என் மலர்
இந்தியா

90-வது பிறந்தநாள் கொண்டாடும் தலாய் லாமா- பிரதமர் மோடி வாழ்த்து
- தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக அவர் இருந்து வருகிறார்.
திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஜூலை 6 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதைமுன்னிட்டு தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில், தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளையொட்டி 140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக அவர் இருந்து வருகிறார்.
அவரது செய்தி அனைத்து மதங்களிலும் மரியாதை, போற்றுதலை தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.