என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள் வாழ்த்து"

    • என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
    • பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.

    பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி கமல்ஹாசன் இன்று மாலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இததுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை.
    • கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் மலர் தூவி மரியாதை.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    • சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமான் இன்று 59-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில்," இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் சீமான் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உன் தாடி முளைத்தபோது

    சமூகத்துக்கு மீசை முளைத்தது

    இருட்டுச் சுவர்

    இடியத் தொடங்கியது

    கி.மு - கி.பி பழைய கணக்கு

    பெ.மு - பெ.பி புதிய கணக்கு

    நூற்றாண்டுகளாய்

    எங்கள் புலிகள்

    ஆடுகளுக்குப்

    புல்பறித்துக் கொண்டும்

    பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

    நகத்தில் கூர்மையும்

    முகத்தில் மீசையும்

    உண்டென்பதை

    புலிகளுக்கு நீதான்

    புலப்படுத்தினாய்

    நீறுகளை ஊதி

    நெருப்பை அடையாளம்காட்டிய

    சுற்றுப்பயணச் சூறாவளி நீ

    வர்க்கப் போரின்

    இன்னோர் வடிவம்

    உன் தர்க்கப்போர்

    நீ சொன்ன பிறகுதான்

    செருப்புத் தைத்தவன்

    கையில் இருந்ததைக்

    காலில் அணிந்தான்

    நிர்வாணமாய்

    நெசவு செய்தவன்

    ஆடை சூடினான்

    கலப்பையில் எழுதியவன்

    காகிதத்தில் எழுதினான்

    சூரியன் வந்ததும்

    உடுக்கள் என்னும்

    வடுக்கள் மறைவதுபோல்

    உன் வருகையால்

    வெள்ளை அழுக்கு

    வெள்ளாவிவைத்து

    வெளுக்கப்பட்டது

    பழைமைவாதப் பாம்படித்ததும்

    ஓலைக் குடிசைகளின்

    ஒட்டடை அடித்ததும்

    புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

    சிலம்பம் சுற்றியதும்

    உனது ஒற்றைக் கைத்தடிதான்

    மூலக்கூறு பிரித்தால்

    கடைசிவரை

    தங்கம் தங்கம்தான்

    உன் மரணத்தின்

    முன் நிமிடம்வரை

    நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

    கருப்பு நிலக்கரி வைரமாகக்

    காலம் ஆகும்

    கருப்பு வண்ணம் புரிதல்பெற

    இன்னும் ஒரு யுகமாகும்

    புகழ் வணக்கம்.

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து !
    • ஜூலை 25-ஆம் தேதி, எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் வாழ்த்த முடியாமல் போனது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மருத்துவர் அய்யாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து !

    பா.ம.க. நிறுவனர் தலைவர், மருத்துவர் அய்யா ராமதாசுக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, 'உங்கள் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் தேதி, எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் அன்றைய நாளில் வாழ்த்த முடியாமல் போய் விட்டது' என்று தெரிவித்தார்

    அப்போது, அய்யா அவர்கள், "நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமரை வாழ்த்தினார்.

    அய்யாவின் வாழ்த்தை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், முன் மாதிரியாக நீங்கள் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்" என்று அய்யாவை வாழ்த்தி மகிழ்ந்தார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக அவர் இருந்து வருகிறார்.

    திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஜூலை 6 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    இதைமுன்னிட்டு தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்நிலையில், தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளையொட்டி 140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக அவர் இருந்து வருகிறார்.

    அவரது செய்தி அனைத்து மதங்களிலும் மரியாதை, போற்றுதலை தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்.

    என விஜய் கூறினார்.

    • மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் துவங்கி வைத்தார்.

    சென்னை:

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் துவங்கி வைத்தார். 

    இதனையடுத்து மக்களின் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ரத்ததான நிகழ்ச்சியை விஜய் வசந்த் துவங்கி வைத்தார்.

    முன்னதாக, நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 11.8 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இன்று அங்கன்வாடி கட்டிடம் சிறுவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.



     


    • ஜனாதிபதி இன்று அவரது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    நமது நாட்டில் பெண்கள் அதிகாரமளிப்பின் ஒளிரும் சின்னமாக நீங்கள் திகழ்கிறீர்கள்.

    நீங்கள் நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்திச் செல்லும்நிலையில், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது. அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞரை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன் என கூறினார்.

    • வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "தமிழ் எங்கள் உயிரென்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளை இன்று தொண்டர்களோடு கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    பிறந்த நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



    ×