என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eknath Shinde"
- மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
- மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்
2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.
2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.
- மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன
- மகாராஷ்டிரா மாநில அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட இருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளை நான் கழுகுகள் என்று அழைக்கமாட்டேன். ஆனால், காட்டில் சிங்கத்திற்கு எதிராக செம்மறி மற்றும் ஆடுகள் ஒன்றிணைந்து சண்டையிட முடியாது. சிங்கம் எப்போதும் சிங்கம்தான். அது காட்டில் ஆளும் மன்னராக திகழும்.
பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் போரிட முடியும் என்று நான் பார்க்கவில்லை. அஜித் பவார் எங்களுடன் இணைந்த பிறகு, எம்.எல்.ஏ. ஆதரவு 215 அதிகரிகத்துள்ளது. மாநில அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா பெயர் வைத்ததற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதாவினர், மற்றும் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியா நாட்டின் பெயரை பாரத் என மாற்ற திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை இடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. உ.பி.க்கு அடுத்தபடியாக மக்களவை தொகுதிகளை அதிக அளவில் கொண்ட பெரிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் பாராட்டுகளை பெறுகிறார்.
- எங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர்.
நாசிக் :
மகாராஷ்டிரா அரசு 'ஷாசன் அப்லியா தாரி'(உங்கள் வீட்டு வாசலை தேடி அரசு) என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஒன்றை சாளர முறையின் கீழ் தேவையான ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் பலன்களை ஒரே இடத்தில் பெற முடியும்.
நாசிக்கில் 'ஷாசன் அப்லியா தாரி திட்டத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பேசியதாவது:-
மகாராஷ்டிராவில் எங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர். இருப்பினும் யாருக்கும் பாரபட்சமோ அல்லது அநீதியோ இழைக்கப்படாது.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைய முயன்றாலும், அவர்களால் ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. இது பிரதமர் மோடியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
அஜித்பவாரும் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் பாராட்டுகளை பெறுகிறார். அமெரிக்க பாராளுமன்றத்தில் 2 முறை உரையாற்றும் வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்தது. சமீபத்தில் பிரான்சின் உயரிய கவுரவ விருதுஅவருக்கு வழங்கப்பட்டது.
தேசியவாத காங்கிஸ் கட்சி தலைவர் அஜித்பவார் ஆளும் அரசில் இணைந்ததன் மூலம், மாநில அரசு மேலும் வேகமாக செயல்பட தொடங்கி உள்ளது. முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகிறது.
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எனது நல்ல நண்பர் மற்றும் பெரிய இதயம் படைத்தவர். அவர் முன்பு முதல்-மந்திரியாக இருந்தார். நாங்கள் இணைந்து வேலை செய்தோம். தற்போது அவர் துணை முதல்-மந்திரியாகவும், நான் முதல்-மந்திரியாகவும் இருக்கிறேன். இந்த நிலையில் அவர் மற்றொரு துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவரை சிலர் களங்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் ஒரு களங்கமற்ற தூய்மையான அரசியல்வாதி.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமீபத்தில் தேவேந்திர பட்னாவிசை நாக்பூரின் களங்கம் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
- எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.
- மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.
மும்பை :
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் இணைந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிர வைத்தனர். தற்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே- பட்னாவிஸ்- அஜித்பவார் ஆகியோரை கொண்டே 3 கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.
ஆட்சியில் அஜித்பவார் இணைந்தது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்பவார் வருகையால் தங்களுக்கு கிடைக்க இருந்த முக்கிய இலாகா, மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற கலக்கம் அவர்கள் இடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்பவாரின் அதிரடி வருகை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பதவியை ஆட்டம் காண வைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.
இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கடந்த புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தனது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.
இதற்கு மத்தியில் மந்திரி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த சிவசேனாவை சேர்ந்த 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தவறு செய்ததை உணர்ந்து உத்தவ் தாக்கரேவுடன் பேசி வருவதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் விநாயக் ராவத் அணுகுண்டை தூக்கி போட்டுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்-மந்திரியின் 'வர்ஷா' பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு நடந்தது. இதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக சிவசேனா தரப்பு கவலைகளை தேவேந்திர பட்னாவிசிடம் முதல்-மந்திரி ஷிண்டே விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர்களின் சந்திப்பு பின்னணியில் வேறு தடாலடி விஷயங்கள் எதுவும் இருக்குமா? என்ற பரபரப்பும் எகிறி உள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. நான் பதற்றத்தில் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எனது தலைமையிலான சிவசேனாவும், பா.ஜனதாவும் சித்தாந்தத்தால் ஒன்றுப்பட்டது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்-மந்திரியாக்கினர். தற்போது எங்களது அரசில் அஜித்பவார் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலமடைந்து உள்ளோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம். மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.
சரத்பவார் 1978-ம் ஆண்டு வசந்த்ததா பாட்டீல் ஆட்சியை கவிழ்த்து முதல்-மந்திரி ஆனார். 1999-ம் ஆண்டு காங்கிரசில் பிளவை ஏற்படுத்தினார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முயன்ற சரத்பவார், பின்னர் 'யு-டர்ன்' அடித்ததாக அஜித்பவாரே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித் பவாரை அரசில் இணைத்துக் கொண்டதால் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
- ஏக்நாத் ஷிண்டேதான் தொடர்ந்து முதல்வராக இருப்பார் அக்கட்சி தலைவர்கள் உறுதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது.
முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக முடிவுக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசோன கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தன.
திடீரென கடந்த வரும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அஜித் பவார் அமைச்சரவையில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி இருந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கொடி பிடித்தனர்.
பால் தாக்கரே சித்தாந்தம் வேறு. தேசியவாத காங்கிரஸ் சித்தாந்ததம் வேறு. ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செல்ல வேண்டும் என பால் தாக்கரே நினைத்தது கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது கட்சியான சிவசேனா எப்படி அஜித் பவார் உடன் இணைந்து செயலாற்ற முடியும்? என்ற கேள்வியை எழுப்பினர்.
இதற்கிடையே ஒருநாள் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அஜித் பவார் கூறியிருந்தார். மேலும், அஜித் பவார் கட்சி எம.எல்.ஏ.-க்களுக்கு மந்திரி பதவி கொடுக்கும் நிலையில், தங்களது நிலை என்னவாகும் என்பதாலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக இருக்க ஆதரவு தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநில மந்திரி ஷம்புராஜ் தேசாய் ''முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.

எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.
மற்றொரு மந்திரி உதய் சமந்த் ''வர்ஷா பங்களாவில் ஏக்நாத் ஷிண்டே உடன் சிவசேனா தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது, எப்படி பணிகளை முடிக்கி விடுவது, அமைப்புகளை எப்படி வளர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்படடது.
யார் வருகையாலும் (அஜித் பவார் குரூப் வருகை) சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மகிழ்ச்சியில்லாமல் இல்லை. ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே ராஜினிமா என்ற செய்து வதந்திகள். எம்.எல்.ஏ.- எம்.பி. தேர்தலை ஷிண்டே தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்'' என்றார்.
மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே ''ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக செயல்படுவார். அவர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்'' என்றார்.
- அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தி.
- சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்.
மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.
மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, முதல்வர் இன்று அவரது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு தனது இல்லத்தில் அவசர கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- சரத் பவார் கிரிக்கெட்டுடன் தொடர்பு உள்ளவர் என்பதால் கூக்லி குறித்து பேசுவார்
- தற்போது அஜித் பவார் வெளியேறியதை ஹிட்விக்கெட் என ஷிண்டே தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிர மாநில அரசியலில் நேற்று திடீர் கலகம் ஒன்று ஏற்பட்டது. சரத் பவாரின் தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அஜித் பவார், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் தன்னுடன் இருப்பதாகவும், இனிமேல் நாங்கள்தான் தேசிவாத காங்கிரஸ் என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
அரசியல் அனுபவத்தில் இந்தியாவின் தலைசிறந்தவரான சரத் பவாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் மூக்கின்மேல் கைவைத்துள்ளனர்.
அரசியலில் எந்தவொரு சூழ்நிலையிலும் தெளிவான முடிவை எடுக்கக் கூடியவர் சரத் பவார். இவருக்கும் கிரிக்கெட்டிற்கும் அதிக தொடர்பு உண்டு. இவரது மாமனார் சுழற்பந்து பந்து வீச்சாளர். கூக்லி பந்து வீசுவதில் தலைசிறந்தவர். சரத் பவாரும் ஐசிசி தலைவராக இருந்துள்ளார்.
இதனால் அரசியல் முடிவு எடுக்கப்படும்போது, எந்தநேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதை, கூக்லி பந்தை எப்போது வீச வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்பார்.
2019-ம் ஆண்டு இதேபோன்று அஜித் பவார் கலகத்தை ஏற்படுத்தும்போது, துரிதமாக செயல்பட்டு அதை முறியடித்தார். அப்போது அஜித் பவாரை நம்பி ஏமாந்த பட்நாவிஸ், தங்களுடன் கூட்டணி வைக்க சரத் பவார் சம்மதம் தெரிவித்தார். அந்த நிலையில் எப்போது 'கூக்லி' பந்து வீசுவது என்பது எனக்குத் தெரியும்.
நேற்றைய விவகாரத்திற்குப்பின் சரத் பவாருக்கு உரித்த பாணியில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார்.
ஏக் நாத் ஷிண்டே கூறுகையில் ''இது புதிய அரசு அல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சிவசேனா- பாஜனதா அமைத்த அரசு செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன. அஜித் பவார் அதனை நம்பியுள்ளார். அதன்காரணமாக எங்களுக்கு ஆதரவு அளித்து, அரசுடன் இணைந்துள்ளார்.
பரந்த மனதுடன் அவரையும், அவருடைய எம்.எல்.ஏ.க்களையும் வரவேற்கிறேன். அவருடனான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். இரண்டு என்ஜின் அரசு, புல்லட் ரெயில் வேகத்தில் இயங்கும். எம்.வி.ஏ. அரசு உடைந்து விட்டது. சிலர் கூக்லி, க்ளீன் போல்டு குறித்து பேசி வருகிறார்கள். ஆனால், க்ளீன் போல்டு... அதுவும் ஹிட் விக்கெட் என்பதை எல்லோரும் பார்த்து இருப்பார்கள்'' என்றார்.
- அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
- அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
பின்னர் அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும்" என்றார்.
- மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது
- பா.ஜனதா ஆதரவு இல்லாமல் ஷிண்டேவால் முதல்வராக நீடிக்க முடியாது
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை கைப்பற்றி, பா.ஜனதா துணையுடன் ஏக்நாக் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அவருடைய கட்சியனருக்கும் உத்தவ் தாக்கரே கட்சியினருக்கு இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.
பா.ஜனதாவின் பட்நாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சலசலப்பு ஏற்படும் என உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் நான்கு முக்கிய மந்திரிகளை நீக்குமாறு ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டதாக ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ''மந்திரிசபை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளார். விரிவாக்கம் அதன்படி நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கியமான நான்கு மந்திரிகளை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷிண்டேவின் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறுகையில் ''மற்றவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்'' என குறிப்பிட்டார்.
ஒருவேளை முக்கிய மந்திரிகள் நீக்கப்பட்டால் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பாஜனதா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி பிடித்தது. என்றாலும், முதல் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம் பிடித்ததால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சியை கைப்பற்றி முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.