search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahayuti"

    • மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
    • மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்

    2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.

    2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.

    ×