search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafael scandal"

    ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியின்போது பதில் அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

    ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் எந்த அடிப்படையில் இதை குறிப்பிடுகிறது? என எங்களை பார்த்து பாஜகவினர் கேட்கிறார்கள்.

    இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய  நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.

    526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?

    இதில் உண்மை நிலவரம் என்னவென்றால் ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார்.



    என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.

    ரபேல் பேரம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பிரதமரை மிரட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.

    ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #AnilAmbani #Chowkidaarchorhai #Modi #RahulGandhi #RafaleDeal
    ரபேல் விமான விவகாரத்தில் ராகுல்காந்தி ஒரே கோரிக்கையை வலியுறுத்துவதால் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் குணமாகி விடுவார் என உத்தரபிரதேச மந்திரி கிண்டலாக கூறியுள்ளார். #RahulGandhi
    லக்னோ:

    ரபேல் போர் விமானம் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

    மத்திய மந்திரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் அளித்த போதிலும், ராகுல் ஏற்கவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில மந்திரி மொசின் ராசா நேற்று ராகுல் காந்தியை கடுமையாக கிண்டல் செய்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


    பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏற்கக்கூடியவை அல்ல.

    பொதுவாக ஒரு திருடன் தான் மற்றவர்களை பார்த்து திருடன் திருடன் என்று கத்துவான் என்பார்கள். ராகுல் கதையும் அது மாதிரிதான் உள்ளது.

    ராகுலின் சமீபத்திய அறிக்கைகளை பார்க்கும் போது பல்வேறு எண்ணங்கள் தோன்றியுள்ளன. அவரது மனநிலை பற்றிக்கூட சந்தேகம் வருகிறது.

    பிரதமர் மோடி மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியுள்ளார். ராகுல்காந்தி இந்த திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் அவருக்கு குணமாக வாய்ப்பு உள்ளது. ராகுல் பேசும் வார்த்தைகளுக்கு அவர் சிகிச்சை பெற்றால்தான் குணமாக முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #AyushmanBharat #PMModi #MohsinRaza
    ரபேல் விமான முறைகேடு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #Rafaledeal

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

     


    பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #Rafaledeal

    ×