என் மலர்
நீங்கள் தேடியது "cm devendra fadnavis"
- அண்ணாமலை டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர்.
- மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா?
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இதனையடுத்து அண்ணாமலைக்கு எதிராக பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் கருத்து மகாராஷ்டிராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "அண்ணாமலைக்கு சரியாக இந்தி பேச வராது. அவரின் கருத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம். அதேபோல அண்ணாமலை மகாராஷ்டிராவை சேர்ந்தவரும் அல்ல. அவர் பாஜகவின் தேசிய தலைவரும் அல்ல. ஆகவே அவருடைய கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதம் செய்யாதீர்கள்" என்று தெரிவித்தார்.
- அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
- எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் நேற்று முன் தினம் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பதிலும் உடற்தகுதி சான்று கொடுப்பதிலும் பெண் மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்ததை காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், உதவி ஆய்வாளர் கோபால், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் உறுதி செய்துள்ளனர். பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்தின் பின் தலைமறைவாகியுள்ள கோபால் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.









