என் மலர்
இந்தியா

இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் போர் விமானி.. திரௌபதி முர்முவுடன் புகைப்படத்தில் இருக்கும் வீராங்கனை பற்றி தெரியுமா?
- 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
- பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.
அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.






