என் மலர்
நீங்கள் தேடியது "Draupadi Murmu"
- 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
- பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.
அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
- தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது
இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக வாங்கும் புதிய BMW காருக்கு வரிகளில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.3.66 கோடி மதிப்புள்ள இந்த குண்டு துளைக்காத வாகனத்தின் மீது IGST மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை தள்ளுபடி செய்ய GST கவுன்சில் முடிவெடுத்தது.
வழக்கமாக, இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
இருப்பினும், இந்த வாகனம் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று கருதிய GST கவுன்சில், ஜனாதிபதியின் வாகனம் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மாறாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு காரணத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது.
இதன் மூலம், ஜனாதிபதியின் செயலகம் இந்த வாகனத்தை எந்த வரி சுமையும் இல்லாமல் வாங்கும்.
தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது. இப்போது அந்த இடத்தை BMW செடான் நிரப்ப உள்ளது.
- மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
- கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மைசூரு வந்தார்.
மைசூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் மற்றும் முதலைமைச்சர் சித்தராமையா வரவேற்றனர்.
பின்னர் AIISH வைர விழா நிகழ்வில் கலந்துகொண்டு தனது உரையை தொடங்கிய சித்தராமையா, மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
தனது உரையின் போது இதற்கு பதிலளித்த முர்மு, " முதல்வர் சித்தராமையாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கன்னடம் எனது தாய்மொழி இல்லை என்றாலும், நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.
எல்லோரும் தங்கள் மொழியை உயிர்புடன் வைத்திருந்து கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும், கன்னடம் காற்றுக்கொள்ள நான் சிறுக சிறுக இனி முயற்சி செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.
கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருச்சி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார்.
அவரை மாவட்ட கலெக்டர் வே.சரவணன், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர், அவர் திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரெங்கநாதர் கோவில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
- ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, 2025 க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
விளையாட்டு அமைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்களை வழிநடத்த ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். விளையாட்டு தொடர்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீர்வு காண ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.
சம்மேளன தேர்தல்கள் நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைக்கப்படும்.
நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோருக்கான வயது வரம்பில் தளர்வுகள் கொண்டுவரப்படும்.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
- மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாநில சட்டசபை அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.
கவர்னர்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் பி.எஸ்.நரசிம்மா, சூர்யகாந்த், விக்ரம்நாத், ஏ.எஸ். சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதி களை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. இவ்வழக் கில் கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா அரசுகள் பதில் மனுதாக்கல் செய்தன.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் கால அட்ட வணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யு மாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.
ஜனாதிபதி விளக்கம் கோரிய இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19-ந் தேதி தொடங்கும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தாக்கல் செய்த ஆரம்ப ஆட்சேபனைகள் முதலில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் பரிந்துரையை ஆதரிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மனுக்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் பரிந்துரையை எதிர்க்கும் மனுக்கள் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 2, 3, 9 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஏதேனும் மறு சமர்ப்பிப்புகள் இருந்தால், செப்டம்பர் 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
- ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு
- உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனக் கூறியிருந்தனர்.
முதன்முறையாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்டதே இந்த மேல்முறையீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள்:
1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.
2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.
3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.
4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.
5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.
6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.
7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.
8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.
9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?.
10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.
11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.
12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.
13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.
14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
- ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
- ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு
- உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனக் கூறியிருந்தனர்.
முதன்முறையாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, இந்த வழக்கை வரும் 29ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது
- மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிப்பார்.
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிப்பார். அவ்வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார்.
அதன்விவரம்:-
1. உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
2. ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
3. சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
4. மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்
- ஜனாதிபதி இன்று அவரது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நமது நாட்டில் பெண்கள் அதிகாரமளிப்பின் ஒளிரும் சின்னமாக நீங்கள் திகழ்கிறீர்கள்.
நீங்கள் நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்திச் செல்லும்நிலையில், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






