என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jawaharlal Nehru"

    • காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை.
    • கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் மலர் தூவி மரியாதை.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    • நேரு "ரோஜாவின் ராஜா" என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
    • ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர் நேரு.

    இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேசிய தலைவர்களில் முக்கியமானவர், பண்டிட் ஜவகர்லால் நேரு.

    1889ல், இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலகட்டத்தில், உத்தர பிரதேச மாநில பிரயாக்ராஜ் (அப்போதைய அலகாபாத்) பகுதியில், மோதிலால் நேருவிற்கும், ஸ்வரூப் ராணி நேருவிற்கும் மகனாக பிறந்தவர் நேரு.

    இங்கிலாந்தில் சட்டக்கல்வி படித்த நேரு, 1912ல் இந்தியாவிற்கு திரும்பினார். 1916-ல் கமலா கவுல் என்பவரை நேரு மணந்தார். இவர்களின் ஒரே மகள், இந்திரா காந்தி பின்னாளில் இந்திய பிரதமராக பதவி வகித்தார்

    சிறந்த தேசியவாதியான நேரு, இந்திய விடுதலைக்காக போராடினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவர், வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதிலும், தேச விடுதலைக்காகவும், இரு மதத்தினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    நாட்டின் விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் (non-cooperation movement) உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 வருட காலம் (3052 நாட்கள்) சிறை சென்றவர், நேரு.

    நேரு, தனது பதவி காலத்தில் ராணுவம், வெளியுறவுத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை கைவசம் வைத்திருந்து திறம்பட கையாண்டவர்.

    "வேற்றுமையில் ஒற்றுமை" (university in diversity) எனும் கோட்பாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்ததாலும், விஞ்ஞானத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்ததாலும், வாழ்நாள் முழுவதும் பழமைவாத சித்தாந்தங்களிலிருந்து விலகி இருந்தார்.

    "நவீன இந்தியாவின் சிற்பி" (architect of modern India) என அழைக்கப்பட்ட நேரு, தொழிற்சாலைகளை அமைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இன்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலைத்திருக்கும் பல தொழிற்சாலைகள் நேருவின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது சட்டையில், பொத்தானுக்கு அருகே தினமும் ஒரு ரோஜா மலரை விரும்பி அணிந்து வரும் பழக்கம் கொண்டிருந்ததால், நேரு "ரோஜாவின் ராஜா" என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ல் பதவி ஏற்ற நேரு, தனது பதவிக்காலத்திலேயே,1964 மே 27 அன்று மறைந்தார்.

    குழந்தைகள் நலனை மையமாக வைத்தே ஒரு நாட்டின் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என நம்பிய நேரு, ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர். அவரது பிறந்த தினமான நவம்பர் 14, ஒவ்வொரு வருடமும் "தேசிய குழந்தைகள் தினம்" (National Children's Day) என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    • 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்
    • இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவதாக தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விசா ரத்து உள்ளிட்டவற்றுடன் இந்திய அரசு எடுத்த மற்றொரு முக்கிய முடிவு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். இதனால் பாகிஸ்தானின் நீராதாரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

    இந்நிலையில் "1960 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மூலோபாய தவறுகளில் ஒன்றாகும்" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேல் நதிக்கரைப் பகுதியில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருந்தபோதிலும், அப்போதைய அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் கடுமையான அழுத்தத்தின் கீழ், நேரு, சிந்து நதிப் படுகையின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்.

    வலிமைமிக்க சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் பாகிஸ்தானுக்கு வழங்கினார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

    பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 135 மில்லியன் MAF தண்ணீர் கிடைக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவிடம் 33 MAF மட்டுமே மீதமுள்ளது.

    மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் உரிமைகள் சிறு நீர்ப்பாசனம் மற்றும் ஆற்றின் வழியாக ஓடும் நீர் மின் திட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, அவை எந்த அர்த்தமுள்ள சேமிப்பும் இல்லாமல் உள்ளன, இதனால் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நீர் தேவைகள் நிரந்தரமாகச் சமரசம் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த ஒப்பந்தம் இப்போது நிறுத்தப்பட்டதற்கு ஹிமாந்த பிஸ்வா சர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. அங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயம் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது.

    மோடியின் நடவடிக்கைகள், மன்னிப்பு கேட்டு நிற்காமல் தனது நலன்களைப் பாதுகாக்கத் தீர்மானித்த ஒரு புதிய, உறுதியான இந்தியாவின் எழுச்சியைக் குறிக்கின்றன" என்றும் அவர் மேலும் கூறினார். 

    • முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை.
    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எனது மரியாதை. நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
    • காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,

    தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர். 


    வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது

    இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.

    ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.

    சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பண்டித நேருவிடம் தம்பிரான் சுவாமிகள் செங்கோலை வழங்கினார்.
    • செங்கோல் நிகழ்வை அரசியல் ஆதாயத்திற்காக பொய், போலி என்கிறார்கள்.

    சென்னை:

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது.

    பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள்.

    நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக சடங்குகள், நிகழ்வுகள்பொய், போலி என கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அரசு, நீதி மாறாமல் இருக்க செங்கோல் தரப்படுகிறது என தெரிவித்தார்.

    • இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.

    "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.

    நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.

    நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
    • இந்திராகாந்தி 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகி உள்ளார்.

    இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மோடி தற்போது நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்திக்குபிறகு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை வருகிற 15-ந்தேதி பெற உள்ளார்.

    முன்னாள் பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இந்திரா காந்தி 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரையிலும் பிறகு 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். இவர் 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இதில் அவர் 11 முறை தொடர்ச்சி யாக உரையாற்றியுள்ளார்.


    பிரதமர் மோடி கடந்த ஆண்டு, 10 முறை சுதந்திர தின உரையாற்றிய மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.

    பிரதமர் மோடி சுதந்திர தின முதல் உரையை கடந்த 2014-ல் ஆற்றினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம், ஜன்தன் வங்கிக் கணக்கு போன்ற புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது முதல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் வெளியிட்டு வருகிறார்.

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் 82 நிமிடங்களாகும். இது மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகமாகும்.

    முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இதற்கு சற்று நெருக்கமாக உரையாற்றி உள்ளார். 1997-ல் குஜ்ராலின் ஒரே ஒரு சுதந்திர தின உரை 71 நிமிடங்கள் நீடித்தது.


    பிரதமர் மோடியின் உரைகள் 2017-ல் மிகக் குறுகிய நேரமான 55 நிமிடங்களில் இருந்து 2016-ல் மிக நீண்ட நேரமான 94 நிமிடங்கள் வரை வேறுபடுகின்றன.

    அரசு ஆவணங்களின்படி, சுதந்திர தின உரைகளின் சராசரி நேரம் காலப்போக்கில் அதிகரித்தது. 1947-ல்நேரு ஆற்றிய முதல் உரை 24 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன், 1972-ல் இந்திரா காந்தி ஆற்றிய உரையே நீளமானது. இது 54 நிமிடங்கள் நீடித்தது.

    • ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.
    • இவர் பிறந்தநாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

    ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். அவர் 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் பிறந்தநாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

    இவர் இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட காலம் பிரதமராக நேரு இருந்துள்ளார். 1947 முதல் 1964 வரை பிரதமராக இருந்துள்ளார்.

    அவரது ஆட்சியில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை:-

    1947-ம் ஆண்டு 0.72 சதவீதம் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1950-களில் 4 சதவீதமாக உயர்ந்தது.

                                                                        பாபா அணு ஆராய்ச்சி மையம்

    1950-ம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் ஜனநாயகத் திருவிழாவுக்காக தேர்தல் ஆணையமும் நிறுவப்பட்டது. மேலும் இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையமும் இதே ஆண்டில் உருவாக்கப்பட்டது.

                                                                            இந்திய தேர்தல் ஆணையம் 

    1951-ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தப்பட்டது. நாட்டின் தலைசிறந்த கல்விக்கூடமான ஐஐடி தொடங்கப்பட்டது.

                                                                                                        ஐஐடி

    1952-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்) நிறுவப்பட்டது. பயணிகளுக்கானப் பெட்டிகளை தயாரிக்க சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். ஐ.சி.எப் பல்வேறு நாடுகளூக்கு இரயில்பெட்டிகளை ஏற்றுமதி செய்கின்றது.

                                                                                    ரெயில் பெட்டித் தொழிற்சாலை

    1953-ம் ஆண்டு தனியார் நிறுவனமான டாடா குழுமத்திடம் இருந்து ஏர் இந்தியா, மக்களின் நலன் கருதி அரசுடைமை ஆக்கப்பட்டது.

                                                                                                    ஏர் இந்தியா

    1954-ம் ஆண்டு உலகின் மிகப் பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பு பணிகள் தொடங்கியது. பக்ரா நங்கல் அணையின் பணிகள் 1955-ல் தொடங்கி 1963-ல் நிறைவடைந்தது. இது தற்போது குவிய நீர் ஆணையம் என அழைக்கப்படும் குவிய நீர் மற்றும் மின் ஆணையத்தால் திட்டமிடப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

                                                                                                    பக்ரா நங்கல் 

    1955-ம் ஆண்டு குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    1956-ம் ஆண்டும் நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட்டது. அதே ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவப்பட்டது.



                                                                                    எய்ம்ஸ் மருத்துவமனை

     இதனை தொடர்ந்து 1962-ம் ஆண்டு விண்வெளியில் சாதனை படைக்க இஸ்ரோ தொடங்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் செலவில் செயலாற்றப்படுகிறது.


                                                                                                    இஸ்ரோ 

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 132வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நேருவின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளம் வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாளான இன்று அவரின் சிறப்புக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். #JawaharlalNehru #ChildrensDay
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

    நேருவின் 129-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-



    நமது முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்”. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

    குழந்தைகள் மீது பிரியம் கொண்ட நேரு, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரது நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  #JawaharlalNehru #ChildrensDay
    ×