search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambani"

    • இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது.
    • முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

    ஐ.பி.எல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.

    முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.


    • முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
    • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான டிசைனில் உருவான லெஹங்கா உடையுடன், வைர நகைகளை அணிந்துள்ள மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்பானி குடும்பத்தில் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்று குழந்தைகளில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோர் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்நிலையில் மற்ற இரு திருமணங்களை விட இத்திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த அந்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரமாண்ட திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு மஹாபலேஷ்வரில் இருந்து பார்வையற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்திகள் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழங்கால கைவினைப் பொருட்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் இஷா அம்பானி, சுவதேஷ் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வீட்டின் உட்புறத்தை ஆடம்பரமாக அலங்கரிப்பதற்கும், உணவு பரிமாறுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலமான மற்றும் திறமையான கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.
    • இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார்.

    புதுடெல்லி:

    'ஹுருண் இந்தியா' ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி ரூ.4.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

    2022-23ம் நிதியாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.

    அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    அதேநேரத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.6.77 லட்சம் கோடி ஆகும். இவரது சொத்து மதிப்பும் 20 சதவீதம் சரிவை கண்டு உள்ளது.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடத்தில் இருந்தார். இப்போது அவர் அந்த அந்தஸ்தை இழந்து 2-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சீரம் இந்தியா நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா ரூ.2.23 லட்சம் கோடி சொத்துகளுடனும், எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் ரூ.2.14 லட்சம் கோடி சொத்துகளுடனும், தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.1.65 லட்சம் கோடி சொத்துகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில் இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

    இந்த பட்டியலில் சைரஸ் பூனாவாலா 46-வது இடத் திலும், சிவ் நாடார் 50-வது இடத்திலும், லட்சுமி மிட்டல், எஸ்.பி.ஹிந்துஜா ஆகியோர் 76-வது இடத்திலும் உள்ளனர். திலீப் ஷங்வி 98-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 107-வது இடத்திலும், குமார் மங்கலம், உதய் கோட்டக் ஆகியோர் 135-வது இடத்திலும் உள்ளனர்.

    உலக அளவிலான பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா 32 சதவீதத்தை கொண்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
    • 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

    இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

    அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.

    ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியின்போது பதில் அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

    ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் எந்த அடிப்படையில் இதை குறிப்பிடுகிறது? என எங்களை பார்த்து பாஜகவினர் கேட்கிறார்கள்.

    இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய  நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.

    526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?

    இதில் உண்மை நிலவரம் என்னவென்றால் ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார்.



    என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.

    ரபேல் பேரம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பிரதமரை மிரட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.

    ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #AnilAmbani #Chowkidaarchorhai #Modi #RahulGandhi #RafaleDeal
    ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்த அம்பானிக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை வழங்கியதால் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலைன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துக்கு வரம்புகளை மீறி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில், மொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆர்காம் நிறுவனம் ஒப்புக்கொண்டபடி 550 கோடி ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு தரவில்லை. எனவே அனில் அம்பானி மற்றும் அவரது 2 உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனில் அம்பானியை கண்டிக்கும் விதமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-



    இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தங்களை பெற வேண்டும் என்றால் அதற்கு ரூ.45 ஆயிரம் கோடி மோசடி செய்தவராக இருக்க வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தாததன் காரணமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பிரதமர் மோடியால் ‘பாய்’ என்று அழைக்க வேண்டும். தகுந்த அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். பிரதமர் இந்த விதிகளை வகுத்துள்ளார்.

    இவ்வாறு ராகுல் அதில் குறிப்பிட்டுள்ளார்.  #RahulGandhi #Modi #RafaleDeal
    தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற ‘மக்களின் குரல்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட போர் விமானம், தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக இந்த துறையில் சிறிதும் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தில் பங்கு அளிக்கப்பட்டதில் இருந்து இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது என்றும், மக்களின் வரிப்பணத்தை தொழிலதிபர்களுக்கு மோடி வழங்கி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய அவர், மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல், தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் கிடைக்கும் லாபம் எதுவும் ஏழைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவுவதிலேயே மும்முரமாக செயல்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal 
    ×