என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் - ராஜ் தாக்கரே
    X

    மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் - ராஜ் தாக்கரே

    • நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.
    • குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

    இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.

    இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.

    Next Story
    ×