search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raj Thackeray"

    • ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
    • உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை

    மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.

    இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.

    இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.

    • அந்தேரி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது.
    • இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

    மும்பை:

    அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என பா.ஜ.க. துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.

    இதற்கிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    • அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    மும்பை:

    ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடாது. எனவே நீங்களும் இடைத்தேர்தலில் ருதுஜா லட்கேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ரமேஷ் லட்கேவின் அரசியல் பயணம், வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
    • சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை :

    ராஜ் தாக்கரேயை அவரது வீட்டுக்கு சென்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.

    • நுபுர் சர்மாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
    • ஓவைசி மன்னிப்பு கேட்கும்படி யாரும் கேட்கவில்லை.

    மும்பை:

    தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுவெளியில் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக தற்போது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே களம் இறங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது

    (முகமது நபிகள்) குறித்து நுபுர் சர்மா பேசியபோது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அக்பரூதீன் ஓவைசி (இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர்) அவரது சகோதரர் ஜாகிர் நாயக். ஜாகிர் நாயக்கின் பேட்டியை யாரும் பார்க்கலாம், அவரும் அதையே சொன்னார். ஆனால் யாரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.

    இந்து கடவுள்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர்கள் மீது இந்திய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? . அந்த இரண்டு ஓவைசி சகோதரர்கள் நமது (இந்து) கடவுள்களைப் பற்றி இழிவாக பேசுகிறார்கள், மேலும் நமது கடவுள்களுக்கு மோசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். நமது கடவுள்கள் கேவலமானவர்களா? இதற்கு மன்னிப்பு கேட்கும்படி யாரும் அவரிடம் யாரும் கேட்கப் போவதில்லை. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

    உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மந்திரிகள் மீது வெங்காயத்தை வீசுங்கள் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். #RajThackeray
    மும்பை :

    மராட்டியத்தில் விலை வீழ்ச்சியால் வெங்காய விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் விவசாயி ஒருவர் வெங்காயம் விற்றதில் குறைவான பணம் கிடைத்ததால், அந்த பணத்தை அப்படியே பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

    இந்த நிலையில் வெங்காயம் அதிகம் விளையும் நாசிக் மாவட்டத்தில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள கல்வான் பகுதியில் வெங்காய விவசாயிகள் மத்தியில் அவர் பேசுகையில், உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மந்திரிகள் மீது வெங்காயத்தை வீசுங்கள் என்று கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajThackeray
    ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். #RamTemple #RajThackeray #Riot #BJP
    மும்பை:

    மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

    எனக்கு டெல்லியில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக போனில் பேசியவர் என்னிடம் தெரிவித்தார். மஜ்லிஸ் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி துணையுடன் இந்த வன் முறையை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இதை நான் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதுகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 4½ ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவர்களுக்கு மதகலவரத்தை தூண்டுவதை தவிர வேறு வழியில்லை.

    ராமர்கோவில் கட்ட நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கோவில் கட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகு கோவில் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. #RamTemple #RajThackeray #Riot #BJP

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்புவதற்காகவே இது போன்ற மீடூ புகார்கள் வருகின்றன என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறி உள்ளார். #RajThackeray #metoo
    மும்பை:

    நானா படேகர் ஒரு அநாகரிகமான பேர்வழி என்றாலும், நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டியது போல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.

    2008ஆம் ஆண்டில் ஹார்ன் ஓகே பிளீஸ் (('Horn OK Pleassss')) என்ற படப்பிடிப்பின்போது, நடிகர் நானா படேகர், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த நானா படேகர், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் மூலம் தம்மை துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், அமராவதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, நடிகர் நானா படேகர் அநாகரிகமான பேர்வழி என்றும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்யக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார்.

    ஆனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பார் என தாம் கருதவில்லை என்றும், இத்தகைய மீடூ புகார்கள் எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக செய்யப்படுகிறது என்றும் ராஜ்தாக்கரே கூறினார். #RajThackeray #metoo #petroldieselpricehike
    ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார். #RajThackeray #election
    மும்பை :

    நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

    இந்த நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குறி எழுந்தது.

    பல தொகுதிகளில் எனது கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்களும் தீவிரமாக உழைத்தனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. சில தொகுதிகளில் எங்களது வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியமாகும்?



    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற முன்னேறிய நாடுகள் தற்போதும் ஓட்டுச்சீட்டு முறையை தான் கடைப்பிடிக்கின்றன.

    இந்தியா, நைஜீரியா, வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துகின்றன. இந்த முரண்பாடான முறையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

    இதுகுறித்து அரசியல் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்தவில்லை என்றால், நாம் ஜனநாயக நாடு என்ற பெருமையை இழக்க நேரிடும்.

    எனவே பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும் அல்லது வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு அளிக்கும் எந்திரத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajThackeray #election
    முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை விமர்சித்த ராஜ் தாக்கரேவுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நவ்நிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தொழுகை நடத்த விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ளட்டும் எனவும் ராஜ் தாக்ரே கூறியிருந்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஃபரூக்கி, முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் உபயோகிப்பதை தவறு என நினைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் சடங்குகளையும் அவர் தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



    இந்த நிலையில், ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ராஜ் தாக்கரேவின் இந்த கருத்து முற்றிலும் அரசியல் நோக்கமுடையது என விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில்  முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் சிவசேனாவுடன் போட்டி போடுவதை வெளிக்காட்டவே ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    ×