என் மலர்
நீங்கள் தேடியது "kanyakumari"
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
- 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
- சுஜிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் ஆன 18-வது நாளில் (நவம்பர் 21) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் அப்பெண் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் நான் உங்களை திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் ஓரளவு நிரம்பி உள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் பயிர் நடவு பணி நடந்து வருகிறது.
அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 9 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. தக்கலை, இரணியல், குலசேகரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை நீடித்தது.
திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.96 அடி யாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.30 அடியாக உள்ளது. அணைக்கு 307 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது.
- சுப்பிரமணிய சாமி மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகைகத்பட், மேயர் மகேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

"கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குமரி மாவட்டத்தில் 60,702 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைகள் உள்ளன. 2 லட்சத்து 30 ஆயிரத்து 662 நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பி.எச்.எச். குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 286 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்ததால் 'குளுகுளு' சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை வரை மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீர் திடீரென மழை பெய்தது.
கன்னியாகுமரி பகுதியிலும் மழை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கொட்டாரம், மயிலாடி, இரணியல், குழித்துறை, தக்கலை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு திரளாக வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்தது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது. அணைக்கு 874 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 477 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.04 அடியாக உள்ளது. அணைக்கு 745 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 20.50 அடியாக உள்ளது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் கரை திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 41, பெருஞ்சாணி 47.6, சிற்றார்1-55.4, சிற்றார் 2-46.6, கொட்டாரம் 26.6, மயிலாடி 2.6, நாகர்கோவில் 13, ஆரல்வாய்மொழி 4, முக்கடல் 5.8, பாலமோர் 12.2, தக்கலை 11, குளச்சல் 14, இரணியல் 8, அடையாமடை 12.4, குருந்தன் கோடு 11, கோழிப்போர்விளை 8, மாம்பழத்துறையாறு 26.6, ஆணைக்கிடங்கு 25, களியல் 40, குழித்துறை 10.8, புத்தன் அணை 42.8, சுருளோடு 34.2, திற்பரப்பு 48.6, முள்ளங்கினாவிளை 6.4.
- சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னை:
தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை 16-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் பகல் 1.25 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.
இந்த ரெயில் 17-ந் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகிறது. இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் 17, 18-ந்தேதியில் சென்ட்ரலில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்று அடைகிறது. 18-ந்தேதி போத்தனூரில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.10 மணிக்கு சென்ட்ரல் வந்து அடைகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
- பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
- தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதலமைச்சரை இன்று சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பின்போது தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
குமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ள காரணத்தால் அண்டை மாவட்டத்தில் இருந்து 4 வழி சாலை பணிகள் மற்றும் ரெயில் இரட்டிப்பு பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தற்போது மண் தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் தேவைகளுக்கும் மண் தேவைபடுகிறது. ஆகவே தட்டுபாடின்றி மண் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும், இயற்கை சீற்றத்திலிருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், குமரி மக்களின் நெடு நாள் கனவான குமரி விமான நிலையம் சாத்தியம் ஆகும் வகையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் குளங்களை தூர் வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
- நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
- பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரையிலான நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை 56% பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குமரி மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் TTK கன்ஸ்ட்ரக்ஷன் ஆன்ஸ்ட்ராஜ், நகாய் ரவிச்சந்திரன் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை கூடிய விரைவில் அர்ப்பணிக்க ஆவன செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை, தண்ணீர் வரும் பகுதிகள் அடைக்க படுவதாக மனுக்கள் வந்துள்ளன, விவசாயத்துக்கு எந்த வித இடர்பாடுகள் வராமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அவருடன் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கிறிஸ்டிரமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
- உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான்.
- தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

கையெழுத்து இயக்கத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி பேசுகையில், உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான், மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்து இருப்பது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க.வினர் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி காண நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பின்படி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்துகள் வாங்கிடவேண்டும் என்றார்.

இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மகேஷ் லாசர், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ், மண்டல தலைவர்கள் சிவபிரபு, ஐரின் சேகர், மகளிரணி சோனிவிதுலா, கவுன்சிலர்கள் சந்தியா, அனுஷாபிரைட் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டது
- நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது.
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது.
இந்நிலையில், விரிசல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டு புதிதாக கண்ணாடி பொருத்தப்பட்டது.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.






