என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை மாநகராட்சி தேர்தல்"

    • மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயும், நானும் சந்தித்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம்.
    • எவ்வளவு காலத்திற்கு மேயர் பதவி என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரசுக்கு 4 மாநகராட்சி கிடைக்கிறது.

    30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க. அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.

    உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், எம்.என்.எஸ்-6 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு-24 இடங்களும் கிடைத்தன. அகில இந்திய மஜ்லிஸ்-8, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-3, சமாஜ்வாடி-2, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-1 இடங்களை கைப்பற்றின.

    பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டால் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க. மேயர் பதவியை பெறும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.க. துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மேயர் பதவி கனவுக்கு ஷிண்டே முட்டுக்கட்டை போடுகிறார்.

    அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தானே மாநகராட்சியில் 75 இடங்களை வென்று பலத்தை நிரூபித்துள்ள ஷிண்டே மும்பையில் சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளார்.

    இது தொடர்பாக ஷிண்டே ஆதரவாளர்கள் கூறும்போது, பா.ஜ.க.விடம் மேயரை நியமிக்க போதுமான இடங்கள் இல்லை. இதனால் அந்த பதவியை பகிர்ந்து அளிக்க வேண்டும். நிலைக்குழு தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய குழு பதவிகளையும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஷிண்டே கட்சியின் கவுன்சிலர்கள் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தங்கள் கட்சியின் கவுன்சிலர்கள் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் ஏக்நாத் ஷிண்டே அவர்களை ஓட்டலில் தங்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கவுன்சிலர்களை இழுப்பது குறித்த தகவல்களை பா.ஜ.க. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயும், நானும் சந்தித்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம். எவ்வளவு காலத்திற்கு மேயர் பதவி என்பது குறித்து முடிவு செய்யப்படும். எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. எல்லாம் சுமூகமாக நடக்கும். நாம் அனைவரும் இணைந்து மும்பையை திறமையாக நிர்வகிப்போம்.

    இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.

    இதற்கிடையே ஆளும் கூட்டணிக்கு சவால் விடுவதற்கு தேவையான பலம் எதிர்கட்சிகளிடம் உள்ளது என்றும், ஆனால் தாங்கள் ஜனநாயகத்தை மதிப்போம் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

    • கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.
    • எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் 30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற "வளமிக்க" துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.

    மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.

    எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறியுள்ளார். 



    • காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
    • அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

    தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக்கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.

    காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.

    மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இங்கியுள்ளது.

    இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

    இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இன்று மதியம் நிலவரப்படி பா.ஜ.க. 58 இடங்கள், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    தாக்கரே சிவசேனா 45 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

    அதேபோல நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது. பா.ஜ.க. 22 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் ஒற்றை இலக்கிலேயே உள்ளன.

    நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க. 73 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    122 வார்டுகளை கொண்ட நாசிக்கில் பா.ஜ.க. 10 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 3 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளன.

    புனேவில் பா.ஜ.க. 48 இடங்கள், அஜித் பவார் என்.சி.பி. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தாக்கரே சிவசேனா 4 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

    தானேவிலும் பா.ஜ.க. கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 இடங்கள், சிவசேனா 20 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    • மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது.
    • தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

    தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலில், 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.

    காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.

    மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இறங்கியுள்ளது.

    இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

    இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 35 இடங்களிலும், சிவசேனா-உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகித்தது.

    மும்பை மாநகராட்சியில் 227 இடங்களில் 60 இடங்களுக்கான முன்னிலை விவரங்கள் தெரியவந்துள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 15 இடங்களிலும், ஷிண்டேவின் கட்சி 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் யு.பி.டி. 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எம்.என்.எஸ். 6 இடங்களிலும், சரத் பவாரின் கட்சி 1 இடத்திலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    151 வார்டுகளை கொண்ட நாக்பூரில் பா.ஜ.க. கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    • காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
    • எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் கிளை சேர்மன் காசிலிங்கம் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆல்பர்ட் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

     

    கடந்த 2 நாட்களாக தாராவி பகுதியில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. விஜய்வசந்த் நேற்று வார்டு 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

    சாலிமார் வாடு பகுதியில் 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலுவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். நிறைவாக எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் ஹோலிவாட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
    • செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்

    மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் கூட்டணியான மஹாயுதி, இன்று தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் அதாவலே, வினோத் தவ்டே, அமீத் சதம், ஆஷிஷ் ஷெலர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

     இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு: 

    • பிஎம்சி மூலம் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடன்கள் வழங்கப்படும்.
    • பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
    • முதியோருக்கான மாத ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
    • மும்பையின் 'பெஸ்ட்' (BEST) பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
    • மும்பையில் உள்ள அனைத்து சாலைகளையும் கான்கிரீட் மயமாக்குவதன் மூலம் பள்ளங்கள் இல்லாத சாலைகள் உறுதி செய்யப்படும்.
    • ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குள் மும்பையை வெள்ள அபாயம் இல்லாத நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
    • செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
    • மும்பையில் உள்ள வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோகிங்கியாக்களை அடையாளம் கண்டு வெளியேற்ற AI கருவி பயன்படுத்தப்படும் மற்றும் அவர்களுக்காகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.
    • குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 30-35 லட்சம் வீடுகள் கட்டப்படும் மற்றும் 20,000 முடக்கப்பட்ட கட்டிடங்களுக்கு ஆக்கிரமிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
    • பிஎம்சி தூய்மைப் பணியாளர்களுக்குச் சொந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
    • பள்ளிக் பாடத்திட்டத்தில் மும்பையின் வரலாறு சேர்க்கப்படும் மற்றும் மராத்தி இளைஞர்களுக்காக 'மும்பை பெலோஷிப்' திட்டம் தொடங்கப்படும்
    • திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஈடுபடும் 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


    ×