என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதித்யா தாக்கரே"

    • மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்தவர்களில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
    • ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்தபோது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.

    படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் விபத்துக்கு மத்திய ரெயில் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    ரெயில் மந்திரி (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் மந்திரியாகியுள்ளார். கடந்த 2 முதல் 3 வருடங்களாக பயங்கரமான பல ரெயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவொரு பொறுப்பையும் ஏற்ப ஒருவர் கூட முன்வரவில்லை. ரெயில்வே துறை மற்றும் ரெயில்வே அமைச்சர் மட்டுமு இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு. இந்திய மக்கள் ரெயில் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் பல முறை வற்புறத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை கடந்து செல்கிறார்.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் என கடிதம்.
    • பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது.

    ஜூன் 7ஆம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விளைபொருள் சந்தை குழுக்களிடம், கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும், பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது. கொலை செய்தல், அவற்றை கொண்டு செல்லுதல், விற்பனை மற்றும் கொள்முதல் செய்தல், சேமித்து வைப்பது சட்ட விரோதமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, அரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பது. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "இதை சேமிக்க அல்லது அதை சேமிக்க ஏன் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் பண்டிகையை கொண்டாடுறீங்க. நான் ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர். தண்ணீர் அல்லது பசுமையை சேமிக்க எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். இது அரசு வேலையை கிடையாது. தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றுவதுதான் அரசுடைய வேலை.

    தண்ணீர் வீட்டிற்குள் புகுந்தால், அதன்பின் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என விசாரிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதுதான் அரசாங்கத்தின் வேலை. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது அல்ல.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மும்பையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அணை கட்ட பரிந்துரை.
    • அணை கட்டுவதற்காக 4 லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மும்பைக்கு குடிநீர் வழங்கும் வகையில் கார்காய் அணை கடட பரிந்துரை வழங்கப்பட்டு்ளது. இதற்கான லட்சணக்கான மரங்கள் வெட்ட பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக பாலைவனமாக்க விரும்புகிறது என அதித்யா தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    இந்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை இதற்கு முன்பாக ஒருபோதும் பார்த்ததில்லை. மாநிலம் முழுவரும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது.

    மாமநில வனவிலங்கு வாரியம் லட்சகணக்கான மரங்களை வெட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தானே மற்றும ்பல்கார் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டள்ளது. மும்பைக்கு குடிநீ்ர் வழங்க கார்காய் அணை கட்டுவதற்கான இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மகாராஷ்டிராவை பாலைவனமாக்க விரும்புகிறது.

    தேவைப்பட்டால் சிவசேனா (UBT) மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர், ஜனாதிபதியை இந்த திட்டத்திற்கு எதிராக அணுகும்.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

    மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் (2019 முதல் 2022 வரை) இருக்கும்போது கர்காய் அணை திட்டத்தை கைவிட்டது.

    • மகாராஷ்டிராவின் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார்.
    • ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் மகாராஷ்டிரா சென்றார்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்கிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சிவசேனா தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.

    • அஜிப் பவார் உடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியமைக்க திட்டம்
    • ஏக்நாத் ஷிண்டேவை ராஜினாமா செய்யச் சொன்னதாக தகவல்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அஜித் பவார் தனது கூட்டாளிகளுடன் பிரிந்து சென்று மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தனர். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்ததில் இருந்து மூன்று கட்சிகளில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    1. தேசியவாத காங்கிரஸ் கட்சி

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு சரத் பவார்- அஜித் பவார் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. டெல்லியில சரத் பவார் செயற்குழு கூட்டத்தை கூட்டியதுடன், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

    அஜித் பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார். அதில் தனக்கு அதிக அளவில் கட்சி தலைவர்கள், கட்சி எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது

    2. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா

    முதலமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அஜித் பவார் கட்சியுடன் கைக்கோர்த்தது சிவசேனாவில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்களுக்கு பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் சித்தாந்தம். பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து சிந்தித்தது கிடையாது என்பதுதான்.

    மேலும், ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என கருத்து வெளிப்பட்டதாகவும், அவர் ராஜினாமா செய்ய முன்னவந்ததாகவும் தகவல் வெளியானது. பின்னர் ஷிண்டே ராஜினாமா செய்யமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

    3. பா.ஜனதா

    பா.ஜனதா கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் உடன் இணைவது அந்தக்கட்சியில் உள்ளவர்களுக்கும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித் பவார் உடன் இணைந்து ஷிண்டேவை ஓரங்கட்ட பா.ஜனதா நினைத்துள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா தாக்கரே ''பா.ஜனதா ஏக்நாத் ஷிண்டு குரூப்பை ஓரங்கட்டுகிறது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் குரூப் உடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷிண்டே ராஜினாமா செய்ய கேட்கப்பட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிர மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது'' என்றார்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்ச் ராவத் ''அஜித் பவார் அரசில் இணைந்தது பிடிக்கவில்லை என்பதால் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் சுமார் 18 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • அஜித் பவார் தலைமையிலான அணிதான் தேசியவாத காங்கிரஸ் என அங்கீகரிக்கப்பட்டது.
    • கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் அதிகாரமும் அஜித் பவார் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்களை பிரித்துக் கொண்டு சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் ஏக் நாத் ஷிண்டேவின் ஆட்சியில் இணைந்து அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    சரத் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். அதேவேளையில் அஜித் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். இதனால் இரு தரப்பிலும் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையையும் வழங்கியது.

    இது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மகனும், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "தேர்தல் ஆணையம் தானாகவே திருட்டை சட்டப்பூர்வமாக்கத் தொடங்கும்போது, ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் மோசடி செய்தது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. அது தேர்தல் ஆணையம் அல்ல. "முற்றிலும் சமரசம் (Entirely Compromised)". நாங்கள் சுதந்திரமானவர்கள் அல்ல, நியாயமான ஜனநாயகம் இல்லை என்பதை அனைவருக்கும் அவர்கள் காட்டுகிறார்கள்" என்றார்.

    முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பிரிந்து சென்று நாங்கள்தான் சிவசேனா கட்சி எனத் தெரிவித்தது. அத்துடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவை தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், உத்தவ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 66 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கப்படுகிறார்.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் குரு ஆனந்த் திகே என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.
    • மக்களவை தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் வொர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து எம்.பி.யான மிலிந்த் தியோராவை களம் இறக்கியுள்ளது. மிலிந்த் தியோரா மாநிலங்களவை எம்.பி. ஆவார்.

    மலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார்.

    தற்போதைய எம்.எல்.ஏ.வான ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக மிலிந்த் தியோரா நிறுத்தப்பட்டுள்ளதால் வொர்லி தொகுதி மிகவும் போட்டிவாய்ந்த வி.ஐ.பி. தொகுதியாக மாறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா நேற்று 20 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

    பா.ஜ.க. கட்சியின் மாநிலங்களவை எம்.பி. நாராயன் ரானேயின் மகன் நிலேஷ் ரானே கூடல் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது இளைய சகோதரரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நிதேஷே் ரானே கன்கவாளி தொகுதியில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

    • வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார்.
    • ஆதித்யா தாக்கரே 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 229 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 49 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

    காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்ததையொட்டி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது.

    இந்த தேர்தலில் வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார். ஆரம்பத்தில் சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிந்த் முர்ளி தியோராவிடம் பின்னடைவை சந்தித்த ஆதித்யா அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் முன்னிலை பெற்று இறுதியாக 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்
    • அவர்கள் [ஷிண்டே - பாட்னாவிஸ் - அஜித் பவார் தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர்

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 இல் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. ஆனாலும் அடுத்த முதல்வரை தேர்வு செய்து ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஷிண்டே விட்டுக்கொடுத்த நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்பு என்றும் நரேந்திர மோடி வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக கட்சித் தலைவர் சந்திரசேகர் பவான்குலே எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் முதல்வர் இப்பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே பொறுப்பளாராக நீடிக்கிறார்.

     

    இந்த நிலையில்தான் முடிவு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் வரை ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகிறது, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை... என்ன நடக்கிறது? டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர்   அறிவிக்கிறார். அவர் என்ன ஆளுநரா?... இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு முதல்வரைத் தீர்மானிக்க முடியாததும், அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்பதும் மகாராஷ்டிராவை அவமதிப்பு மட்டுமல்ல, அவர்களின் அன்பான தேர்தல் ஆணையம் வழங்கிய உதவியையும் கூட அவமதிக்கிறது [கிண்டலாக]. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும், சில சிறப்புக் கட்சிகளுக்கு விதிகள் பொருந்தாது.

    ஆட்சி அமைக்க உரிமை கோராமல், ஆளுநரிடம் எதையும் காட்டாமல், ஒருதலைப்பட்சமாக பதவிப் பிரமாண தேதியை அறிவிப்பது, அராஜகமாகும். இதற்கு மத்தியில் நமது காபந்து முதல்வர் [ஷிண்டே] ஒரு மினி விடுமுறையில் [சொந்த கிராமத்தில்] இருக்கிறார், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று தெரிகிறது. அவர்கள் [மகாயுதி தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர். இந்நேரம் இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம்.
    • நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை சந்தித்தது. இதில் கெஜ்ரிவால் கட்சியால் 22 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் 10 வருடத்திற்கு மேலாக டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் அரசு முடிவுக்கு வந்துள்ளது.

    இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது.

    அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டு பேசிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில்தான் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே இன்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

    இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    அரசுகள் வரும் போகும். ஆனால் உறவுகள் தொடரும். நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை. அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

    ஆதித்யா தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது டெலலி தேர்தல் மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அரிவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ராகுல் காந்தியையும் ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார்.

    ×