என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Vasanth"

    • சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.

    நாகர்கோவில் பெருவிளை பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தினார்.
    • தேங்காய்பட்டணம் துறைமுக புனரமைப்பு பணிகளை கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் மணல் திட்டு காரணமாக அவ்வப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்க வேண்டி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, துறைமுக முகத்துவாரத்தைச் சீரமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று முகத்துவாரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகளுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    கால நிலை ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்படும். அருகில் உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியும் விரைவில் துவங்கும்.

    கடந்த ஆட்சியில் மீனவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பணிகள் செய்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை மீனவ மக்களின் ஆலோசனை பெறப்பட்டே பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், மீனவர் அணி மாவட்ட தலைவர் கென்னடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், வார்டு உறுப்பினர் கிளிட்டஸ் மற்றும் சுனில், சகாயதாஸ், சவுகத்அலி, சேக், சமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார் .
    • அந்த நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்

    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார் .

    அப்போது அவரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி.,விஜய் வசந்த் கூறியதாவது;

    அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனி பிரசவ வார்டு அறை அமைக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.

    அதேபோல், தற்போதுள்ள பிரசவ வார்டில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார் .

    இந்த ஆய்வின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சீதா, முடயியல் இயக்குனர் கனி, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் கிங்சிலின், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னம்பெருமாள், நிர்வாகிகள் டேனியல், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கீரிப்பாறையில் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொழிலாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    கன்னியாகுமரி:

    கீரிப்பாறையில் செயல்படும் அரசு ரப்பர் தோட்டத்தில் காளிகேசம், பரளியாறு, மணலோடை ஆகிய 4 பிரிவுகளிலும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கான ஊதிய உயர்வு என்பது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காததால், கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன் தோட்டக்கலை தொழிலாளர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நியாயமான கோரிக்கைக்காக தொழிலாளர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோட்டக்கலை தொழிலாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய விஜய் வசந்த் எம்.பி., உறுதி செய்யப்பட ஊதிய உயர்வு தற்போது வரை வழங்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருந்து வரும் நிலையில் அரசு அறிவித்த ஊதிய உயர்வை ரப்பர் கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி ரப்பர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

    மேலும், கீரிப்பாறை செல்லும் சாலைகள் விரைந்து செப்பனிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் கூறினார்.

    இந்த நிகழ்வின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், பொதுச்செயலாளர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் மஞ்சுஸா, மாவட்ட செயலாளர் சகாயராஜ், வர்த்தக பிரிவு மாநில செயல் தலைவர் ராமசாமி, ஐ.என். டி. யூ.சி கிழக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜா, சட்ட ஆலோசகர் ஜான் செளந்தர், அழகியபாண்டியபுரம் கிராம தலைவர் காங்கிரஸ் ராமதாஸ், அழகியபாண்டியபுரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராபி, நிர்வாகிகள் ஜினோ, ஜோசப் ஜெரால்டு சீலன், மாசிலாமணி, சுந்தரராஜ், செய்யது அலி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியினைக் கட்ட அடிக்கல் நாட்டினார்
    • இத்திட்டத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றினை கட்டி தரும்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியினைக் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டினார்

    இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சீனிவாசன், வட்டார தலைவர் முருகானந்தம், வட்டார பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, வர்த்தக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் முருகேசன், திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்துமதி, வார்டு உறுப்பினர் முகிலா, தோவாளை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் கனகப்பன், செண்பகராமன்புதூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் நிலாமணி, தாழக்குடி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் டேவிட்சிங், ஆரல்வாய்மொழி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் நேசமணி, பீமநேரி ஊராட்சி காங்கிரஸ் தலைவர் முத்துமணி, சிறுபான்மை பிரிவு தலைவர் முகைதீன் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாகர்கோயில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.
    • அவரது இல்லத்திற்கு சென்ற கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இறுதி மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.

    இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.சி.பாலன் துணைவியார் திருமதி வசந்தா பாலன் அவர்கள் மறைவு செய்தி அறிந்து அவர் இல்லத்திற்கு சென்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

    அவரது மறைவால் பிரிந்து வருந்தும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

    • இமாச்சல் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.
    • ஆளும் கட்சியான பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது.

    கன்னியாகுமரி:

    இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இன்று இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றி நமது கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த வெற்றி முதல் படி. இந்த வெற்றிக்காக உழைத்த இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த வெற்றியின் உழைப்புக்கு உத்வேகம் அளித்த அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருமதி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம்.பி. விஜய் வசந்தைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
    • ஊர்மக்கள் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் இன்று அங்கு ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள ஊட்டுவாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நகர பகுதிக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் மக்கள் பயணம் செய்ய மிக சிரமப்படுகின்றனர். இதனால் ஊர்மக்கள் எம்.பி. விஜய் வசந்தைச் சந்தித்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், இன்று அந்த ஊர்களில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், விரைவில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர் கண்ணன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசை ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • இந்தியாவின் மிக முக்கிய நபர்கள் ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் கொடுத்து நடந்து செல்கின்றனர்.
    • யாத்திரையை வழிநடத்திச் செல்லும் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மனவலிமை பாராட்டப்பட வேண்டியது.

    கன்னியாகுமரி:

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், 100-வது நாளை எட்டியதையடுத்து, காங்கிரசார் கொண்டாடிவருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    பாசிச சக்திகளிடம் இருந்து இந்தியாவை விடுவித்து இந்தியர்களை ஒன்றிணைக்கும் நல்நோக்கத்துடன் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று நமது கன்னியாகுமாரியில் இருந்து தொடங்கிய #இந்திய_ஒற்றுமை_பயணம் இன்று நூறாவது நாளை எட்டி இருக்கிறது.

    இந்தப் பயணம் வெற்றி அடையுமா என்று சந்தேகம் எழுப்பியவர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாளுக்கு நாள் மக்கள் பேராதரவுடன் இது ஒரு வெற்றிப் பயணமாக சென்று கொண்டிருக்கிறது.

    தினமும் லட்சக்கணக்கான மக்கள் இணையும் இந்த யாத்திரையில் இந்தியாவின் மிக முக்கிய நபர்களும் கலந்து கொண்டு தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நடந்து செல்கின்றனர்.

    இந்த யாத்திரையை வழிநடத்திச் செல்லும் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மனவலிமை பாராட்டப்பட வேண்டியது. இரண்டு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றபோதும், ஓட்டுகள் வெல்வதை விட இரண்டு மாநிலங்களை வெல்வதை விட இந்தியாவை ஒன்றிணைப்பதே முக்கியம் என்ற குறிக்கோளுடன் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்த யாத்திரையில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பிரத்தியேக பாராட்டு மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வெயில் என்றும் மழை என்றும் பனி என்றும் பாராமல், கால்கள் தளர்ந்து விடாமல், மனம் சோர்ந்து விடாமல் இந்தியாவை ஒன்றிணைப்பது லட்சியம் என்ற குறிக்கோளுடன் நடந்து செல்லும் இவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

    இந்தப் பயணம் வெற்றிகரமாக கடந்து சென்ற அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பை மட்டும் தூவி செல்லும் இந்த யாத்திரை இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வரும் நாட்களிலும் இந்த பயணம் இன்னும் பலம் பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.

    • கக்கன் நினைவு தினம், முன்னாள் மந்திரி சிதம்பரநாதன் 111வது பிறந்தநாள்
    • காங்கிரஸ் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கன் நினைவு தினம், தென் எல்லை போராட்ட வீரர், முன்னாள் மந்திரி A.சிதம்பரநாதன் 111வது பிறந்தநாளையொட்டி இருவரின் படங்களுக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் MC, மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், துணை அமைப்பு சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

    • பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நிறுவப்பட்ட புல் குடிலை திறந்து வைத்தார்
    • அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    கன்னியாகுமரி:

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் களை கட்டி உள்ளன. மத பேதமின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையுடன் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அவ்வகையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று பல்வேறு கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளில் மக்களுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

    பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நிறுவப்பட்ட புல் குடிலை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.

    காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் குமார், லாரன்ஸ், ஆரோக்கிய ராஜன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் டைசன், திபாகர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் துணை தலைவர் விஜூ மற்றும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    ×