என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் பண்டிகை"

    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது குழந்தைகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
    • 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆவார். புனித பிரான்சிஸ் அசிசியார் இக்குடிலை கி.பி. 1223ஆம் ஆண்டு கிரேஜ்ஜோ என்கிற இடத்தில் இருந்த துறவற மடத்தின் அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில் அமைந்திருந்த குகையில், செல்வந்தரான ஜியோவான்னி வெலிதா என்பவரின் உதவியுடன் அமைத்தார்.

    ஆனாலும் இயேசுவின் பிறப்பு நிகழ்வு காட்சிகள் திருஉருவங்களாக கி.பி. 1283-ம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் முன்முயற்சியால், டஸ்கன் பகுதியைச் சார்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் காம்பியோ நகர் அர்னோல்போவால் வடிவமைக்கப்பட்டு, மேற்கத்திய பெத்லகேம் என்றழைக்கப்பட்ட புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.

    இந்த பெருங்கோவிலானது 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது. ஏனென்றால், இங்குதான் இயேசுவைத் தாங்கிய தீவனத் தொட்டியின் ஒரு பகுதியானது வைக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸ் மரத்துக்கு என வரலாறு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம், இயேசு நாதரின் முப்பரிமாணங்களாகிய, தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கையில், ஒரு ஊரில், மக்கள் ஓக் மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று, வேர்ப்பகுதியுடன் அதை அடியோடு வெட்டி விட்டுச் சென்றார்.

     

    சில நாட்களில் வெட்டப்பட்ட அந்த மரம் அதே இடத்தில் வளர்ந்து கம்பீரமாக நிற்க, இயேசு நாதரே மீண்டு வந்ததின் அடையாளமாக எண்ணி ஊர் மக்கள் வணங்கினர். சில மாதங்கள் சென்றபின், புனித போனிபேஸ் பாதிரியார் அங்கே வருகையில், அந்த புதிய மரத்தை அதே இடத்தில் கண்டு அதிசயப்பட்டார். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார். 15-ம் நூற்றாண்டில், ஜெர்மானியப் பாதிரியார், தேவாலய காம்பவுண்டினுள் இருந்த 'பிர்' மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். எவர்கிரீன் மரமென 'பிர்' மரம் அழைக்கப்பட்டது. பின்னர் ஓக் மற்றும் பிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. 

    • இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர்.
    • இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மரம் வைத்து, ஸ்டார் தொங்கவிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரித்து இயேசுவின் பிறப்பை கொண்டாடுவர். மத எல்லைகளைத் தாண்டி, அன்பு, கருணை, அமைதி ஆகிய மனிதநேய மதிப்புகளைப் பரப்பும் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    பாவிகளை ரட்சிக்க பாலகனாய் இயேசு அவதரித்த நாள் இது. உலகத்தை இருளில் இருந்து மீட்டு, மக்களின் வாழ்வில் புதிய ஒளியை வழங்க அவதரித்தவர் இயேசு கிறிஸ்து. நமக்காகவே பிறந்த அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள், அவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கிய நாளாக இது அமைகிறது.

    அன்னை மேரியின் கனவில், கேப்ரியல் என்ற தேவதை தோன்றி, அவள் கருவுற்றிருப்பதையும், அவள் ஒரு மகனை ஈன்றெடுக்க போகிறாள் என்றும், அந்த குழந்தை இறைவனின் குழந்தை, தேவ தூதன் என்றும் தெரிவித்தது. அதன்படி மேரி கருவுற்றாள்.

    பிரசவ காலத்தின்போது பெத்லகேமில் இரவு நேரத்தில் எங்கு தங்குவது என தெரியாமல் திகைத்து போய் இருந்த மேரி, ஆடு மேய்ப்பவர் ஒருவரிடம் உதவி கேட்டாள்.

    அவரும் அன்று இரவு தன்னுடைய ஆடு, மாடுகளை பாதுகாக்கும் தொழுவத்தில் தங்குவதற்கு மேரிக்கு இடம் கொடுத்தார். அடுத்த நாள் இயேசு கிறிஸ்துவை, மேரி ஈன்றெடுத்தாள்.

    இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதர் அனைவரும் "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப்பூமியில் நல்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருக்குள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

     

    இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர். ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.

    இயேசு பிறப்பதற்கு முன் உலகில் பல அநியாயங்களும், தீமைகளும் பரவி இருந்தது. தீமைகள் அனைத்தையும் அழித்து, உலகை அமைதியானதாக மாற்றினார் இயேசு கிறிஸ்து.

    இயேசுகிறிஸ்து ஆண்டவனின் ஒரே குமாரன். அவரை தேவன் நினைத்திருந்தால் ஏதேனும் ஓர் அரண்மனையில் பிறக்க வைத்திருக்கலாம். ராஜாவாக வாழ வைத்திருக்கலாம். சகல ஜனங்களையும் அவருக்குக் கீழ்படியுமாறு செய்திருக்கலாம். இன்றைக்கு பலரும் தன் மகனை எப்படி வாழ வைக்க வேண்டும் என்னும் பெருங்கனவோடு இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அந்த இறைவன் தன் மகனை ஒரு தொழுவத்தில் பிறக்கவும், கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். காரணம் இறைவன் தான் விரும்புவது எளிமையின் ரூபமே என்பதை உணர்த்த விரும்பினார். அந்த எளிமை அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.

    "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்" -ஏசாயா (9 : 16)

    கிறிஸ்து பிறப்புக்கு முன்பாக 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா கூறிய தீர்க்க தரிசனம் இது.

    "இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)

    இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 என்பது முதன் முதலாக கி.பி.154-ம் ஆண்டு போப் ஜூலியசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி இதுதான் என முதன் முதலில் அடையாளம் காணப்பட்டு அன்றைய நாள் முதல் டிசம்பர் 25 அன்று உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    இயேசு கிறிஸ்துவானவர் ஒவ்வொருவர் இருதயத்திலே பிறந்து, அவருடைய பண்புகளாலும், செய்கைகளாலும் அன்பும் கருணையும் நிறைந்தவர்களாய் காணப்படுவதே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உண்மையான நோக்கமாகும். இயேசுவானவர் பிறப்பினாலும், அவர் வார்த்தையினாலும் கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அறிவித்து உதவி செய்து வாழ்வதே உன்னதமாகும்.

    `மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக, மனிதர்களை மீட்பதற்காக பிறந்த இயேசு, நமக்காக மரித்தார்' என்று சொல்லும் வேளையில் அவருக்காக அவரது அன்புக்காக அவருக்கு நாம் செய்யவேண்டியது என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்த நாளில் அவர் கூறிய பரிசுத்த வழியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் சேர்த்து கொண்டாடுவோம்.

    • கிறிஸ்துமஸ் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்.
    • இந்த கிறிஸ்துமஸ் நம்பிக்கையையும், அரவணைப்பையும் கொண்டுவரட்டும்

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மீட்பின் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

    இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்திகளைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்.

    இந்த கிறிஸ்துமஸ் நம்பிக்கையையும், அரவணைப்பையும், கருணைக்கான ஒருமித்த உறுதிப்பாட்டையும் கொண்டுவரட்டும்" என்று தெரிவித்தார்.

    • கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அந்தவகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதய ராஜ் மற்றும் பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வானதேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்ட்டது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்கு தந்தை அற்புதராஜ் அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறப்பு செய்தியை அறிவித்தார்.

    அப்போது குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு, பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர்.

    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் சந்தானம் சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சந்தனத்தை ரசிகர்கள் செல்லமாக சாண்டா என்று கூப்பிடும் நிலையில், சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டா என்று ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
    • இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
    • இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    அனைவருக்கும் அமைதி, இரக்கம், நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார்.
    • இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    மன்னிப்பது மட்டுமே மகத்தான மனிதகுணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.

    இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஆகும்.

    இயேசு பிரான் போதித்ததைப் போலவே உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்; கருணை காட்டுவோம். அதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழாயில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

     

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழா மற்றும் அலங்கார விளக்குகள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., கலந்து கொண்டு தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

     

    • இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
    • சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.சி.சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குறிப்பாக சென்னை சாந்தோம் தேவாலயம், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கதீட்ரல் பேராலயம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், நாகை வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.

    • இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நாளை (23-ந் தேதி)யுடன் முடிகிறது. அதைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 5-ந்தேதி திறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் நாளை முதல் விடுமுறை அளித்துள்ளது.

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வெளியூர் பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார்கள். விடுமுறை நாட்களை கணக்கிட்டு ரெயில்களில் முன்பதிவு செய்து உள்ள தால் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரெயில்கள், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 325 பஸ்களும் 24-ந் தேதி 525 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23, 24-ந் தேதியில் மொத்தம் 91 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2025 பஸ்களுடன் கூடுதலாக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    அரசு பஸ்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×