search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "birthday wishes"

  கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami
  சென்னை:

  கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், “தங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில் உங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை புரிய நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

  அதைத் தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் 54-வது பிறந்தநாளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #GKVasan #Pranabmukherjee
  சென்னை:

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 54-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கஜா புயல் பாதித்த மாவட்டப் பகுதிகளில் த.மா.கா.வினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் உதவிகள் செய்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

  கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போன்ற வழிப்பாடுத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் கொடுக்கப்படுகின்றன.

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.ஆண்டனி, நீரஜ் சந்திரசேகர், சுப்ரியா சுலே எம்.பி., பா.ஜனதா மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன், தத்வா பிரகாஷ் சத்பதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலின் தியோரா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜித்தின் பிரசாத், சச்சின் பைலட், கவிஞர் வைரமுத்து, நடிகர் விவேக் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். #GKVasan #Pranabmukherjee
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணுவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nallakannu #KamalHaasan

  சென்னை, டிச. 26-

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணு இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை யொட்டி, தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சிங்கப்பூரில் இருந்து டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். அவரது வாழ்த்து செய்தியில் ‘இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் நல்லக்கண்ணு அய்யா விற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்ல வற்றையும் வாழ்த்துவோம் மனதார...’ என்று குறிப்பிட் டுள்ளார்.

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலிக்கும் வாழ்த்து கூறியுள்ளார். #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மேகன் சிங் இன்று 86-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.  இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

  ‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

  தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #TNCM #EdappadiPalaniswami #HappyBirthDayPM #HappyBdayPMModi
  சென்னை:

  பிரதமர் நரேந்திரமோடி 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

  வாழ்த்து கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-


  பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

  மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami  #HappyBirthDayPM #HappyBdayPMModi
  ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #MehboobaMufti
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஜம்மு காஷ்மீரின் முதல்வர் மெகபூபா முப்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்’ என மோடி பதிவிட்டுள்ளார். #modiwishes #MehboobaMufti
  ×