என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
- ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது
- ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
ராணிபேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகம் முன்பு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் பூங்காவனம், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத்,குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக முத்துக்கடை,நவல்பூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
Next Story






