என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Floral tributes"

    • காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை.
    • கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் மலர் தூவி மரியாதை.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    • மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

    ஊட்டி,

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு 1867-ல் பணி நிறைவடைந்தது.

    சுமாா் 19 ஆண்டுகள் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்த மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

    ஊட்டியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவரது நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அவருடைய 147-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்க ப்பட்டது. இதையொட்டி தோட்டக் கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஆலய பங்குத் தந்தை சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா்.

    • எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை
    • தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்Anna's memorial day

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    அவருடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், வழக்கறிஞர், ஆ.பழனி, நிர்மலா பெரியசாமி, டி.கே.எம்.சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக் கண்ணன், கே.பி.கந்தன், தி.நகர், சத்யா, ராஜேஷ், பாலகங்கா உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதுகுறித்து சமூக வலை தளபக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்! இருள்சூழ் தமிழ்வானுக்கு

    காஞ்சி வழங்கிய ஒளி வெள்ளி! அரசியல் பகை வரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, 'நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்' பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக்கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி என்பவர் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது.

    குயிலி ஆயுதக்கிடங்கை அழித்த 242-வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள குயிலியின் நினைவுத் தூணுக்கு அனைத்து சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டீபன், சிவாஜி, கோபி, ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    ராணிபேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகம் முன்பு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் பூங்காவனம், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத்,குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக முத்துக்கடை,நவல்பூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    ×