என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Narendra Modi"
- ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். மூன்றாவது முறை இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மேலும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதுதவிர பிரதமர் மோடி முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi arrives at Delhi airport after concluding his 3-day US visitDuring his visit, he attended the QUAD Leaders' Summit and the Summit of the Future (SOTF) at the United Nations in New York. Along with that, he held some key bilateral… pic.twitter.com/67ASkxeoO6
— ANI (@ANI) September 24, 2024
- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியப் பிரச்சினை குறித்த எனது கடிதத்திற்கு நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை?
கொல்கத்தா:
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய பிரச்சனை குறித்த எனது கடிதத்திற்கு தாங்கள் பதில் அனுப்பாதது ஏன்?
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை உணராது மத்திய அமைச்சர் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்
- நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
புதுடெல்லி:
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இன்று 140 கோடி மக்களாக இருக்கும் நாம் ஒன்றுபட்டால் 2047 க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம்.
இந்த ஆண்டும், கடந்த சில ஆண்டுகளாகவும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள் நம்மை கவலை கொள்ள செய்கிறது. இயற்கைப் பேரிடரில் பலர் தங்கள் குடும்ப சொந்தங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர். தேசமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இன்று, அவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்
ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. நாடு முழுவது் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதன் உற்பத்தியில் பெருமை கொள்ள தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தார்.
- இது பிரதமர் மோடியின் 11-வது சுதந்திர தின உரையாகும்.
- மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.
இந்நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார். மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
- நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
- டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சுதந்திரத்தினத்துக்கு முன்பு அல்லது அடுத்த நாள் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் பேசியதை இடைமறித்து கேட்ட உளவுத் துறையினர் இதுபற்றி மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லி அல்லது பஞ்சாபில் நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
- இந்திராகாந்தி 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகி உள்ளார்.
இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மோடி தற்போது நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்திக்குபிறகு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை வருகிற 15-ந்தேதி பெற உள்ளார்.
முன்னாள் பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இந்திரா காந்தி 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரையிலும் பிறகு 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். இவர் 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இதில் அவர் 11 முறை தொடர்ச்சி யாக உரையாற்றியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு, 10 முறை சுதந்திர தின உரையாற்றிய மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.
பிரதமர் மோடி சுதந்திர தின முதல் உரையை கடந்த 2014-ல் ஆற்றினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம், ஜன்தன் வங்கிக் கணக்கு போன்ற புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது முதல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் வெளியிட்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் 82 நிமிடங்களாகும். இது மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகமாகும்.
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இதற்கு சற்று நெருக்கமாக உரையாற்றி உள்ளார். 1997-ல் குஜ்ராலின் ஒரே ஒரு சுதந்திர தின உரை 71 நிமிடங்கள் நீடித்தது.
பிரதமர் மோடியின் உரைகள் 2017-ல் மிகக் குறுகிய நேரமான 55 நிமிடங்களில் இருந்து 2016-ல் மிக நீண்ட நேரமான 94 நிமிடங்கள் வரை வேறுபடுகின்றன.
அரசு ஆவணங்களின்படி, சுதந்திர தின உரைகளின் சராசரி நேரம் காலப்போக்கில் அதிகரித்தது. 1947-ல்நேரு ஆற்றிய முதல் உரை 24 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன், 1972-ல் இந்திரா காந்தி ஆற்றிய உரையே நீளமானது. இது 54 நிமிடங்கள் நீடித்தது.
- குஜராத் மாநிலம் கிர் பகுதியில் அதிக சிங்கங்கள் வசிக்கின்றன.
- சர்வதேச பிக் கேட் கூட்டணியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். இதுதொடர்பாக சிங்கங்களின் சில பிரமிக்க வைக்கும் படங்களை பகிர்ந்துள்ள அவர் எக்ஸ் தளத்தில்,
கம்பீரமான பெரிய பூனைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இந்தியாவில் குஜராத் மாநிலம் கிர் பகுதியில் அதிக சிங்கங்கள் வசிக்கின்றன. பல ஆண்டுகளாக அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது ஒரு சிறந்த செய்தி.
இந்த ஆண்டு பிப்ரவரியில், பெரிய பூனைகள் வசிக்கும் உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் வகையில் சர்வதேச பிக் கேட் கூட்டணியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது நிலையான வளர்ச்சியை அதிகரிக்க ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க முயல்கிறது மற்றும் இது சம்பந்தமாக சமூக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த முயற்சிக்கு உலகளவில் உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
கம்பீரமான ஆசிய சிங்கத்தை பார்க்க அனைத்து வனவிலங்கு பிரியர்களையும் கிருக்கு அழைக்கிறேன். சிங்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைக் காணவும், அதே நேரத்தில் குஜராத் மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்கவும் இது அனைவருக்கும் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
On World Lion Day ?, I compliment all those working on Lion conservation and reiterate our commitment to protecting these majestic big cats. India, as we all know, is home to a large Lion population in Gir, Gujarat. Over the years, their numbers have increased significantly,… pic.twitter.com/PbnlhBlj71
— Narendra Modi (@narendramodi) August 10, 2024
- இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிர கேட்டுக்கொள்கிறேன்
புதுடெல்லி:
இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற இந்த பிரசாரத்தை இந்த ஆண்டும் மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக தனது எக்ஸ் தளத்தின் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற பிரசாரத்தை மீண்டும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். எனது எக்ஸ் தள முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறேன். நீங்களும் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிரவும் கேட்டுக்கொள்கிறேன்' என கேட்டுக்கொண்டு இருந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றுமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
As this year's Independence Day approaches, let's again make #HarGharTiranga a memorable mass movement. I am changing my profile picture and I urge you all to join me in celebrating our Tricolour by doing the same. And yes, do share your selfies on https://t.co/0CtV8SCePz
— Narendra Modi (@narendramodi) August 9, 2024
- பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்
- வினேஷை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார்.
ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தங்கம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2.30 அளவில் நடக்க உள்ளது.
முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். அவர் உள்ளிட்ட மற்றைய வீரர்கள் மீது கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.
இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடன் களத்தில் நின்று போராடிய சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது சமூக வலைதள பக்கத்தில், 'பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், அவர் மீண்டும் 'இந்தியாவின் மகள்' ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று மதியம் நடந்த காலிறுதி போட்டியில் வினேஷ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பஜ்ரங் புனியா வெளியிட பதிவில்,'பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.
- மாநிலங்களவையில் பாஜக எம்.பி எம்.பி பீம் சிங் தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.
- இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது.
நாடு முழுவதும் நகரமயமாக்கலை அதிகரித்து ஹை- டெக் நகர்களை உருவாக்கி அதற்கு நமோ நகர்கள் என்று பெயரிட வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது. பீகாரைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி பீம் சிங்கொண்டுவந்துள்ள இந்த மசோதாவில் , நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமங்களை விட நகர மக்கள் அதிக முன்னேற்றம் அடைத்துள்ளன.
ஆனாலும் நகரமயமாக்கல் குறைந்த அளவே நடந்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு [பாஜக]அரசு கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்தி, நகரமயமாக்கலை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக சண்டிகர் மாநிலத்தில் சமீப காலங்களாக நகரமயமால் மூலம் அதிக பொருளாதார நன்மைகள் கிடைத்து வருகிறது.
அவ்வாறு நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்படும் ஹை- டெக் நகரங்களுக்கு நமோ நகர் என்று பெயரிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் 'ந'ரேந்திர 'மோ'டியின் பெயரை சுருக்கி நமோ என பாஜவினர் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.
- இந்தியாவை முன்னேற்றும் இலக்கின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டு சிலாகித்தார்.
- கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்பபோவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் திட்டத்தை நேற்று காணொளி காட்சி வாயிலாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2047 க்குள் இந்தியாவை முன்னேற்றும் இலக்கின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டு சிலாகித்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் நடந்த பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ பன்னலால் ஷக்யா, படித்து டிகிரி வாங்குவதால் எந்த பயனும் இல்லை, மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நாம் இன்று பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸஸை தொடங்கி வைக்கிறோம். கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்பபோவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். டிகிரி வாங்குவதால் எந்த பயனும் இல்லை, எனவே மாணவர்கள் குறைந்தபட்சம் மோட்டார் சைக்கிள் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார்.
- சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்.
இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அந்த வகையில்பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது, மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்பதை காட்டுகிறது.
இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.
பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி பாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்