என் மலர்
நீங்கள் தேடியது "கொலை மிரட்டல்"
- நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசியிருந்தார்.
- 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன்.
இவர் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசிய தை கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த புகாரில் கைதில் இருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார்.
- இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெஹ்ரான்:
ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி.
இவர் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருவதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
- இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக சிராக் பஸ்வான் அறிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
கடந்த வாரம் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான், 'வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்' என தெரிவித்தார்.
லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதால், சிராக் பஸ்வானின் இந்த அறிவிப்பு பீகாரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
- அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
- சூரிய குளியல் மீது எனக்கு ஆர்வம் ஏதுமில்லை என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். இது மிகவும் எளிமையானது என தெரிவித்தார்.
ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிரம்ப் பதிலளிக்கையில், உண்மையில் அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன்மீது ஆர்வம் ஏதுமில்லை என கிண்டலாக தெரிவித்தார்.
- மன அழுத்தத்தில் இருந்த நிஷாத், நடந்தவற்றை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
- பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர்.
மேகாலயாவில் நடைபெற்ற தேனிலவு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தார். இதில் தொடர்புடைய கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதேபோன்று ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, மணப்பெண்கள் பற்றிய விவரங்களை கண்டறிவதற்காக மணமகன் குடும்பத்தினர்கள் துப்பறியும் நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாக துப்பறியும் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மனைவி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த நிஷாத் என்பவருக்கும் சித்தாரா என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்புக்கு அடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் சென்ற அறைக்கு நிஷாத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சித்தாரா, முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். மேலும் அன்று இரவு முழுவதும் சித்தாரா கத்தியுடன் படுக்கையில் இருந்ததாகவும், அதிர்ச்சியில் உறைந்த நிஷாத் இரவு முழுவதும் உயிருக்கு பயந்து தூங்கவில்லை. இது தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்துள்ளது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிஷாத், நடந்தவற்றை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சித்தாரா மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது சித்தாரா, பெற்றோர் வற்புறுத்தியதால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர். இருப்பினும் சித்தாரா, நிஷாத் வீட்டில் இருந்து சுவர்ஏறி குதித்து ஓடியுள்ளார். இதனால் நிஷாத் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நிஷாத் கூறுகையில், நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டால், அது திருமணத்தின் அர்த்தத்தை உண்மையிலேயே புரிந்து கொண்ட ஒருவராக இருக்க வேண்டும். சித்தாரா என்னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் என் உயிருக்கு பயந்தேன். அவள் திரும்பி வந்தால், நான் அவளுடன் மீண்டும் வாழ முடியாது என்று நினைக்கிறேன். அந்த பயம் இன்னும் நீங்கவில்லை என்றார்.
- போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பை அடுத்து, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
- திருமணப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், உ.பி. காசியாபாத்தில் ஒரு நபரை சிறப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
கடந்த வியாழன் இரவு காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பை அடுத்து, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
குடிபோதையில் மிரட்டல் விடுத்த அந்த சட்டப் பட்டதாரி (LLB) எனத் தெரியவந்தது. திருமணப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதல்வர் ரேகா குப்தாவின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.
- நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
கோவை:
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.
இவர் குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இவரது வீட்டிற்கு காளப்பட்டி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரித்து பார்த்தார். அதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கடிதத்தில், ஜூலை 30-ந் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிப்பு நடத்த உள்ளோம். நாங்கள் உங்களை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒரு பையில் வைத்து, 25-ந் தேதி 2 மணி முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி-வெள்ளானைப்பட்டி ரோடு கலியபெருமாள் குட்டை அருகே உள்ள குப்பை மேட்டில் வைக்க வேண்டும்.
நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லையென்றால், 3 மாதத்துக்குள் உங்களையும், உங்கள் குடும்பத்தில் 3 பேரையும் கொல்வோம். இது வெறும் குறுஞ்செய்தி அல்ல. எச்சரிக்கை எனவும் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் அ.தி.மு.க வக்கீல் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.
எனவே முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜூலை 30-ந்தேதிக்கள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.
- காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் ரூ. 1 கோடி கேட்டு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தில்,
* ஜூலை 30-ந்தேதிக்குள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.
* காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.
* இமெயில் ஐ.டி.யில் ஒரு ரகசிய குறியீடு வரும், அந்த குறியீட்டை பகிர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கடிதத்தின் பின்பக்கம் கூகுள் மேப் வரைபடம், drop the bad hear என்று எழுதப்பட்டுள்ளது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
- முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முகமது சமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக முகமது சமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொலை மிரட்டல் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார்.
- நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம்.
- விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என கொலை மிரட்டல்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் காவல் நிலையத்தில் கம்பீர் அளித்துள்ளார்.
- கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் புகார் அளித்துள்ளார்.
'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






