என் மலர்

  நீங்கள் தேடியது "rafale fighter plane"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான தகவல் கூறி வரும் ராகுல்காந்திக்கு பொய்களின் இளவரசர் என்ற பட்டம் கொடுக்கலாம் என உபி மந்திரி கிண்டல் செய்துள்ளார். #Congress #RahulGandhi #SiddharthNathSingh
  லக்னோ:

  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒபந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். பல தடவை மறுப்பு தெரிவித்த பின்பும் தொடர்ந்து முறைகேடு நடந்து இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறார்.

  அவருக்கு உத்தரபிரதேச மாநில மந்திரி சித்தார்த் நாத் சிங் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக திரும்ப திரும்பகூறி வருகிறார். இந்த ஒப்பந்தத்தை எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஏன் கொடுக்கவில்லை என்கிறார்.

  மக்களிடம் பொய்களை கூறி அவர்களை தவறாக வழிநடத்துகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ரபேல் ஒப்பந்தம் பற்றியும், இப்போதைய ஒப்பந்தம் பற்றியும் அவருக்கு தெரியுமா?  அவர் பொய்களை பேசி அதை உண்மையாக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் போர் விமானம் சப்ளை செய்ய ரபேல் நிறுவனம் முன்வந்ததாகவும் ஆனால் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்கியதாகவும் கூறுகிறார். இதற்கான தேதிகளையும் ஆதாரங்களையும் அவரால் வெளியிட முடியுமா?

  அவர் பொய்சொல்லி விட்டு அதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்கிறார். ராகுல்காந்திக்கு பொய்களின் இளவரசர் பட்டம் கொடுக்கலாம். 2019 பாராளுமன்ற தேர்தலில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ராகுல்காந்தி சொல்கிறார். பொய்களை வைத்துக்கொண்டு மோத முடியாது என்பதை கூறிக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #SiddharthNathSingh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் விமான விவகாரத்தில் ராகுல்காந்தி ஒரே கோரிக்கையை வலியுறுத்துவதால் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் குணமாகி விடுவார் என உத்தரபிரதேச மந்திரி கிண்டலாக கூறியுள்ளார். #RahulGandhi
  லக்னோ:

  ரபேல் போர் விமானம் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

  மத்திய மந்திரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் அளித்த போதிலும், ராகுல் ஏற்கவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

  இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில மந்திரி மொசின் ராசா நேற்று ராகுல் காந்தியை கடுமையாக கிண்டல் செய்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


  பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏற்கக்கூடியவை அல்ல.

  பொதுவாக ஒரு திருடன் தான் மற்றவர்களை பார்த்து திருடன் திருடன் என்று கத்துவான் என்பார்கள். ராகுல் கதையும் அது மாதிரிதான் உள்ளது.

  ராகுலின் சமீபத்திய அறிக்கைகளை பார்க்கும் போது பல்வேறு எண்ணங்கள் தோன்றியுள்ளன. அவரது மனநிலை பற்றிக்கூட சந்தேகம் வருகிறது.

  பிரதமர் மோடி மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியுள்ளார். ராகுல்காந்தி இந்த திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் அவருக்கு குணமாக வாய்ப்பு உள்ளது. ராகுல் பேசும் வார்த்தைகளுக்கு அவர் சிகிச்சை பெற்றால்தான் குணமாக முடியும்.

  இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #AyushmanBharat #PMModi #MohsinRaza
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் வருகிற 15-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #congress

  புதுச்சேரி:

  புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  4½ ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு நாட்டு மக்களை இன்றுவரை ஏமாற்றி வருகிறது. திட்டமிட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.

  ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். நாட்டின் பாதுகாப்புக்காக ரபேல் போர் விமானம் வாங்க மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளிப்படை தன்மையுடன் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது.

  ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தங்களின் சுய லாபத்திற்காக ஒப்பந்தங்களை மாற்றி ரபேல் போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்க தன்னிச்சையாக முடி வெடுத்தது. இதன் மூலம் 41,000 கோடி இமாலய ஊழல் செய்து லஞ்சம் பெற்று மோடி நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார்.

  பொய்யையும் புரட்டையும் கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க.வினர் பகல் கனவு காண்கிறார்கள். இவர்களின் போலி முகத்திரையை கிழித்து எறியவும், மோடி செய்த இமாலய ஊழலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தவும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் புதுவை வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற இருக்கிறது.

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும் புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை தொடங்கி வைக்கிறார்.

  மாலை 4 மணியளவில் காரைக்கால் மாவட்ட செயல்வீரர் கூட்டதிலும் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.

  நாட்டின் வளர்ச்சியையும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் சீரழித்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்கு களைப் பறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பி.சி.சி. உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம்.

  மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு, தாழ்த்தப் பட்டோர் பிரிவு, சிறு பான்மையினர் பிரிவு, வக்கீல் பிரிவு, விவசாய பிரிவு, ஊடக பிரிவு, மீனவர் காங்கிரஸ், தொழிலாளர் பிரிவு, தலைவர்களும், நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் தவறாமல் பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங் கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

  இவ்வாறு நமச்சிவாயம் கூறி உள்ளார். ##congress

  ×