என் மலர்
நீங்கள் தேடியது "nuclear energy"
- மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜ
- நமது தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'SHANTI' மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, நமது தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.
இந்த மசோதா நிறைவேற ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். செயற்கை நுண்ணறிவுக்கு ஊக்கமளிப்பது முதல் பசுமை உற்பத்திக்கு வழிவகுப்பது வரை, இது நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்குத் தீர்க்கமான உந்துதலை அளிக்கிறது.
இது தனியார் துறைக்கும் நமது இளைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் திறந்துவிடுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்!" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.
- இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் அணுசக்தி மசோதா.
- பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
நேற்று மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.
இருப்பினும், தனது உரையில், அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டின் அணுசக்தித் துறையில் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் அணுசக்தியின் வளமான வரலாறு 2014 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார்.
அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு வந்த 2014 இல் தொடங்கியது என்று இப்போது நமக்கு பொய் சொல்லப்படுகிறது என தெரிவித்தார்.
திமுக எம்பி வில்சன், பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை என்றும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் அணுசக்தி நிறுவல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
பிஆர்எஸ் எம்பி சுரேஷ் ரெட்டி, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் எழுப்பி, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் குழுவின் நிலையான மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் இதுபோன்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் குற்றம் சாட்டினார்.
- இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
- இந்தியாவுடனான பதட்டங்களின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்காக நாடு அதன் அணுசக்தி திறனை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்கள் அணுசக்தி மோதலுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளை ஷெரீப் நிராகரித்தார்.
மேலும் இந்தியாவுடனான பதட்டங்களின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
- போர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
- ஏற்கனவே அமெரிக்காவின் பென்டகன் அமைப்பும் இதை கூறியிருந்தது.
கடந்த வார இறுதியில் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியுள்ளார்.
ஜூன் 13 அன்று, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறி, இஸ்ரேல் தெஹ்ரானின் அணு மற்றும் இராணுவ வசதிகளைத் தாக்கியது.
பின்னர் அமெரிக்காவும் இந்தத் தாக்குதல்களில் இணைந்தது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தின் உண்மையான அளவு தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் சிபிஎஸ் நியூஸிடம் பேசிய க்ரோஸி, ஈரான் சில மாதங்களுக்குள் தனது சொந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கான மையவிலக்குகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.
ஈரான் இன்னும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளது, எனவே அவர்கள் விரும்பினால், அதை மீண்டும் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் அணுசக்தித் திறன்கள் இன்னும் சாத்தியமானதாக இருக்க முடியும் என்று பரிந்துரைத்த முதல் நிறுவனம் IAEA அல்ல. ஏற்கனவே அமெரிக்காவின் பென்டகன் அமைப்பும் இதை கூறியிருந்தது. ஆனால் இதை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
- ஈரான் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார்.
அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மறுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தங்கள் நலன்களுக்கு உதவுமா என்பதை ஈரான் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் அணுசக்தி வசதிகள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில் இந்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அரக்ச்சி தெரிவித்தார்.
ஈரான் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார்.
இத்தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன.
புதன்கிழமை நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப் , அமெரிக்கா மற்றும் ஈரான் அடுத்த வாரம் சந்திக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான பென்டகன் தாக்குதல்கள் வெற்றி பெற்றதாகவும் கூறியிருந்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதைத் தடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் என்பது ஒரு சாத்தியமான விளைவு என்றும் தெரிவித்தார்.
- 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று இந்த தாக்குதல் அழைக்கப்பட்டது.
- அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.
ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.
'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது.
இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலும் பங்கேற்றதாக செய்திகள் வந்தன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி,"தொடர்ச்சியான தாக்குதல்களால் எங்கள் அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது" என்று கூறினார். இருப்பினும், சேதத்தின் முழு விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
ஈரானிய அணுசக்தி அமைப்பு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தற்போது நிலைமை மற்றும் சேதத்தை மதிப்பிடுவதாக அவர் விளக்கினார்.
மறுபுறம், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஈராபி அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களைக் கையாண்ட விதம் குறித்து ஈரான் ஆழ்ந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதன் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்க IAEA மறுத்ததை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் விமர்சித்தார்.
- ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
- எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபர் கொல்லப்பட்டார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, வடக்கு ஈரானின் அஸ்தானா அஷ்ரஃபியாவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது 17 வயது மகன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.
- பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
- 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
ஃபோர்டோ உட்பட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்கச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
மறுநாள் (நேற்று) இஸ்ரேல், அமெரிக்கா தாக்கிய அதே ஃபோர்டோஅணுசக்தி தளத்தை தாக்கியது. இதனுடன் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை தலைமையகம், பாலஸ்தீன சதுக்கம், துணை ராணுவப் பசிஜ் தன்னார்வப் படை கட்டிடம் மற்றும் எவின் சிறைச்சாலையையும் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான், ஃபோர்டோவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடவில்லை.
புஷேர், அஹ்வாஸ், யாஸ்த் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஏவுகணை சேமிப்பு வசதிகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரண உற்பத்தி வசதி ஆகியவற்றைத் தாக்கியதாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
யாஸ்டில் உள்ள இமாம் ஹுசைன் ஏவுகணை தளத்தைத் தாக்கி கோர்ராம்ஷஹர் ஏவுகணைகளை அழித்ததாகவும் அவர் கூறினார். 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைத் தவிர, இஸ்ரேலின் பிற நகரங்களையும் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
இதற்கிடையே கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
திங்களன்று மாஸ்கோவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு புதினின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
"எந்த தூண்டுதலும் அடிப்படையும் இல்லாமல் ஈரான் மீதான தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் புதின் கூறினார். மேலும் ஈரானுடனான மோதலில் மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள சக்திகளின் ஈடுபாடு உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது" புதின் எச்சரித்தார்.
மேலும், "ஈரானிய மக்களுக்கு உதவ ரஷ்யாவின் முயற்சிகள் தொடரும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவும், பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று புதின் தெரிவித்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வதேச நெறிமுறைகளை மீறி, ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
- எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
- மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.
தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
- அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
- அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.
அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
- ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அறிவித்திருந்தார்.
- மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதல் இன்று அதிகாலையில் நடந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் சேதத்தின் அளவு குறித்து ஈரான் தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில் ஈரானிய அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிரிகளின் தீய சதிகளுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான புரட்சிகர விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் முயற்சிகளுடன், அணுசக்தி தியாகிகளின் இரத்தத்தின் விளைவாக கிடைத்த இந்த தேசியத் தொழிலின் (அணுசக்தி) வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்காது என்று மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.
மேலும் "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் NPT ஆகியவற்றை கடுமையாக மீறியுள்ளது" என்று கூறிய அவர் ஐநா சாசனத்தின் படி தன்னை தர்க்கத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து, கதிர் வீச்சுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியதாக ஈரானிய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஈரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப அதிகபட்சம் இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ளதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் பல உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும் சில ஈரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.






