிதியுதவி அளித்து தொகுத்து வழங்கியது ஜெப்ரி எப்ஸ்டீன் தான்.
- அந்தத் தீவில் நடந்த ஒரு 'மைனர் பார்ட்டியில்' கலந்துகொண்டார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெயர் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீனின் தீவில் ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
மார்ச் 2006-ல் கரீபியன் தீவான செயின்ட் தாமஸில் நடைபெற்ற ஒரு அறிவியல் மாநாட்டில் ஹாக்கிங் கலந்து கொண்டார். குவாண்டம் அண்டவியல் குறித்து அவர் அங்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்விற்கு நிதியுதவி அளித்து தொகுத்து வழங்கியது ஜெப்ரி எப்ஸ்டீன் தான் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் எப்ஸ்டீனின் தனித்தீவான 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' க்கும்ஹாக்கிங் சென்றதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படத்தில், ஹாக்கிங் ஒரு ஓய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதும், அவருக்கு இருபுறமும் பிகினி அணிந்த இரண்டு பெண்கள் இருப்பதும் தெரிகிறது.
அவர்களில் ஒரு பெண் ஹாக்கிங்கின் கையில் காக்டெய்ல் பானத்தை வைத்திருக்கிறார். இது அறிவியல் மாநாடு நடந்த செயின்ட் தாமஸ் தீவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹாக்கிங்கின் குடும்பப் பிரதிநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் ஹாக்கிங்கை பராமரிக்கும் செவிலியர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஹாக்கிங்கின் உடல்நிலையை கவனிக்க எப்போதும் அவருடன் வருபவர்கள்.
ALS நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கிங், 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவர். சக்கர நாற்காலி மற்றும் குரல் தொகுப்பான் உதவியின்றி அவரால் எதையும் செய்ய முடியாது.
எனவே, அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்பது முற்றிலும் தவறானது.
இந்தப் புகைப்படங்கள் அவரது அறிவியல் பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே தவிர, இதில் எந்தத் தவாறான நோக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட வர்ஜீனியா கிஃப்ரே, ஹாக்கிங் அந்தத் தீவில் நடந்த ஒரு 'மைனர் பார்ட்டியில்' கலந்துகொண்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாகவே எப்ஸ்டீன் கோப்புகளில் ஹாக்கிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.
- நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
- பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளரும், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியவருமான மாதவ் காட்கில் காலமானார். அவருக்கு வயது 83.
வயது மூப்பு காரணமாக அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் புனேவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு இயற்கை எய்தினார்.
2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் தலைவராக காட்கில் இருந்தார். இது 'காட்கில் கமிஷன்' எனப்படுகிறது.
இவர் தாக்கல் செய்த 'காட்கில் அறிக்கை' மேற்குத் தொடர்ச்சி மலையின் 75% பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியது. அங்குச் சுரங்கப் பணிகள் மற்றும் பெரிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கக் கோரியது.
காட்கில் அறிக்கை, இன்றுவரை சூழலியல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
1986-ம் ஆண்டு இந்தியாவின் முதலாவது பயோஷ்பியர் ரிசர்வ் ஆன நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
வனப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்தியாவின் 'உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்' உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐநா-வின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நீண்ட காலம் பேராசிரியராக காட்கில் பணியாற்றினார் .
சுமார் 215 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 6 முக்கியப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- 1953 இல் 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரியை கண்டறியப்பட்டது.
- மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்பவரால் 1869 ஆம் ஆண்டு டிஎன்ஏ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் டிஎன்ஏவின் கட்டமைப்பு 1953 ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 'டபுள் ஹெலிக்ஸ்' டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கின் கிழக்கு நார்த்போர்ட்டில் அவர் உயிர் பிரிந்தது.
அவரது மகன் டங்கன் வாட்சன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார் என டங்கன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6, 1928 அன்று சிகாகோவில் பிறந்த வாட்சன், தனது 24 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரான்சிஸ் கிரிக்குடன் டிஎன்ஏவின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினார்.
1953 இல் அவர்கள் முன்மொழிந்த 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரி, உயிரினங்களில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியது, இது அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.
இந்தக் கண்டுபிடிப்புக்காக வாட்சன், கிரிக் மற்றும் மற்றொரு விஞ்ஞானி மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மரபியல், தடயவியல் மற்றும் பரம்பரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக அமைந்தது.
- மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும்.
- நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்தினால் தரமான மிளகு பயிர் கிடைக்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி.
இவர் நன்கு விளைச்சல் தரும் சவுக்கு, கனகாம்பரம் உட்பட பல்வேறு பயிர்களை உருவாக்கியுள்ளார். இவரின் வழியில் அவரது மகள் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியும் விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களை உற்பத்தி செய்து வருகிறார்.
தற்போது விரைவாக மகசூல் தரும் மிளகு பயிரை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும். இந்த 5 ஆண்டுகளால் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பலன் இருக்காது.
இந்த நிலையில் திசுவளர்ப்பு மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 18 மாதத்தில் மகசூல் தரும் மிளகை ஸ்ரீலட்சுமி கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நர்சரியில் மிளகு செடிகளை உற்பத்தி செய்யும் போது 100 செடிகளில் 60 சதவீதம் வீணாகிவிடும். சரியான முறையில் உற்பத்தி செய்யாததுதான் செடிகள் வீணாவதற்கு காரணம். எனவே தரமான கன்றுகள் தேவை. 100 பதியங்களில் வேர் நன்றாக இருந்தால்தான் தரமானது. தற்போது திசு வளர்ப்பில் புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து 100 பதியங்களில் 99 பதியங்கள் வேருடன் தரமானவையாக இருக்கும் வகையில் மிளகு நாற்றுகளை உருவாக்கி உள்ளோம்.
10 முதல் 15 நாட்களில் வேர் வந்துவிடும். 30 நாட்களில் அரை அடிக்கு மேல் வளர்ந்து விடும். இந்த நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்தினால் தரமான மிளகு பயிர் கிடைக்கும். விளைச்சலும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
- எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபர் கொல்லப்பட்டார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, வடக்கு ஈரானின் அஸ்தானா அஷ்ரஃபியாவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது 17 வயது மகன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.
- அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
- பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் (95) இன்று காலமானார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஊட்டியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று அவரது உயிர் பிரிந்தது.
1955 இல் அணுசக்தித்துறையில் தனது பணியை தொடங்கிய ஸ்ரீனிவாசன், இந்தியாவின் முதல் அணு உலையை உருவாக்கிய ஹோமி பாபாவுடன் பணியாற்றி உள்ளார்.
1959 இல் இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையத்தின் தலைமை பொறியாளராகத் தனது பங்களிப்பை வழங்கிய ஸ்ரீனிவாசன், 1967 இல் மெட்ராஸ் அணுசக்தி நிலயத்தின் தலைமை இன்ஜீனியர் ஆனார்.
1974ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984-ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் சீனிவாசனுக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தூணான டாக்டர் எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்.
இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜே. பாபாவுடன் நமது முதல் அணு உலையை உருவாக்கினார்.
பல தசாப்தங்களாக, அவர் 18 அணு மின் அலகுகளை உருவாக்கத் தலைமை தாங்கினார். எரிசக்தி தன்னிறைவை ஏற்படுத்தினார். உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்பியவர். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர்
- குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பஞ்சாபில் மொஹாலியில் இயங்கி வரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் அபிஷேக் ஸ்வர்ண்கர் (40). ஜார்க்கண்டை சேர்ந்த இவர் பஞ்சாபின் மொஹாலியின் செக்டார் 66 இல் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகே அவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தபோது அவரது பக்கத்து வீட்டுக்காரர் மோன்டி (26) அதை எதிர்த்தார்.
இதன் பிறகு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோன்டி அபிஷேக்கை அடிக்கத் தொடங்கினார், இதனால் அவர் சாலையில் விழுந்தார்.
தரையில் விழுந்த அபிஷேக்கை மோன்டி தாக்கினார். அருகில் இருதவர்கள் அவரை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வீடியோவில், அபிஷேக்கை சிறிது நேரம் எழுந்து நிற்பது காணப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மீண்டும் விழுந்தார்.
இதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.
ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.
- லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
- இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.
வாஷிங்டன்:
லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.
செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
- அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பழனி:
நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல்நாடு என்ற பெருமையும், நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன்மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தில் செற்கைகோள் மையத்தின் இயக்குனராக சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்து வேல் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் சந்திரயான்-3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் நிலவில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் நிலவினை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானவையாகும். இவை மூன்றையும் பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலிகாமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்த கவுரிமணி (வயது50) என்பவர் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
10ம் வகுப்பு வரை பழனியில் உள்ள பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளியிலும், தொலைதொடர்பு பொறியியலில் பி.இ., எம்.இ. பட்ட படிப்புகளை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது கணவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் இக்குழுவில் பணியாற்றிய பழனி பெண் விஞ்ஞானி கவுரிமணிக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- சங்கரன் என்பவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் படித்த மாணவர்.
- இஸ்ரோ விஞ்ஞானியான சங்கரனை பாராட்டி பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் அதன் லேண்டரை வெற்றிகரமாக இறக்கி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், உலக நாட்டு தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி குழுவில் இடம் பெற்றிருந்த சங்கரன் என்பவர் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கடந்த 1983 -ம் ஆண்டில் இருந்து 1985-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் படித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து சரபோஜி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சங்கரனை பாராட்டி அவரது படத்துடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் விஞ்ஞானி சங்கரன் மற்றும் சந்திரயான்- 3 வெற்றி விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்தி பெருமிதம் கொள்கிறோம் . இங்கனம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிளக்ஸ் போர்டை கல்லூரியில் படிக்கும் மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து நாமும் சங்கரனை போல் விஞ்ஞானியாக மாறி இந்தியாவுக்கு பல்வேறு புகழை தேடி தர வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.
- 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார்.
- எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.
லண்டன்:
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வானியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (வயது 94). வானியல் ஆராய்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பெரு வெடிப்பின்போது அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு காரணியாக அமைந்த பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார்.
ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார். அது 'ஹிக்ஸ் போசன்' துகள் என்றும் 'கடவுள் துகள்' என கூறப்பட்டது. இதற்காக பீட்டர் ஹிக்ஸ் 2013-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்த ஆராய்ச்சி பல்வேறு கேள்விகளுக்கான விடை தந்தது. எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் முதுமை காரணமாக பீட்டர் ஹிக்ஸ் எடின்பெர்க்கில் உள்ள தனது வீட்டில் இறந்தார். அவருடைய மறைவுக்கு நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.






