என் மலர்
நீங்கள் தேடியது "bill"
- மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல்.
- மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல்.
2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாநில ஆளுநர்களின் மசோதா அதிகாரம் மற்றும் அவர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 200க்கின் கீழ் ஆளுநருக்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தல். இதில், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல். மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் அவற்றை நீண்ட காலம் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என இரண்டு தனித்தனி அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நிச்சயமான காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநர் ஒரு மசோதா மீது எந்தக் காரணமும் இன்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்தத் தீர்ப்பு அனுமதி அளித்துள்ளது.
ஆளுநரின் கையொப்பம் அல்லது ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா நடைமுறைக்கு வந்த சட்டமாகக் கருதப்படாது என்பதையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நிலவி வந்த நீண்ட கால மோதல்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை வழங்கியுள்ளது.
- இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் அணுசக்தி மசோதா.
- பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
நேற்று மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.
இருப்பினும், தனது உரையில், அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டின் அணுசக்தித் துறையில் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் அணுசக்தியின் வளமான வரலாறு 2014 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார்.
அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு வந்த 2014 இல் தொடங்கியது என்று இப்போது நமக்கு பொய் சொல்லப்படுகிறது என தெரிவித்தார்.
திமுக எம்பி வில்சன், பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை என்றும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் அணுசக்தி நிறுவல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
பிஆர்எஸ் எம்பி சுரேஷ் ரெட்டி, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் எழுப்பி, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் குழுவின் நிலையான மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் இதுபோன்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் குற்றம் சாட்டினார்.
- அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது?
- இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.
காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.
'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
1925-ம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை, பம்பாய், கல்கத்தா மாகாணங்களில் இந்து, பவுத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்த விதி முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடுகள் அரசியலமைப்பில் தடுக்கப்பட்டுள்ளன. அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது? இந்த சீர்திருத்தங்கள் காலனித்துவ மனநிலையில் இருந்து விடுதலையை நோக்கிய ஒரு படி" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மசோதா சட்டமானால், இந்திய டிராம்வேஸ் சட்டம், 1886, லெவி சர்க்கரை விலை சமநிலை நிதி சட்டம், 1976, மற்றும் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் சட்டம், 1888 உள்ளிட்ட 71 சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
மேலும், பொது ஆணைகள் சட்டம் 1897, சிவில் நடைமுறைச் சட்டம் 1908, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அமைப்பில் சொற்களஞ்சியத்தைப் புதுப்பித்தல் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.
- மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிமுகப்படுத்தினார்.
- மரண தண்டனையை ஒழிப்பதற்கான மசோதாவை திமுக எம்.பி கனிமொழி அறிமுகப்படுத்தினார்.
அலுவலக நேரத்திற்கு பிறகு வேலை தொடர்பான செல்போன் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை ஊழியர்கள் தவிர்க்க அனுமதிக்கும் ஒரு தனி நபர் மசோதா மக்களவையில் அறிமுகமாகி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்திய இந்த 'துண்டிப்பு உரிமை மசோதா, 2025', பணியாளர் நல ஆணையத்தை நிறுவுவதையும், ஒவ்வொரு பணியாளருக்கும் அலுவலக நேரத்திற்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் வேலை தொடர்பான அழைப்புகளை துண்டிக்கவும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காமல் இருக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
அதேபோல் காங்கிரஸ் எம்.பி. கே. காவ்யா, மாதவிடாய் காலத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு வசதிகள் மற்றும் ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும் சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கு அழைப்பு விடுக்கும் மற்றொரு தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான மசோதாவை திமுக எம்.பி கனிமொழி அறிமுகப்படுத்தினார்.
- எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
- மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சில மசோதாக்கள் நிறுத்தப்பட்டுதான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மெல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மசோதாக்கள் காலவரையின்றி தாமதமாக வருவதை மத்திய அரசு நியாயப்படுத்தவில்லை.
கடந்த 55 ஆண்டுகளில் 17,000 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 20 மசோதாக்களை மட்டும் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மாநிலங்கள் தவறான புகார்களை எழுப்புகின்றன என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சூர்யகாந்த், "எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஆளுநர்களால் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
இதன்பின் பேசிய துஷார் மேத்தா, " ஆளுநரின் பங்கு அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான். காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் ஒரு வரையறையை உருவாக்க முடியாது.
மசோதாக்கள் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளில் இருக்கும்போது ஒப்புதலை நிறுத்தி வைக்க வேண்டும்அவசியம் உள்ளது" என்று வாதிட்டார்.
- அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
- தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.
மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.
அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்டுள்ள நிலையில், சசி தரூர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 நாட்கள் சிறையில் இருந்த ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும்? இது மிகவும் பொதுவான விஷயம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை" என்றார்.
தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது என்று அவர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது நமது ஜனநாயகத்திற்கு நல்லது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்
இருப்பினும், மசோதாவை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அவரது கருத்து இறுதியானது அல்ல என்றும் சசி தரூர் தெளிவுபடுத்தினார்.
சந்தேகங்களைத் தீர்த்து, அது குறித்து ஆழமான விவாதம் நடத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
- எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அமித் ஷா மீது வீசியெறிந்தனர்.
- அவர்களுக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத்துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள்.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதாவை இன்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அமித் ஷா மீது வீசியெறிந்தனர்.
இந்நிலையில் இந்த மசோதாவை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பாஜக முன்மொழியும் புதிய மசோதா மூலம் மன்னர் யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யக்கூடிய பழங்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்கிறோம்.
அவர்களுக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத்துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள்.
பின்னர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிரதிநிதியின் பதவி 30 நாட்களுக்குள் பறிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார்.
கைது செய்யப்படுவதால் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அர்த்தமல்ல. ஆனால் இந்த மசோதா மூலம், அரசாங்கங்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக கோஷ்டிவாதத்தில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இது நீதித்துறையின் சுதந்திரத்தை மீறுவதாகும். அதிகாரமே நீதியை ஆளும் சூழ்நிலை உருவாகும்" என்று தெரிவித்தார்.
- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
- ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, 2025 க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
விளையாட்டு அமைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்களை வழிநடத்த ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். விளையாட்டு தொடர்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீர்வு காண ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.
சம்மேளன தேர்தல்கள் நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைக்கப்படும்.
நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோருக்கான வயது வரம்பில் தளர்வுகள் கொண்டுவரப்படும்.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
- புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
- எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா2025 நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் பழைய பாதிப்பு கடந்த வாரம் திரும்பபெறப்பட்டது.
31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக வழங்கிய பரிந்துரைகளை சேர்த்து மசோதாவின் புதிய பதிப்பு நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்ட்டது.
இந்த மசோதா சட்டமான பின்னர், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார்.
- உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப மாற்றப்பட்டது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் பிற்பகல் 3 மணியளவில் செய்தார்.
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால், ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப, சுயாட்சியை வலுப்படுத்தும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவும் நிரைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளன. ஒப்புதலுக்கு பின் மசோதாக்கள் சட்டமாகும்.
- பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
- எதிர்க்கட்சிகளின் அமளியால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.
இந்நிலையில், 'எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாநில சட்டசபை அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.
கவர்னர்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் பி.எஸ்.நரசிம்மா, சூர்யகாந்த், விக்ரம்நாத், ஏ.எஸ். சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதி களை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. இவ்வழக் கில் கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா அரசுகள் பதில் மனுதாக்கல் செய்தன.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் கால அட்ட வணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யு மாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.
ஜனாதிபதி விளக்கம் கோரிய இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19-ந் தேதி தொடங்கும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தாக்கல் செய்த ஆரம்ப ஆட்சேபனைகள் முதலில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் பரிந்துரையை ஆதரிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மனுக்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் பரிந்துரையை எதிர்க்கும் மனுக்கள் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 2, 3, 9 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஏதேனும் மறு சமர்ப்பிப்புகள் இருந்தால், செப்டம்பர் 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.






