என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தவ் தாக்கரே"

    • எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்
    • அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனகோண்டா பாம்பு என்று விமர்சித்துள்ளார்.

    மும்பையில் புதிதாக பாஜக அலுவகம் அமைக்க சட்டவிரோதமாக நிலம் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் மும்பையின் வோர்லியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய தாக்கரே, "புதிய பாஜக அலுவலகம் அமைக்க மின்னல் வேகத்தில் நிலத்தைக் கைப்பற்றப்பட்டது.

    அனகோண்டா தன் பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்குவது போல, இவர்கள் மும்பையையும் முழுமையாக விழுங்க நினைக்கிறார்கள்" என்று அமித் ஷாவையும், பாஜகவையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

    மேலும் பாஜக தலைவர்களை ஆப்கானியப் படையெடுப்பாளரான அஹமது ஷா அப்தாலியுடன் ஒப்பிட்ட தாக்கரே, "உண்மையான அப்தாலிகள் மீண்டும் வந்துள்ளனர்.

    இந்த முறை அவர்கள் டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்" என்று எச்சரித்தார்.

    அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.  

    • ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது.
    • மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அது விசாரணையை சந்திக்க வேண்டும்.

    பாஜக தன்னிறைவு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பாஜக இன்னும் தன்னிறைவு பெறவில்லை. ஏனென்றால், அது கட்சிகளை பிரித்து வாக்குகளை திருடிக் கொண்டிருக்கிறது. பாஜக தன்னைத்தானே தேசபக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிக் கும்பல். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும்வரை, மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநில வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
    • டெல்லியில் இன்று எம்.பி.க்கள் பேரணி மேற்கொண்டபோது, தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் பீகார் மாநில SIR-ஐ கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில், பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், உலகம் ஜனநாயகத்தின் படுகொலையை கண்டுள்ளது உன சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் அரசு ஏன் தலையீடு செய்கிறது என்பதற்கு, இது தற்போதைய சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிராவின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான உத்தவ் தாக்கரேவின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
    • கூட்டாட்சி மற்றும் மொழியியல் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமைக்கு வாழ்த்துகள்.

    சிவசேனா கட்சி நிறுவனரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மகாராஷ்டிராவின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான உத்தவ் தாக்கரேவின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

    கூட்டாட்சி மற்றும் மொழியியல் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமைக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2019ஆம் ஆண்டு பாஜக உடனான கூட்டணியை உத்தவ் தாக்கரே முறித்துக் கொண்டார்.
    • காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்

    மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறைமுகமாக உத்தவ் தாக்கரேவை பச்சோந்தி என கடுமையாக விமர்சித்தார்.

    இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    2019 தேர்தலின்போது பாஜக மற்றும் பிரிக்கப்படாத சிவசேனா மெஜாரிட்டியை தக்கவைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரேவுக்கு 40 முதல் 50 முறை பட்நாவிஸ் போன் செய்தார். ஆனால் பாஜக தலைவரின் போனை அவர் (உத்தவ் தாக்கரே) எடுக்கவில்லை.

    பச்சோந்தியை போன்று விரைவாக கலரை மாற்றிக் கொள்ளும் நபரை இதுவரை மகாராஷ்டிரா பார்த்ததில்லை. அவர் யாரை குறைவாக நினைத்தாரோ, அவர்களுடன் சென்றுவிட்டார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததை சுட்டிக் காட்டினார்.

    2017 உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 84 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 82 இடங்களில் வெற்றி பெற்றது. எனது வேண்டுகோளை ஏற்று பட்நாவிஸ் மும்பை மேயர் பதவியை தர ஒப்புக்கொண்டார். 2019-ல் கூட்டணியில் இருந்து வெளியேறி பட்நாவிஸ்க்கு துரோகம் செய்தார்.

    சிவசேனாவில் இருந்து பிரிந்து உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான எம்.எல்.ஏ.-க்களுடன் இருந்தபோது, டெல்லி பாஜக தலைவர்களுக்கு போன் செய்து, ஏக்நாத் ஷிண்டே பிரிவை ஆதரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ், ஆளுங்கட்சி பக்கம் வருமாறு உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் பட்நாவிஸை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். அதன்பிறகு உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    • உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பைப் பற்றி சிந்திக்கலாம்
    • மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை "பாஜக பாதுகாப்பு மசோதா" என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் (மகா விகாஸ் அகாடி) உள்ள சிவசேனா பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை ஆளும் பாஜக (மகாயுதி) கூட்டணியில் இணையுமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அழைப்பு விடுத்துள்ளார்.

    நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய பட்னாவிஸ், 2029 வரை தங்கள் அரசு எதிர்க்கட்சியாக மாறும் வாய்ப்பே இல்லை என்றும் உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பைப் பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறினார்.

    முன்னதாக, மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை "பாஜக பாதுகாப்பு மசோதா" என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.

    இந்த மசோதா சாதாரண குடிமக்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசுக்கு உரிமை வழங்கும் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    முன்னதாக தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகம் செய்தது.

    இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் போராட்டம் நடத்தினர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உத்தரவை பட்நாவிஸ் அரசு திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
    • மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின்கீழ் , மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை 3-வது கட்டாய மொழியாக மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.

    தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இணைந்து மும்பையில் நேற்று வெற்றி பேரணி நடத்தினர்.

    மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.

    இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?

    தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் இந்தியை திணிக்க  முயற்சி செய்து பாருங்கள்!. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார். 

    • நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.
    • குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

    இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.

    இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார். 

    • 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
    • இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது?

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

    இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.

    இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தானுக்கு மூன்றாவது மொழி என்ன? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். இந்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஏன் உதவவில்லை.

    இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது? 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஆனாலும், நாம் இந்தி கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஏன்?.

    மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
    • எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பாஜக அரசு பணிந்தது.

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

    இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.

    சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.

    இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.

    • தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
    • இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.

    இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    வரும் ஜூலை 5 ஆம் தேதி, கிர்கான் சௌபட்டியில் இருந்து ஆசாத் மைதானம் வரை நடைபெறும் பேரணியில் இருவரும் பங்கேற்பார்கள்.

    இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜும் உத்தவும் இணைகிறார்கள். சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாநிலத்திற்காக கைகோர்ப்பதாக அண்மையில் சூசகமாக தெரிவித்தனர்.

    இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.

    • நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல.
    • அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியில் உள்ள அஜித் பவார் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சி செய்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல. அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாஜக மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஆளும்கட்சி மொழி எமர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    ×