என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த்"

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.

    பாராளுமன்ற வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    • நுள்ளிவிளை பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிராம மக்களின் அன்றாட வாழ்வு தடைபடும்.
    • முடிவில் பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரெயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்காக நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரெயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து அந்த பணியினை நிறுத்தி வைக்கும் படி கேட்டுக்கொண்டார்.

    கோரிக்கை ஏற்ற ரெயில்வே நிர்வாகம் அந்த பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைத்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில் பாதை இரட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக நுள்ளிவிளையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் விரிவுபடுத்த தற்பொழுதுள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுவதற்கு ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.

    இந்த பாலம் இடித்து பணிகள் நடைபெறும்போது நுள்ளிவிளை பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிராம மக்களின் அன்றாட வாழ்வு தடைபடும் என கூறி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தோட்டியோடு– திங்கள் நகர் சாலையில் இது பிரதான பாலம் என்பதால் இதை இடிக்கும் பட்சத்தில் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே புதிய பாலம் கட்டி முடித்த பிறகு பழைய பாலத்தை இடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    இந்த கூட்டத்தில் மக்களின் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்தினைக் கேட்டறிந்து புதிய பாலம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

     

    • பொன். ராதாகிருஷ்ணன் இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானது
    • நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல் ஆகும்.

    டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பியதற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன்.

    பொன். ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானது மற்றும் நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல் ஆகும்.

    டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் இந்த வேளையில் பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை.

    இத்தகைய நெறிமுறையற்ற மற்றும் விஷமக் குரல்கள், அரசியலின் அடிப்படை நாகரிகத்தை சிதைக்கின்றன. நாட்டின் விடுதலைக்காகவும், கிடைத்த விடுதலையை கட்டி காக்கவும் பல தியாகங்கள் செய்த காங்கிரஸ் கட்சி மீதும், நாட்டின் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மக்களோடு பயணித்து வரும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதும் ஆதாரமற்ற வீண் பழி சுமத்திய பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு கண்டிக்கத்தக்கது.

    தேசத்திற்காக நாம் ஒன்றிணைவோம். மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட துடிக்கும் சக்திகளை அடையாளம் காண்போம். நாட்டு மக்கள், உண்மையை அறிந்துள்ளனர். அவர்கள் இந்த மலிந்த அரசியல் நாடகங்களை தள்ளுபடி செய்து, வெறுப்பை விதைக்க முயல்கின்ற சக்திகளுக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது.
    • சுப்பிரமணிய சாமி மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

     

    பிரசித்தி பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு  சாமி தரிசனம் செய்தார்.

    • P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் நடத்தும் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான வாள் விளையாட்டுப் போட்டி ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக பயிற்சி மையத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

    அதன்படி இன்று P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி வாள் விளையாட்டு கழக செயலாளர் அமிர்தராஜ், சுந்தர்ராஜ், இணைச்செயலாளர் ஜோபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாள் விளையாட்டு கழக இணைச்செயலாளர் செல்வி இலக்கியா வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

    விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக தலைவர் சிந்துகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    • கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.

    சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகைகத்பட், மேயர் மகேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    "கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், குமரி மாவட்டத்தில் 60,702 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைகள் உள்ளன. 2 லட்சத்து 30 ஆயிரத்து 662 நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பி.எச்.எச். குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 286 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம்.
    • பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி எம்பி அவர்கள் வெளிகொண்டு வந்த பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக கூறி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் சந்திப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.


    போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கையெழுத்து இயக்க போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய நாடு ஜனநாயக நாடு நமது ஓட்டு உரிமைக்காக போராடுகிறோம். மத்திய அரசை கண்டித்து இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்" மத்திய அரசு அவர்களது ஆட்சியை கொண்டு வருவதற்காக சூழ்ச்சிகள் மூலம் ஓட்டு திருத்தத்தை கொண்டு வந்து பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். யார் வெற்றி பெற வேண்டும் யார் தலைவராக வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் முடிவை இந்த அரசு மாற்றுகிறது. இன்று இதனை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டும் தான், இது குறித்து யாரும் பேசுவதில்லை, ராகுல் காந்தி அவர்கள் தான் பீகாரில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து குரல் கொடுத்தார்.

    பெங்களூரில் பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அதில் அப்பா, அம்மா பெயர்கள் போலியான பெயர்கள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அறையில் 50, 60 பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது, நாம் தமிழகத்தில் வலிமையாக இருப்பதால் அவர்களது வேலையினை இங்கே செய்ய முடியவில்லை, நாம் ஒவ்வொரு வாக்குகளையும் வாக்காளர் பட்டியல்களையும் சரி பார்க்க வேண்டும்.

    நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள் நாம் விழிப்புணர்வுடன் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், நாம் எல்லா இடங்களிலும், எல்லா நகரங்களிலும் எல்லா கிராமங்களிலும் விழிப்புணர்வுடன் இருந்து இந்த வாக்கு திருட்டை பொது மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும், எங்கோ வெளியூரில் தான் வாக்கு திருட்டு நடந்துள்ளது.

    நமது ஊரில் நடக்கவில்லை என நினைக்கக் கூடாது. ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் நமது பூத்துகளை வலிமைப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்க வேண்டும், வருகிற தேர்தல் முக்கியமான தேர்தல் நாம் வெற்றிபெற விழிப்புடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கையெழுத்து இயக்க போராட்டத்தில் அப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொது மக்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.

    போராட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் செலவில் கொட்டாரத்தில் சமுதாய நலக் கூடம் திறக்கப்பட்டது.


    கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை விஜய் வசந்த் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.


    இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய நலக்கூட கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.    

    • கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சியானது 15 வார்டுகளை கொண்டது. இதில் ஆறாவது வார்டு பத்மநாபன்புதூர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து நிதியிலிருந்து பொது கலையரங்கம் கட்டப்பட்டது,

    இந்நிலையில் தற்போது நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறையினர் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கலையரங்கம் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது எனக் கூறி அதை இடிப்பதற்காக முடிவு எடுத்துள்ளனர், மேலும் இந்த தொடர்பாக நீதிமன்றமும் இடிக்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அந்த உத்தரவை அமல்படுத்த இன்று அதிகாரிகள் பத்மநாபன்புதூர் பகுதிக்கு ஜெசிபி எந்திரத்துடன் வந்து இடிக்க முற்பட்டனர்.

     

    இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் திரண்டு இடிக்க விட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் அப்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் தருவதாக தெரிவித்தனர்.

    ஆனால் அதனை ஏற்கமறுத்து ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது நீதிமன்றமே உத்தரவிட்டாலும் மக்களின் விருப்பமில்லாமல் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என வாதிட்டனர். ஊர் மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி அவர்களை தொடர்பு கொண்டு நிலைமை எடுத்து கூறினர்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார், பின்னர் விஜய்வசந்த் எம்பி, நீர்வள துறை செயல் பொறியாளர் (பொறுப்பு) பிரைட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஜய் வசந்த் எம்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வள துறை அதிகாரிகள், நீர் பாசனதுறை தலைவர் ஆகியோருடன் பேசி ஆய்வு செய்து மக்களுக்கு பயன் உள்ள நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
    • தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தார்.

    தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதலமைச்சரை இன்று சந்தித்து உரையாடினர்.

    இந்த சந்திப்பின்போது தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சந்திப்பின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ள காரணத்தால் அண்டை மாவட்டத்தில் இருந்து 4 வழி சாலை பணிகள் மற்றும் ரெயில் இரட்டிப்பு பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தற்போது மண் தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் தேவைகளுக்கும் மண் தேவைபடுகிறது. ஆகவே தட்டுபாடின்றி மண் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும், இயற்கை சீற்றத்திலிருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், குமரி மக்களின் நெடு நாள் கனவான குமரி விமான நிலையம் சாத்தியம் ஆகும் வகையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

    மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் குளங்களை தூர் வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

    • தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
    • தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.

    அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

    பிரசாரத்தில் விஜய் கூறியதாவது:-

    உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.

    அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரையிலான நான்கு வழி சாலை பணிகள் ரூ.1041 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இதுவரை 56% பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த  பணிகள்2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  குமரி மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் TTK கன்ஸ்ட்ரக்ஷன் ஆன்ஸ்ட்ராஜ், நகாய் ரவிச்சந்திரன் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

     

    பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை கூடிய விரைவில் அர்ப்பணிக்க ஆவன செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை, தண்ணீர் வரும் பகுதிகள் அடைக்க படுவதாக மனுக்கள் வந்துள்ளன, விவசாயத்துக்கு எந்த வித இடர்பாடுகள் வராமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    அவருடன் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கிறிஸ்டிரமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான்.
    • தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்.

    நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

     

    கையெழுத்து இயக்கத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி பேசுகையில், உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான், மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்து இருப்பது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க.வினர் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி காண நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பின்படி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்துகள் வாங்கிடவேண்டும் என்றார்.

     

    இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மகேஷ் லாசர், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ், மண்டல தலைவர்கள் சிவபிரபு, ஐரின் சேகர், மகளிரணி சோனிவிதுலா, கவுன்சிலர்கள் சந்தியா, அனுஷாபிரைட் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×