என் மலர்
நீங்கள் தேடியது "Sonia Gandhi"
- 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
- உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.
- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது.
புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிற்பகல் கூடின. அந்த கூட்டத்தில் முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்களவையில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா குறித்து பேச தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி இன்று உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 2023 இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது
- மகாலஷ்மி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்
இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டீஸ்கர், ம.பி., மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தலும் நடைபெறவிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் விஜயபேரி சபாவில் ஒரு மிக பெரும் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் அவர் அம்மாநில மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தெலுங்கானா மக்களுக்கு 5 உத்திரவாதங்களை வழங்குகிறேன். அவை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். மகாலஷ்மி திட்டம் எனும் திட்டத்தின்படி தெலுங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.500 தொகையில் வழங்கப்படும். தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தெலுங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி அறிவித்தார்.
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
- பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வகையில், நாடு முழுக்க 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். மறுசீரமைக்கப்பட்ட காரிய கமிட்டியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மொத்தம் 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வகையில், நாடு முழுக்க 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அக்டோபர் 2-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் நடைபெற இருந்தது.
எனினும், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் இன்று அறிவித்து இருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், பொதுக்கூட்டம் எங்கு, எப்போது நடைபெறும் என்பது பற்றிய இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்து இருக்கிறார்.
- சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
- ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது.
புதுடெல்லி:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.
சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் தெரியாது.
- மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருந்தார். அதில் "மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமலேயே இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. எதற்காக இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது என்ற காரணம் எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு அரசு அலுவல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது பற்றிய தகவல் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது."
"பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்து இருக்கும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, "காங்கிரஸ் கட்சிக்கு குடியரசு விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் துளியும் நம்பிக்கையே இல்லை. பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து தேவையற்ற குழப்பம் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பழக்கமாக மாறிவிட்டது."
"பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டுவது தொடர்பாக அனைத்து சட்டப்பூர்வமான மற்றும் பாராளுமன்ற விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன. இதன் காரணமாக எதிர்கட்சியினர் வரவிருக்கும் பாராளும்ற சிறப்பு கூட்டத்தை ஆரோக்கியமான ஒன்றாகவும், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவும் வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் எங்களுக்கு தெரியாது.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடத்த சோனியா காந்தி வலியுறுத்தல்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். இந்தியாவில் செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22-ம் தேதி என ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, எழுதி இருக்கும் கடிதத்தில் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டு இருப்பதாவது.,
"மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமலேயே இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. எதற்காக இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு அரசு அலுவல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது பற்றிய தகவல் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது."
"பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நினைக்கிறேன்," என்று அவர் தெரிவித்து உள்ளார்.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் அதிக முக்கியத்துவத்துடன் கையாளப்பட வேண்டிய சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி- மணிப்பூர் கலவரம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் ஏற்பட்டு வரும் சாதி, மத மோதல் தொடர்பான பதற்ற நிலை, இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை, தற்போதைய பொருளாதார நிலை காரணமாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பல்வேறு விவகாரங்கள் பற்றி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நம்புவதாக சோனியா காந்தி மேலும் தெரிவித்தார்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
- தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிகள் ஆலோசனை நடத்தின.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அல்லது முன்னாள் தலைவர் சோனியா இருவரில் ஒருவர் கடிதம் எழுதவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம், வேலைவாய்ப்பு பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, இமாச்சல பிரதேசம் மழை வெள்ள பாதிப்பு, பாரத் பெயர் மாற்றம் விவகாரம், அதானி விவகாரம் உள்பட 10 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இது தவிர இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டமும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த சிறப்பு கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்துகிறார். சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய மக்களின் பிரச்சினைகள் என்ன? மத்திய அரசு முக்கிய மசோதாக்களை கொண்டு வந்தால் எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டமும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சோனியா காந்தி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.